மேற்கோள்களையும் நூல்விவரப் பட்டியலையும் சேர்த்தல்

இந்த நடைகளுடன் உங்கள் Google ஆவணத்தில் மேற்கோள்களையும் நூல்விவரப் பட்டியலையும் சேர்க்கலாம்:

  • MLA (8வது பதிப்பு.)
  • APA (7வது பதிப்பு.)
  • சிகாகோ ஆத்தர்-டேட் (17வது பதிப்பு)

முக்கியம்: மேற்கோள்களுக்கான கருவி அனைத்து மொழிகளிலும் கிடைக்கிறது, ஆனால் ஆவணத்தில் அந்தக் கருவி உருவாக்கும் உறுப்புகள் தற்சமயம் ஆங்கிலத்தில் மட்டுமே காட்டப்படும். 
எடுத்துக்காட்டாக:

  • மேற்கோள்களுக்கான கருவியில் உள்ளிட்ட புத்தகத்தின் தலைப்பு நீங்கள் உள்ளிட்ட மொழியிலேயே காட்டப்படும்.
  • Google Docsஸை நீங்கள் எந்த மொழியில் பயன்படுத்தினாலும் மேற்கோள்களுக்கான கருவி உருவாக்கும் “நூல்விவரப் பட்டியல்” தலைப்பு, “திருத்தியவர்” போன்ற உறுப்புகள் ஆங்கிலத்தில்தான் காட்டப்படும்.

தானாக உருவாக்கப்பட்ட உறுப்புகளை ஆவணத்தில் செருகிய பிறகு அவற்றை வேறொரு மொழிக்கு மொழிபெயர்க்கலாம்.

மேற்கோள்களையும் நூல்விவரப் பட்டியலையும் சேர்க்க:
  1. Google Docsஸில் ஓர் ஆவணத்தைத் திறந்து கருவிகள் அதன் பிறகு மேற்கோள்கள் என்பதைக் கிளிக் செய்யவும். 
  2. பக்கப்பட்டியில் உள்ள MLA, APA, சிகாகோ ஆத்தர்-டேட் ஆகியவற்றில் இருந்து உங்கள் வடிவமைப்பு நடையைத் தேர்ந்தெடுக்கவும்.

மேற்கோள் ஆதாரத்தையும் தொடர்புடைய விவரங்களையும் சேர்த்தல்

  1. மேற்கோள்களுக்கான பக்கப்பட்டியில், நீங்கள் தேர்ந்தெடுத்த நடையின் கீழ் உள்ள + மேற்கோள் ஆதாரத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. ஆதார வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. ஆதாரத்தை அணுகிய விதத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
    • இணையதளங்களையோ ஆன்லைன் செய்தித்தாள்களையோ தேட URLலைப் பயன்படுத்தலாம். புத்தகங்களைத் தேட ISBN எண்ணைப் பயன்படுத்தலாம்.
  4. புலங்களில் ஆதாரத் தகவலை வழங்கவும்/திருத்தவும்.
    • பரிந்துரைக்கப்படும் புலங்களில் நீல நிற நட்சத்திரக்குறி இருக்கும்.
    • பல பங்களிப்பாளர்களைச் சேர்க்க, + பங்களிப்பாளர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • பங்களிப்பாளர் ஒரு நிறுவனமா என்பதைக் குறிப்பிடலாம்.
  5. மேற்கோள் ஆதாரத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆதாரங்களைச் சேர்த்தல் மற்றும் திருத்துதல் குறித்து மேலும் அறிக.

வார்த்தைகள் சார்ந்த மேற்கோளைச் செருகுதல்

  1. ஆவணத்தில் உள்ள வாக்கியத்தில் மேற்கோளைக் காட்ட விரும்பும் இடத்தில் கர்சரை வைக்கவும்.
    • மேற்கோள்களுக்கான பக்கப்பட்டியில் நீங்கள் திருத்த விரும்பும் ஆதாரத்தின் மீது கர்சரை வைக்கவும்.
  2. மேற்கோள் ஆதாரத்தின் பக்கவாட்டில் 'மேற்கோளிடு' பட்டன் தோன்றும்.
  3. மேற்கோளிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஆவணத்தில் உள்ள வார்த்தைகளில் நீங்கள் தேர்ந்தெடுத்த நடையில் ஆதாரம் தோன்றும்.
  4. ஆவணத்தில் உள்ள வார்த்தைகளில் “#” தோன்றினால், அதை நீக்கவும் அல்லது அதற்குப் பதிலாக மேற்கோளின் பக்க எண்ணைக் (எண்களைக்) குறிப்பிடவும்.

மேற்கோள் ஆதாரத்தைத் திருத்துதல்

  1. மேற்கோள்களுக்கான பக்கப்பட்டியில், நீங்கள் திருத்த விரும்பும் ஆதாரத்தின் மீது கர்சரை வைக்கவும்.
    • மேற்கோள் ஆதாரத்தின் பக்கவாட்டில் 'மெனு' மேலும் பட்டன் தோன்றும்.
  2. மெனு மேலும் அதன் பிறகு திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. புலங்களில் உள்ள ஆதாரத் தகவல்களைத் திருத்தவும்.
    • பரிந்துரைக்கப்படும் புலங்களில் நீல நிற நட்சத்திரக்குறி இருக்கும்.
  4. பக்கப்பட்டிக்குக் கீழே உள்ள ஆதாரத்தைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மேற்கோள் ஆதாரத்தை நீக்குதல்

  1. மேற்கோள்களுக்கான பக்கப்பட்டியில் நீங்கள் நீக்க விரும்பும் ஆதாரத்தின் மீது கர்சரை வைக்கவும்.
    • மேற்கோள் ஆதாரத்தின் பக்கவாட்டில் 'மெனு' மேலும் பட்டன் தோன்றும்.
  2. மெனு மேலும்  அதன் பிறகு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

நூல்விவரப் பட்டியலைச் செருகுதல்

  1. ஆவணத்தில் நூல்விவரப் பட்டியலைக் காட்ட விரும்பும் இடத்தில் கர்சரை வைக்கவும்.
  2. மேற்கோள்களுக்கான பக்கப்பட்டியின் கீழ்ப்பகுதியில் உள்ள நூல்விவரப் பட்டியலைச் செருகு என்பதைக் கிளிக் செய்யவும்.
    நீங்கள் தேர்ந்தெடுத்த நடையில் நூல்விவரப் பட்டியல் காட்டப்படும்.

தொடர்புடைய கட்டுரைகள்

true
Visit the Learning Center

Using Google products, like Google Docs, at work or school? Try powerful tips, tutorials, and templates. Learn to work on Office files without installing Office, create dynamic project plans and team calendars, auto-organize your inbox, and more.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
381955860684331089
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
35
false
false