Google Chatடில் பணிகளை உருவாக்குதல் மற்றும் ஒதுக்குதல்

Google Chat ஸ்பேஸின் உறுப்பினராக இருப்பதால் நீங்கள் குழுப் பணிகளை உருவாக்கலாம் நிர்வகிக்கலாம், அத்துடன் ஸ்பேஸில் உள்ள பிற உறுப்பினர்களுக்குப் பணிகளை ஒதுக்கலாம். எந்த ஸ்பேஸில் உருவாக்கப்பட்டனவோ அந்த ஸ்பேஸிலேயே பணிகளைப் பார்க்கலாம். உங்களுக்கு ஒரு பணி ஒதுக்கப்பட்டிருந்தால் Google Tasksஸில் உள்ள உங்கள் தனிப்பட்ட பணிப் பட்டியலில் அது காட்டப்படும். பணியை ஒருவர் உருவாக்கினாலோ அதில் மாற்றங்களைச் செய்தாலோ ஸ்பேஸில் அறிவிப்பு காட்டப்படும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்தும்போது ஸ்பேஸில் "Tasks" பிரிவு காட்டப்படவில்லை எனில் அதை இயக்குமாறு உங்கள் Google Workspace நிர்வாகியிடம் கேட்கவும்.

ஸ்பேஸில் பணியை உருவாக்குதலும் ஒதுக்குதலும்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. பணியை உருவாக்க விரும்பும் ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே உள்ள Tasks பிரிவைக் கிளிக் செய்து and then பணியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    உதவிக்குறிப்பு: Gmailலில் Tasks பிரிவைப் பார்க்க, ஸ்பேஸை விரிவாக்க வேண்டியிருக்கலாம்.
  4. பணியின் தலைப்பை டைப் செய்யவும்.
  5. விருப்பத்திற்குரியது: விளக்கத்தையோ கூடுதல் விவரங்களையோ சேர்க்க, விவரங்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்து தகவல்களை வழங்கவும்.
  6. விருப்பத்திற்குரியது: தேதியையும் நேரத்தையும் சேர்க்க தேதி/நேரத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்து and then தேதியையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்து and then சரி என்பதைக் கிளிக் செய்யவும்.
    உதவிக்குறிப்பு: உங்கள் பணியில் தேதியையும் நேரத்தையும் சேர்த்தால் பணி திட்டமிடப்பட்ட தேதிகளிலும் நேரங்களிலும் அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.
  7. விருப்பத்திற்குரியது: ஸ்பேஸின் உறுப்பினருக்குப் பணியை ஒதுக்க, ஒதுக்கு என்பதைக் கிளிக் செய்து and then உறுப்பினரின் பெயரைக் கிளிக் செய்யவும். ஸ்பேஸின் உறுப்பினராக இல்லாதவருக்குப் பணியை ஒதுக்க, முதலில் அவரை ஸ்பேஸிற்கு அழைக்கவும்.
    உதவிக்குறிப்பு: பணியைப் பெறுபவர் ஸ்பேஸில் இருந்து வெளியேறினால் ஸ்பேஸில் இருந்தும் Google Tasksஸில் உள்ள அவரது தனிப்பட்ட பணிப் பட்டியலில் இருந்தும் பணி அகற்றப்படாது.
  8. சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
முக்கியம்: ஒரு பணியை நீக்கினால் ஸ்பேஸில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அது நீக்கப்படும். மேலும் பணியைப் பெற்றவரின் தனிப்பட்ட பணிப் பட்டியலில் இருந்தும் அது நீக்கப்படும்.

பணியைத் திருத்துதல்

  1. Chatடில் ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. மேலே உள்ள Tasks பிரிவைக் கிளிக் செய்து and then பணியைத் தேர்ந்தெடுக்கவும்.
    உதவிக்குறிப்பு: Gmailலில் Tasks பிரிவைப் பார்க்க, ஸ்பேஸை விரிவாக்க வேண்டியிருக்கலாம்.
  3. பணியின் தலைப்பு, விவரங்கள், தேதி, நேரம், பணியைப் பெறுபவர் போன்றவற்றைக் கிளிக் செய்து தேவையானவற்றை மாற்றவும்.

