Google Calendar நிகழ்வுகளில் மீட்டிங் குறிப்புகளைச் சேர்த்தல்

கம்ப்யூட்டரில் இருந்து மீட்டிங் குறிப்புகளை Google Calendar நிகழ்விற்கு நேரடியாகப் பகிரலாம்.

Google Docsஸில் இருந்து நிகழ்வுகளில் மீட்டிங் குறிப்புகளைச் சேர்த்தல்

  1. நிகழ்வில் சேர்க்க விரும்பும் புதிய அல்லது ஏற்கெனவே உள்ள Google ஆவணத்தைக் கம்ப்யூட்டரில் திறக்கவும்.
  2. ஆவணத்தில், “@” என டைப் செய்யவும்.
  3. பாப்-அப் மெனுவில் மீட்டிங் குறிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நிகழ்வைத் தேடவும்.
    1. உதவிக்குறிப்பு: உங்கள் கேலெண்டரில் "அடுத்து" என டைப் செய்து அடுத்த மீட்டிங்கைத் தேர்ந்தெடுக்கலாம். 
  5. நிகழ்வைத் தேர்ந்தெடுக்கவும். மீட்டிங் குறிப்புகளில் நிகழ்வு விவரங்கள் முன்கூட்டியே நிரப்பப்படும். ஆனால் நிகழ்வில் இணைக்கப்படாது.
    • மீட்டிங்கின் ஒருங்கிணைப்பாளர் நீங்கள்தான் என்றால்: ஒரு பாப்-அப் காட்டப்படும், உங்கள் நிகழ்வில் ஆவணத்தைப் பகிருமாறும் இணைக்குமாறும் அதில் கேட்கப்படும். அணுகலை வழங்க, பகிர் & இணை என்பதைக் கிளிக் செய்யவும்.
    • நீங்கள் மீட்டிங்கின் ஒருங்கிணைப்பாளர் இல்லையெனில்: ஆவணத்தைப் பகிருமாறு கேட்கும் பாப்-அப் ஒன்று காட்டப்படும். அணுகலை வழங்க, பகிர் என்பதைக் கிளிக் செய்யவும். நிகழ்வில் ஆவணம் இணைக்கப்படாது.

பங்கேற்பாளர்களுக்கு மீட்டிங் குறிப்புகளை மின்னஞ்சலில் அனுப்புதல்

Google ஆவணத்தில் மீட்டிங் குறிப்புகளைச் சேர்த்த பிறகு, மீட்டிங் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் குறிப்புகளை அனுப்பலாம்.

  1. கம்ப்யூட்டரில், மீட்டிங் குறிப்புகளுடன் கூடிய Google ஆவணத்தைத் திறக்கவும்.
  2. மீட்டிங் தேதி மற்றும் தலைப்பின் இடதுபுறத்தில், 'மீட்டிங் குறிப்புகளை மின்னஞ்சலில் அனுப்பு' ஐகானை Send in Gmail கிளிக் செய்யவும்.
  3. Gmailலில் திறக்கும் பாப்-அப் சாளரத்தில், நீங்கள் மின்னஞ்சலை நேரடியாகத் திருத்தலாம் அனுப்பலாம்.
Google Calendarரில் இருந்து புதிய நிகழ்வில் மீட்டிங் குறிப்புகளைச் சேர்த்தல்
  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. நிகழ்வை உருவாக்கவும்.
  3. விருப்பத்திற்குரியது: தலைப்பு, நேரம், விருந்தினர்கள் மற்றும் பிற விவரங்களை வழங்கவும்.
  4. விளக்கம்/இணைப்புகளைச் சேர் அதன் பிறகுமீட்டிங் குறிப்புகளை உருவாக்கு அதன் பிறகுசேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • முன்கூட்டியே நிரப்பப்பட்டிருக்கும் நிகழ்வு விவரங்கள் அடங்கிய மீட்டிங் குறிப்புகள் நிகழ்வில் இணைக்கப்பட்டு, உங்கள் நிறுவனத்தைச் சாராதவர்கள் உட்பட எல்லா விருந்தினர்களுடனும் பகிரப்படும்.
Google Calendarரில் ஏற்கெனவே உள்ள நிகழ்வில் இணைப்புகளையும் குறிப்புகளையும் சேர்த்தல்
  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • நிகழ்வைக் கிளிக் செய்து அதன் பிறகு மீட்டிங் குறிப்புகளை எடு என்பதைக் கிளிக் செய்யவும்.
      முன்கூட்டியே நிரப்பப்பட்டிருக்கும் நிகழ்வு விவரங்கள் அடங்கிய மீட்டிங் குறிப்புகள் உங்கள் நிகழ்வில் இணைக்கப்பட்டிருக்கும்.
    • நிகழ்வைக் கிளிக் செய்து அதன் பிறகு மெனு அதன் பிறகுஆவணத்தை இணை என்பதைக் கிளிக் செய்யவும்.
      தேர்ந்தெடுக்கப்பட்ட மீட்டிங் குறிப்புகள் உங்கள் நிகழ்வில் சேர்க்கப்படும்.
  3. மீட்டிங் குறிப்புகள் புதிய சாளரத்தில் திறக்கும். வலதுபுறத்தில் உள்ள பகிர் என்பதைக் கிளிக் செய்யவும்.
மீட்டிங் குறிப்புகளைப் பற்றி அறிக
  • நிகழ்வில் மீட்டிங் குறிப்புகளைச் சேர்த்தால், அந்த மாற்றங்கள் Google Calendarரில் காட்டப்படாது. அதேபோல் Google Calendarரில் செய்யும் மாற்றங்கள் மீட்டிங் குறிப்புகளில் காட்டப்படாது. உதாரணத்திற்கு:
    • ஆவணத்தின் பங்கேற்பாளர் பட்டியலில் புதிய விருந்தினர்களைச் சேர்த்தால் நிகழ்விற்கு அவர்கள் தானாக அழைக்கப்படமாட்டார்கள்.
    • ஆவணத்தின் தலைப்பை மாற்றினால் Google Calendarரில் அதன் தலைப்பு மாறாது.
    • Google Calendarரில் ஒரு நிகழ்வை மாற்றினால், அந்த நிகழ்வு விவரங்கள் மீட்டிங் குறிப்புகளில் மாறாது.
  • பின்வரும் சூழலில் மீட்டிங் குறிப்புகளை நிகழ்வில் சேர்க்க முடியாது:
    • நிகழ்வில் மாற்றங்களைச் செய்ய உங்களுக்கு அனுமதி இல்லாதபோது.
    • மற்றொருவர் ஏற்கெனவே மீட்டிங் குறிப்புகளை இணைத்துள்ளபோது.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6925938231412542048
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false