Google Chatடில் Google Cloud Build ஆப்ஸைப் பயன்படுத்துதல்

உங்கள் Cloud Build திட்டப்பணிகள் குறித்த அறிவிப்புகளைப் பெற Chatடில் Google Cloud Build ஆப்ஸைப் பயன்படுத்தலாம்.

தொடங்குவதற்கு முன்:

விருப்பமான திட்டப்பணியில் Cloud Build ஆப்ஸைப் பயன்படுத்த Cloud Build APIயை இயக்கவும். Cloud Build குறித்து மேலும் அறிக.

Cloud Build ஆப்ஸ் அறிவிப்புகளை அமைத்தல்

இந்த ஆப்ஸைச் சேர்க்கும் ஒவ்வொரு ஸ்பேஸிலும் அறிவிப்புகளை அமைக்க வேண்டும். உறுப்பினராக உள்ள எல்லா ஸ்பேஸ்களுக்கும் ஆப்ஸ் அறிவிப்புகளை அனுப்பும்.

  1. Chatடைத் திறக்கவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • ஆப்ஸுடனான நேரடி மெசேஜைத் திறந்து settings என டைப் செய்யவும்.
    • ஆப்ஸுடனான ஸ்பேஸிற்குச் சென்று @Cloud Build settings என டைப் செய்யவும்.
    ஆப்ஸுக்கான தற்போதைய அமைப்புகள் காட்டப்படும்.
  3. அமைப்புகளை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் Cloud Build கணக்கில் உள்நுழையவும்.
    Cloud Build ஆப்ஸ் உள்ளமைவுச் சாளரம் திறக்கப்பட்டு உங்களுக்குக் கிடைக்கக்கூடிய கிளவுட் திட்டப்பணிகள் அதில் ஏற்றப்படும்.
  5. கிளவுட் திட்டப்பணியின் பெயரை டைப் செய்யவும்.
    ட்ரிகர்களின் பட்டியல் காட்டப்படும்.
  6. பட்டியலில் இருந்து ஒரு Cloud Build ட்ரிகரைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. இதன்படி மெசேஜ்களைத் தொடராக்கு மெனுவில் இருந்து, மெசேஜ் தொடர்கள் வேண்டாம்திட்டப்பணி அல்லது ட்ரிகர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  8. Chat அறிவிப்புகள் அனுப்பப்பட வேண்டிய நிலைகளைத் தேர்ந்தெடுக்கவும். 
  9. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  10. (விருப்பத்திற்குரியது) மற்றொரு திட்டப்பணியை உள்ளமைப்பதற்கும் ட்ரிகருக்கான அறிவிப்புகளைப் பெறுவதற்கும் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆப்ஸ் அமைப்புகளை மாற்றுதல்

ஸ்பேஸ்களில், ஆப்ஸை உள்ளமைத்தவரால் மட்டுமே அதன் அமைப்புகளை மாற்ற முடியும்.

  1. Chatடைத் திறக்கவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • ஆப்ஸுடனான நேரடி மெசேஜைத் திறந்து settings என டைப் செய்யவும்.
    • ஆப்ஸுடனான ஸ்பேஸிற்குச் சென்று @Cloud Build settings என டைப் செய்யவும்.
    ஆப்ஸுக்கான தற்போதைய அமைப்புகள் காட்டப்படும்.
  3. அமைப்புகளை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் Cloud Build கணக்கில் உள்நுழையவும்.
    Cloud Build ஆப்ஸ் உள்ளமைவுச் சாளரம் காட்டப்படும்.
  5. மாற்று என்பதைக் கிளிக் செய்து, தேவைக்கு ஏற்ப அமைப்புகளை மாற்றவும்.
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்பேஸில் இருந்து ஆப்ஸை அகற்றினால் ஆப்ஸ் அமைப்புகளும் நீக்கப்படும்.

ஸ்பேஸ்களில் ஆப்ஸைப் பயன்படுத்துதல்

ஸ்பேஸ்களில் ஆப்ஸைப் பயன்படுத்த, ஆப்ஸ் அனுப்பும் மெசேஜ்களுக்கான உங்கள் பதில்கள் உட்பட ஆப்ஸிற்கு நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜிலும் ஆப்ஸை @ மூலம் குறிப்பிட வேண்டும். @ மூலம் குறிப்பிடுவதால் ஆப்ஸிற்குத்தான் மெசேஜ் அனுப்புகிறீர்கள், ஸ்பேஸில் உள்ள பிறருக்கு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.

  • கிடைக்கக்கூடிய கட்டளைகளின் முழுமையான பட்டியலைப் பெற @Cloud Build help என்று டைப் செய்யவும்.
  • தற்போது உள்ளமைவு செய்யப்பட்டுள்ள அறிவிப்புகளைப் பார்க்க @Cloud Build settings என்று டைப் செய்யவும்.
  • ஆப்ஸ் குறித்துக் கருத்து வழங்க @Cloud Build feedback என்று டைப் செய்து உங்கள் கருத்தை டைப் செய்யவும்.


Google, Google Workspace, and related marks and logos are trademarks of Google LLC. All other company and product names are trademarks of the companies with which they are associated.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
8991747326375099650
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false