Google படிவத்தில் உங்கள் பதில்களைத் தானாகச் சேமித்தல்

Google கணக்கின் மூலம் நீங்கள் Google படிவத்தை நிரப்பினால் உங்கள் பதில்கள் அனைத்தும் தானாகவே 30 நாட்களுக்கு வரைவாகச் சேமிக்கப்படும். அதாவது படிவத்தை முழுமையாக நிரப்ப முடியவில்லை என்றாலோ வேறு சாதனங்களுக்கு மாற வேண்டும் என்றாலோ படிவத்தை மீண்டும் திறக்கும்போது விட்ட இடத்தில் இருந்தே நிரப்பலாம்.

முக்கியம்: ஆஃப்லைனில் இருந்தால் படிவம் தானாகச் சேமிக்கப்படாது.

வரவைச் சேமிக்கும்போது வரைவு சேமிக்கப்பட்டது Cloud done என்று படிவத்தின் மேற்பகுதியில் காட்டப்படும்.

நீங்கள் Google கணக்கின் மூலம் உள்நுழைந்திருந்து படிவத்தின் மேற்பகுதியில் 'தானியங்குச் சேமிப்பு முடக்கப்பட்டுள்ளது'  எனக் காட்டப்பட்டால் அந்தப் படிவத்தை உருவாக்கியவர் ‘பதில் தானாகவே வரைவாகச் சேமிக்கப்படுவதற்கான’ அம்சத்தை முடக்கியிருக்கலாம். தானாகச் சேமிக்கும் அம்சத்தை இயக்க விரும்பினால் படிவத்தின் உரிமையாளரைத் தொடர்புகொள்ளவும்.

சேமிக்கப்பட்ட பதில்களில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகள்:

  • படிவத்தின் அணுகலை இழந்தால் வரைவின் அணுகலையும் இழப்பீர்கள்.
  • படிவத்தின் உரிமையாளர்:
    • ஒரு கேள்வியை நீக்கினால் அதற்கான உங்கள் பதிலும் நீக்கப்படும்.
    • ஒரு கேள்விக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பத்தை மாற்றினால் அது உங்களின் தேர்வாக இருக்காது.
    • படிவத்தின் துணைப்பிரிவுகளில் மாற்றங்களைச் செய்தால் குறிப்பிட்ட சில பக்கங்களுக்கான அணுகலை நீங்கள் இழக்கக்கூடும்.

உதவிக்குறிப்புகள்:

  • கேள்வியின் முக்கியப் பகுதியையோ பிற பதில் விருப்பங்களையோ படிவத்தின் உரிமையாளர் மாற்றினால் உங்கள் பதிலில் எந்தவித மாற்றமும் இருக்காது.

வரைவைக் கண்டறிதல்

படிவத்தின் வரைவுப் பதிலைக் கண்டறிய, வரைவை உருவாக்கப் பயன்படுத்திய Google கணக்கின் மூலம் படிவத்தின் URLலை மீண்டும் திறக்கவும்.

வரைவை நீக்குதல்

படிவத்தில் உள்ள பதில்கள் அனைத்தையும் அழிக்க:

  1. படிவத்தின் கீழ்ப்பகுதிக்குச் செல்லவும்.
  2. உறுதிசெய்ய, கீழ் வலதுபுறத்தில் உள்ள படிவத்தில் உள்ள பதில்களை அழி என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12459879834139821833
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false