வாட்டர்மார்க்குகளைச் சேர்த்தல் மாற்றுதல் நீக்குதல்

எழுத்துகள் அல்லது படத்தை வாட்டர்மார்க்காகச் சேர்க்கலாம். ஆவணத்தில் உள்ள வார்த்தைகளுக்குப் பின்புறத்தில் எல்லாப் பக்கங்களிலும் அது காட்டப்படும். ஆவணத்தில் இருக்கும் வாட்டர்மார்க்குகளை மாற்றலாம்/நீக்கலாம்.

முக்கியம்: பக்கவரிசையற்ற வடிவமைப்பில் உள்ள ஆவணங்களில் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியாது. ஏற்கெனவே வாட்டர்மார்க்குகள் இருக்கும் உங்கள் ஆவணத்தைப் பக்கவரிசையற்ற வடிவமைப்பிற்கு மாற்றினால் வாட்டர்மார்க்குகள் ஆவணத்தில் காட்டப்படாது. வாட்டர்மார்க்குகளைப் பார்க்கவும் பயன்படுத்தவும், பக்கங்கள் உள்ள வடிவமைப்பில் ஆவணம் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

பட வாட்டர்மார்க்கைச் சேர்த்தல்/மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. செருகு அதன் பிறகு வாட்டர்மார்க் என்பதற்குச் செல்லவும்.
  3. வலதுபுறத்தில் காட்டப்படும் பேனலில் படம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. படத்தைத் தேர்ந்தெடுக்கவும் படத்தைச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. Drive, Photos, URL, உங்கள் கேமரா ஆகியவற்றில் இருந்து ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கவும். கம்ப்யூட்டரில் இருந்தும் படத்தைப் பதிவேற்றலாம்.
  6. விருப்பத்திற்குரியது: வலதுபுறத்தில் உள்ள பேனலில் வாட்டர்மார்க்கை வடிவமைக்கலாம்.
  7. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

படத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான பிற வழிகள்:

  1. வாட்டர்மார்க்கின் மீது வலது கிளிக் செய்யவும்.
  2. வாட்டர்மார்க்கைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. கருவிப்பட்டியில் பட விருப்பங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உதவிக்குறிப்பு: ஆவணத்தில் இருக்கும் வார்த்தைகளுக்குப் பின்னணி வண்ணம் கொடுக்கப்பட்டிருந்தால் வாட்டர்மார்க்கில் சில இடைவெளிகள் தெரியக்கூடும். வாட்டர்மார்க்கை முழுமையாகப் பார்க்க, ஆவணத்திலுள்ள வார்த்தைகளின் பின்னணி வண்ணத்தை நீக்கலாம்.

எழுத்து வாட்டர்மார்க்கைச் சேர்த்தல்/மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. செருகு அதன் பிறகு வாட்டர்மார்க் என்பதற்குச் செல்லவும்.
  3. வலதுபுறத்தில் உள்ள பேனலில் எழுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வாட்டர்மார்க்காகக் காட்டப்பட வேண்டிய எழுத்துகளை டைப் செய்யவும்.
  5. விருப்பத்திற்குரியது: வலதுபுறத்தில் உள்ள பேனலில் வாட்டர்மார்க்கை வடிவமைக்கலாம்.
  6. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

கீழ்க்காணும் படிகளைப் பின்பற்றியும் வாட்டர்மார்க்கில் மாற்றங்களைச் செய்யலாம்:

  1. வாட்டர்மார்க்கின் மீது வலது கிளிக் செய்யவும்.
  2. வாட்டர்மார்க்கைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. வாட்டர்மார்க்கிற்குக் கீழே, வாட்டர்மார்க்கை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: ஆவணத்தில் இருக்கும் வார்த்தைகளுக்குப் பின்னணி வண்ணம் கொடுக்கப்பட்டிருந்தால் வாட்டர்மார்க்கில் சில இடைவெளிகள் தெரியக்கூடும். வாட்டர்மார்க்கை முழுமையாகப் பார்க்க, ஆவணத்திலுள்ள வார்த்தைகளின் பின்னணி வண்ணத்தை நீக்கலாம்.

வாட்டர்மார்க்கை நீக்குதல்

  1. செருகுஅதன் பிறகு வாட்டர்மார்க் என்பதைக் கிளிக் செய்யவும், வலதுபுறத்தில் ஒரு பேனல் திறக்கும்.
    • கீழ்க்காணும் படிகளைப் பின்பற்றியும் இதைச் செய்யலாம்:
      1. வாட்டர்மார்க்கின் மீது வலது கிளிக் செய்யவும்.
      2. வாட்டர்மார்க்கைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
      3. வாட்டர்மார்க்கிற்குக் கீழே, வாட்டர்மார்க்கை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும், ஒரு பேனல் திறக்கும்.
  2. பேனலின் கீழ்ப்பகுதியில், வாட்டர்மார்க்கை அகற்று நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17003138204534634364
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false