Docs, Sheets, Slides ஆகியவற்றில் என்க்ரிப்ட் செய்யப்பட்ட கோப்புகளில் கூட்டுப்பணி செய்தல்

என்க்ரிப்ட் செய்யப்பட்ட கோப்புகளில் கூட்டுப்பணி செய்வோர் ஒரே கோப்பில் வெவ்வேறு நேரங்களில் பணியாற்றலாம், ஆனால் ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே பணியாற்ற முடியும். கூட்டுப்பணி செய்யும் மற்ற நபர்கள் இருப்பின், வழக்கம்போல் அவர்களது ஐகான்கள் மேல் வலது மூலையில் காட்டப்படும்.

முக்கியம்: உங்கள் மொபைல் சாதனத்தில் கிளையண்ட் தரப்பில் என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட ஃபைல்களின் மாதிரிக்காட்சியைப் பார்க்க அல்லது அந்த ஃபைல்களைப் பதிவிறக்க உங்கள் நிர்வாகி உங்களுக்கு அணுகலை வழங்க வேண்டும்.

கூட்டுப்பணி செய்வோர் பலருடன் பணியாற்றுதல்

ஏற்கெனவே ஒருவர் திருத்திக் கொண்டிருக்கும் ஃபைலை நீங்கள் திறந்தால் மேல் வலதுபுறத்தில் "திருத்தக் காத்திருக்கவும்" என்ற அறிவிப்பு காட்டப்படும். ஏற்கெனவே திருத்திக் கொண்டிருப்பவருடன் பேச அறிவிப்பின் கீழே உள்ள அவர்களுடன் உரையாடுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் திருத்திக் கொண்டிருக்கும் ஃபைலை எவரேனும் திறந்தால் மேல் வலதுபுறத்தில் "சற்றுமுன் ஒருவர் இணைந்துள்ளார்" என்ற அறிவிப்பு காட்டப்படும். ஃபைலில் புதிதாக இணைந்துள்ளவருடன் பேச அறிவிப்பின் கீழே உள்ள அவர்களுடன் உரையாடுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

"இப்போது திருத்தலாம்" என்ற அறிவிப்பு காட்டப்பட்டால் நீங்கள் ஃபைலைத் திருத்தலாம்.

முரண்படும் மாற்றங்களைத் தவிர்த்தல்

கூட்டுப்பணி செய்பவர்கள் பலர் முரண்படும் திருத்தங்களைச் செய்தால், கோப்பில் கூட்டுப்பணி செய்பவர்கள் அனைவருக்கும் திரையில் மேற்பகுதியில் ஓர் அறிவிப்பு தோன்றும். 

  • புதுப்பிக்கவும் சமீபத்திய மாற்றங்களைப் பார்க்கவும் புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • சமீபத்திய திருத்தங்களைப் புதிய தாவலில் திறப்பதன் மூலம் நீங்கள் சேமிக்காத திருத்தங்களை ஒப்பிட, ஒப்பிடு என்பதைக் கிளிக் செய்யவும். 
  • அறிவிப்பை அகற்ற, நிராகரி என்பதைக் கிளிக் செய்யவும். பழைய பதிப்பை இனி நீங்கள் திருத்த முடியாது.

ஒப்பிடு என்பதைக் கிளிக் செய்தபிறகு ஒரு புதிய பிரிவு திறக்கப்படும். அசல் பிரிவில் இருக்கும் திருத்தங்களை அதில் நகலெடுக்கலாம். புதிய பிரிவில் திருத்துவதைத் தொடரலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12170315060958913115
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false