உதவிக்குறிப்புகள்: உங்கள் தனிப்பட்ட பணிப் பட்டியலில் பணி இருந்தால்:

  • பணியின் தலைப்பு, விவரங்கள், தேதி, நேரம் ஆகியவற்றை உங்கள் தனிப்பட்ட பணிப் பட்டியலில் இருந்தே திருத்தலாம்.
  • ஸ்பேஸில் இருந்துதான் பணியை 'முடிந்தது' எனக் குறிக்க வேண்டுமென்ற அவசியமில்லை, உங்கள் தனிப்பட்ட பணிப் பட்டியலில் இருந்தும் பணியை 'முடிந்தது' எனக் குறிக்கலாம்.
  • மாற்றங்களைச் செய்தால் ஸ்பேஸில் உள்ள அனைவரின் பணியிலும் அவை செயல்படுத்தப்படும், ஓர் அறிவிப்பும் காட்டப்படும்.

பணியை ‘முடிந்தது’ எனக் குறித்தல்

  1. Chatடில் ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. மேலே உள்ள Tasks பிரிவைக் கிளிக் செய்யவும்.
    உதவிக்குறிப்பு: Gmailலில் Tasks பிரிவைப் பார்க்க, ஸ்பேஸை விரிவாக்க வேண்டியிருக்கலாம்.
  3. பணிக்கு அடுத்துள்ள, முடிவடையவில்லை என்பதன் மீது கர்சரை வைத்து, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்: உங்கள் தனிப்பட்ட பணிப் பட்டியலில் பணி இருந்தால்:

  • பணியின் தலைப்பு, விவரங்கள், தேதி, நேரம் ஆகியவற்றை உங்கள் தனிப்பட்ட பணிப் பட்டியலில் இருந்தே திருத்தலாம்.
  • ஸ்பேஸில் இருந்துதான் பணியை 'முடிந்தது' எனக் குறிக்க வேண்டுமென்ற அவசியமில்லை, உங்கள் தனிப்பட்ட பணிப் பட்டியலில் இருந்தும் பணியை 'முடிந்தது' எனக் குறிக்கலாம்.
  • மாற்றங்களைச் செய்தால் ஸ்பேஸில் உள்ள அனைவரின் பணியிலும் அவை செயல்படுத்தப்படும், ஓர் அறிவிப்பும் காட்டப்படும்.

பணியை ‘முடிவடையவில்லை’ எனக் குறித்தல்

  1. Chatடில் ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. மேலே உள்ள Tasks பிரிவைக் கிளிக் செய்யவும்.
    உதவிக்குறிப்பு: Gmailலில் Tasks பிரிவைப் பார்க்க, ஸ்பேஸை விரிவாக்க வேண்டியிருக்கலாம்.
  3. பணிகளைப் பார்க்க, "முடிந்தது" என்பதற்கு அடுத்துள்ள 'விரிவாக்கு' என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பணியின் நிலையை 'முடிவடையவில்லை' என மாற்ற, பணிக்கு அடுத்துள்ள 'முடிந்தது' என்பதைக் கிளிக் செய்யவும்.

பணியை நீக்குதல்

முக்கியம்: ஒரு பணியை நீக்கினால் ஸ்பேஸில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அது நீக்கப்படும். மேலும் பணியைப் பெற்றவரின் தனிப்பட்ட பணிப் பட்டியலில் இருந்தும் அது நீக்கப்படும்.

  1. Chatடில் ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே உள்ள Tasks பிரிவைக் கிளிக் செய்து and then பணியைத் தேர்ந்தெடுக்கவும்.
    உதவிக்குறிப்பு: Gmailலில் Tasks பிரிவைப் பார்க்க, ஸ்பேஸை விரிவாக்க வேண்டியிருக்கலாம்.
  4. மேல் வலதுபுறத்தில் உள்ள ‘நீக்கு’ and then நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2613199009367110566
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false