கணக்குகள், தொடர்புகள், லீட்கள், வாய்ப்புகள் ஆகியவை குறித்து Salesforceஸில் தேட Chatடில் Salesforce ஆப்ஸைப் பயன்படுத்தலாம்.
தொடங்குவதற்கு முன்:
- ஆப்ஸை நிறுவ உங்கள் Google Workspace நிர்வாகியின் அனுமதி தேவை.
- Chatடில் ஆப்ஸைச் சேர்க்க வேண்டும். ஆப்ஸைக் கண்டறிந்து அவற்றை Chatடில் சேர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
- உங்களிடம் Salesforce கணக்கு இருக்க வேண்டும்.
Chatடில் Salesforce ஆப்ஸை அமைத்தல்
- Chatடைத் திறக்கவும்.
- ஆப்ஸுடனான நேரடி மெசேஜைத் திறக்கவும் அல்லது ஆப்ஸைச் சேர்த்திருக்கும் ஸ்பேஸிற்குச் செல்லவும்.
- "help" போன்ற ஏதேனும் ஒரு மெசேஜை டைப் செய்யவும்:
- நேரடி மெசேஜில் help என டைப் செய்யவும்.
- ஸ்பேஸில் @Salesforce help என டைப் செய்யவும்.
- Configure என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் Salesforce கணக்கில் உள்நுழையவும்.
- "அனுமதி வழங்குதல்" சாளரத்தில், அனுமதிஉலாவியை மூடுக என்பதைக் கிளிக் செய்யவும்.
Salesforce ஆப்ஸ் மூலம் தேடுதல்
- Chatடைத் திறக்கவும்.
- ஆப்ஸுடனான நேரடி மெசேஜைத் திறக்கவும் அல்லது ஆப்ஸைச் சேர்த்திருக்கும் ஸ்பேஸிற்குச் செல்லவும்.
- queryஐக் காட்டு என டைப் செய்யவும். இதில் query என்பது "smith" போன்ற ஒரு தேடல் குறிப்பு. ஸ்பேஸ்களில் @Salesforce show query என டைப் செய்யவும்.
கணக்குகள், தொடர்புகள், லீட்கள், வாய்ப்புகள் போன்றவற்றுக்கான முடிவுகளை ஆப்ஸ் காட்டும். - ஒரு முடிவை கிளிக் செய்துSalesforceஸில் திற என்பதைக் கிளிக் செய்யவும்.
- Salesforceஸில் இருந்து வெளியேற:
- நேரடி மெசேஜில் logout என டைப் செய்யவும்
- ஸ்பேஸில் @Salesforce logout என டைப் செய்யவும்.
ஸ்பேஸ்களில் ஆப்ஸைப் பயன்படுத்துதல்
ஸ்பேஸ்களில் ஆப்ஸைப் பயன்படுத்த, ஆப்ஸ் அனுப்பும் மெசேஜ்களுக்கான உங்கள் பதில்கள் உட்பட ஆப்ஸிற்கு நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜிலும் ஆப்ஸை @ மூலம் குறிப்பிட வேண்டும். @ மூலம் குறிப்பிடுவதால் ஆப்ஸிற்குத்தான் மெசேஜ் அனுப்புகிறீர்கள், ஸ்பேஸில் உள்ள பிறருக்கு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.
Google, Google Workspace, and related marks and logos are trademarks of Google LLC. All other company and product names are trademarks of the companies with which they are associated.