Google Docsஸில் பக்க அமைப்புகளை மாற்றுதல்

Google ஆவணத்தின் பக்க அளவு, ஓரங்கள், பக்கத் திசையமைப்பு ஆகியவற்றை மாற்றலாம்.
முக்கியம்: பக்கவரிசையற்ற வடிவமைப்பில் உள்ள ஆவணங்களில் இந்த அம்சங்களைப் பயன்படுத்த முடியாது. இந்த அம்சங்களைப் பயன்படுத்த, பக்கங்கள் உள்ள வடிவமைப்பில், ஆவணம் அமைக்கப்பட்டு இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

Google ஆவணத்தின் பக்க அமைவை மாற்றுதல்

  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. கருவிப்பட்டியில், ஃபைல் அதன் பிறகு பக்க அமைவு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உரையாடல் சாளரத்தின் மேற்பகுதியில் உள்ள பக்கங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. மாற்ற விரும்பும் அமைப்பிற்குச் செல்லவும்:
  5. மாற்றங்களைச் செய்யவும்.
  6. சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • உதவிக்குறிப்பு: நீங்கள் புதிதாக உருவாக்கும் ஆவணங்களுக்கு இந்த அமைப்புகளைப் பயன்படுத்த, இயல்பாக அமை என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒற்றை Google ஆவணத்தில் பக்கத் திசையமைப்புகளைச் சேர்த்தல்

அகலமான டேபிள்கள், விளக்கப்படங்கள், கிராஃபிக்ஸைச் சிறப்பாகப் பொருத்துவதற்காகப் போர்ட்ரெய்ட் & லேண்ட்ஸ்கேப் தளவமைப்புகளை ஒற்றை ஆவணம் கொண்டிருக்கலாம். 

ஒரு தேர்வின் திசையமைப்பை மாற்றுதல் 
  1. கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. திசையமைப்பை மாற்ற விரும்பும் உரை அல்லது படத்தைத் தனிப்படுத்தி அதன் பிறகு உரை அல்லது படத்தின் மீது வலது கிளிக் செய்யவும்.
  3. பக்கத்தை லேண்ட்ஸ்கேப்புக்கு மாற்று அல்லது பக்கத்தைப் போர்ட்ரெய்ட்டிற்கு மாற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
ஒரு பிரிவு அல்லது பல பிரிவுகளின் திசையமைப்பை மாற்றுதல் 
  1. உங்கள் கம்ப்யூட்டரில் Google Docsஸில் ஆவணத்தைத் திறக்கவும்.
  2. பல பிரிவுகளை உருவாக்க விரும்பும் இடத்தைக் கிளிக் செய்யவும்
  3. செருகு அதன் பிறகு இடைவெளி அதன் பிறகு பிரிவு இடைவெளி என்பதற்குச் செல்லவும்.
  4. ஒரு பிரிவின் திசையமைப்பை மாற்ற, கோப்பு அதன் பிறகு பக்க அமைவு அல்லது வடிவமைப்பு அதன் பிறகு பக்கத் திசையமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
    1. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவிற்கு மட்டும் பக்கத் திசையமைப்பைப் பயன்படுத்த விரும்பினால் “இந்தப் பிரிவிற்கு” மட்டும் “பயன்படுத்து” என்று அமைக்கவும். இந்தப் பிரிவிற்கும் அடுத்தடுத்த பிரிவுகளுக்கும் திசையமைப்பைப் பயன்படுத்த விரும்பினால் “இந்தப் பிரிவிலிருந்து பயன்படுத்து” என்று அமைக்கவும்.
    2. பயன்படுத்த வேண்டிய திசையமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. சரி என்பதைக் கிளிக் செய்யவும்

உதவிக்குறிப்புகள்:

  • ஆவணத்தில் பிரிவு இடைவெளிகள் எங்கே உள்ளன எனக் காட்ட, காட்டு அதன் பிறகு பிரிவு இடைவெளிகளைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பக்க மேலோட்டங்களைக் காட்ட, காட்டு  அதன் பிறகு அச்சிடல் தளவமைப்பைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  • முழு ஆவணத்தின் திசையமைப்பையும் நீங்கள் மாற்றலாம். ஃபைல் அதன் பிறகு பக்க அமைவு அதன் பிறகு இதற்குப் பயன்படுத்து: முழு ஆவணம் என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17581280810256948819
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false