ஆவணத்தின் பக்க அமைவை மாற்றுதல்: பக்கங்களுடன் அல்லது பக்கவரிசையின்றி

பின்வரும் வடிவமைப்புகளில் ஒன்றைத் தேர்வுசெய்து ஒவ்வொரு ஆவணத்திலும் பக்க அமைவை மாற்றலாம்:

  • பக்கவரிசையில்: பக்கங்கள், பக்க முறிப்புகள் ஆகியவை உங்கள் Google ஆவணத்தில் இருக்குமாறு அமைக்கலாம். மேற்குறிப்புகள், அடிக்குறிப்புகள், பக்க எண்கள் போன்றவற்றை இந்த அமைப்பில் சேர்க்கலாம். அத்துடன் பக்கத்தின் திசையமைப்பு, ஓர அளவு போன்ற பக்க அமைப்புகளையும் தேவைக்கேற்றவாறு மாற்றலாம்.
  • பக்கவரிசையின்றி: பக்க முறிப்புகள் இல்லாமல் தொடர்ந்து ஸ்க்ரோல் செய்யும் வகையில் உங்கள் Google ஆவணத்தை அமைக்கலாம். இந்த அமைப்பில், உங்கள் திரையின் அளவுக்கேற்ப படங்கள் தானாகவே சரிசெய்யப்படும். அகலமான அட்டவணைகளை உருவாக்கி, அவற்றை இடது & வலதுபுறமாக ஸ்க்ரோல் செய்து பார்க்கலாம். நீங்கள் பெரிதாக்கும்போதும் சிறிதாக்கும்போதும் உங்கள் திரையின் அளவுக்கேற்ப அதில் காட்டப்படும் வரிகளும் சரிசெய்யப்படும்.

ஆவணத்தின் பக்க வடிவமைப்பை மாற்ற:

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. ஃபைல் அதன் பிறகு பக்க அமைவு என்பதற்குச் செல்லவும்.
  3. உரையாடல் சாளரத்தின் மேற்புறத்தில், பக்கவரிசையுடன் அல்லது பக்கவரிசையின்றி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உறுதிப்படுத்த சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்:

  • இயல்பாக அமை என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் உருவாக்கும் புதிய ஆவணங்களுக்கும் இந்த அமைப்புகளைப் பயன்படுத்தலாம்.
  • மேற்புறத்தில் உள்ள வடிவம் என்பதைக் கிளிக் செய்து, பக்க எண்கள் குறிப்பிடப்படாத வடிவத்திற்கு மாற்று அல்லது பக்கங்கள் வடிவமைப்புக்கு மாறு என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் வடிவமைப்புகளுக்கு இடையே மாறலாம்.

முக்கியம்: உங்கள் ஆவணத்தைப் பக்க எண்கள் குறிப்பிடப்படாத வடிவத்திற்கு மாற்றினால் அதில் உள்ள தலைப்புகள், அடிக்குறிப்புகள், வாட்டர்மார்க்குகள் போன்றவை காட்டப்படாது. பக்கவரிசை உள்ள வடிவமைப்பிற்கு ஆவணத்தை மீண்டும் மாற்றினால் அவை காட்டப்படும்.

அத்துடன் பக்கவரிசையற்ற வடிவமைப்பில் இருக்கும் ஆவணத்தில் நெடுவரிசைகள், பக்க எண்கள், மேற்குறிப்புகள், அடிக்குறிப்புகள் போன்ற குறிப்பிட்ட அம்சங்களைச் சேர்க்க முடியாது. அந்த அம்சங்களைப் பயன்படுத்த, பக்கவரிசை உள்ள வடிவமைப்பில் ஆவணம் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

பக்கவரிசையற்ற ஆவணங்களில் எழுத்தின் அகலத்தை மாற்றுதல்

பக்கவரிசையற்ற வடிவமைப்பில் உள்ள ஆவணத்தைப் பார்க்கும்போது குறுகிய, நடுத்தரமான அல்லது அகன்ற எழுத்து அகலங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கும் எழுத்து அகலத்திலேயே அனைத்துப் பக்கவரிசையற்ற ஆவணங்களும் காட்டப்படும். எழுத்தின் அகலத்தைத் தேர்வுசெய்வதால் ஒன்றிணைந்து பணியாற்றுபவர்களுக்கு ஆவணம் காட்டப்படும் விதம் பாதிக்கப்படாது.

பக்கவரிசையற்ற வடிவமைப்பில் உள்ள ஆவணத்தில் எழுத்து அகலத்தை மாற்ற:

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
    1. பக்க எண்கள் குறிப்பிடப்படாத வடிவத்தில் ஆவணம் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  2. காட்டு அதன் பிறகு எழுத்தின் அகலம் என்பதற்குச் செல்லவும்.
  3. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1879185136402280575
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false