இருப்பிடச் சிப்களைச் சேர்த்தல்

உங்கள் ஆவணத்தில் இருப்பிடச் சிப்பை உருவாக்கி அதன் மூலம்:
  • Google Mapsஸில் இருப்பிடத்தை விரைவாகத் திறக்கலாம்
  • Google Maps பக்கவாட்டுப் பேனலில் இருப்பிடத்தைப் பார்க்கலாம்
  • இருப்பிடத்திற்கான வழிகளைக் கண்டறியலாம்

இருப்பிடச் சிப்பை உருவாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. இவற்றில் ஒன்றைச் செய்யலாம்:
    1. செருகு அதன் பிறகு ஸ்மார்ட் சிப்கள் அதன் பிறகு இருப்பிடம் என்பதற்குச் செல்லவும்.
    2. "@" என டைப் செய்யவும்.
  3. முகவரி அல்லது இருப்பிடத்தை டைப் செய்யவும். 
  4. வரைபடச் சிப்பை உருவாக்க கீழ்த்தோன்றல் மெனுவில் உள்ள ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

Google Mapsஸில் இருந்து இணைப்பை நகலெடுத்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Mapsஸைத் திறந்து இருப்பிடத்தைக் கண்டறியவும்.
  2. இருப்பிடத்தைக் கண்டறிந்தவுடன் முகவரிப் பட்டியில் உள்ள இணைப்பை நகலெடுக்கவும். 
  3. Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  4. இணைப்பை ஆவணத்தில் ஒட்டவும்.
  5. இருப்பிடச் சிப்பை உருவாக்க Tab பட்டனை அழுத்தவும்.

இடங்களைப் பற்றிய தகவல்களைப் பெறுதல் மற்றும் வழிகளைக் கண்டறிதல்

Google Docsஸில் இருப்பிடச் சிப் ஒன்று இருந்தால் அந்த இருப்பிடத்தை Google Mapsஸில் நேரடியாகத் திறந்து இருப்பிடத்தின் மாதிரிக்காட்சியைப் பார்க்கலாம், வழிகளைக் கண்டறியலாம்.

Google Mapsஸில் இருப்பிடத்தைத் திறத்தல்

  1. தொடர்புடைய தகவல்களைப் பார்க்க இருப்பிடச் சிப்பைக் கிளிக் செய்யவும் அல்லது அதன் மீது கர்சரைக் கொண்டுசெல்லவும்.
  2. Google Mapsஸில் இணைப்பைத் திறக்க Maps ஐகானுக்கு Maps அடுத்துள்ள இருப்பிடத்தின் பெயரைக் கிளிக் செய்யவும்.

இருப்பிடத்தின் மாதிரிக்காட்சியைப் பார்த்தல்

  1. தொடர்புடைய தகவல்களைப் பார்க்க இருப்பிடச் சிப்பைக் கிளிக் செய்யவும் அல்லது அதன் மீது கர்சரைக் கொண்டுசெல்லவும்.
  2. வரைபடத்தின் மீது கர்சரைக் கொண்டுசென்று, மாதிரிக்காட்சியைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
    1. உதவிக்குறிப்பு: Google ஆவணத்தின் பக்கவாட்டுப் பேனலில் மாதிரிக்காட்சியைப் பார்ப்பீர்கள். Google Mapsஸில் மாதிரிக்காட்சியைப் பார்க்க, ‘Mapsஸில் திற’ என்பதைக் கிளிக் செய்யவும். Google தயாரிப்புகளை அருகருகே பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.

இருப்பிடத்திற்கான வழிகளைக் கண்டறிதல்

  1.  தொடர்புடைய தகவல்களைப் பார்க்க இருப்பிடச் சிப்பைக் கிளிக் செய்யவும் அல்லது அதன் மீது கர்சரைக் கொண்டுசெல்லவும்.
  2. பாப்-அப்பின் கீழே உள்ள 'வழிகளைக் காட்டு'Directions என்பதைக் கிளிக் செய்யவும்.
    1. உதவிக்குறிப்பு: Google ஆவணத்தின் பக்கவாட்டுப் பேனலில் வழிகளைப் பார்க்கலாம். Google Mapsஸில் வழிகளைப் பார்க்க, ‘Mapsஸில் திற’ என்பதைக் கிளிக் செய்யவும். Google தயாரிப்புகளை அருகருகே பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து மேலும் அறிக.
  3. புறப்படுமிடத்தைச் சேர்க்கவும்.
  4. வழிகளைப் பெற, ஒரு பயண வழியைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9771990873781802462
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false