Google Chatடில் Zendesk ஆப்ஸைப் பயன்படுத்துதல்

Zendeskகில் சிக்கல்கள் ஏற்படும்போது அதுகுறித்த அறிவிப்புகளைப் பெற Chatடில் Zendesk ஆப்ஸைப் பயன்படுத்தலாம்.

தொடங்குவதற்கு முன்:

Chatடில் Zendesk ஆப்ஸை அமைத்தல்

இந்த ஆப்ஸைச் சேர்க்கும் ஒவ்வொரு ஸ்பேஸிலும் அறிவிப்புகளை அமைக்க வேண்டும். உறுப்பினராக உள்ள எல்லா ஸ்பேஸ்களுக்கும் ஆப்ஸ் அறிவிப்புகளை அனுப்பும்.

  1. Chat ஆப்ஸை திறக்கவும்.
  2. ஆப்ஸுடனான நேரடி மெசேஜைத் திறக்கவும் அல்லது ஆப்ஸைச் சேர்த்திருக்கும் ஸ்பேஸிற்குச் செல்லவும்.
  3. உள்ளமைவுச் சாளரத்தைத் திறக்க, Zendesk கணக்கில் உள்நுழை என்பதைத் தட்டவும்.
  4. Zendesk துணை டொமைனை டைப் செய்து and then அடுத்து என்பதைத் தட்டவும்.
  5. Zendesk பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் டைப் செய்து and then உள்நுழை என்பதைத் தட்டவும்.
  6. குழுவைத் தேர்ந்தெடுக்கவும் என்பதற்குக் கீழே உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை தட்டி, அறிவிப்புகளைப் பெற விரும்பும் Zendesk குழுவைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. இதைவிட அதிகமான அல்லது சமமான முன்னுரிமை என்பதற்குக் கீழே உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை  தட்டி, நீங்கள் விரும்பும் முன்னுரிமை நிலையை அறிவிப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கவும்.
  8. இதன்படி மெசேஜ்களைத் தொடராக்கு என்பதற்குக் கீழே உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை தட்டி, மெசேஜ் தொடருக்கான விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.
  9. Chatடில் அறிவிப்புகளைப் பெற விரும்பும் விருப்பங்களுக்கு அருகிலுள்ள செக்பாக்ஸைத் தேர்வுசெய்யவும்.
  10. சேமி என்பதைத் தட்டவும்.

ஆப்ஸ் அமைப்புகளை மாற்றுதல்

ஆப்ஸுடனான நேரடி மெசேஜ் அல்லது ஆப்ஸைச் சேர்த்த ஸ்பேஸில் இருந்து Zendesk ஆப்ஸ் அமைப்புகளை நீங்கள் அணுகலாம். ஸ்பேஸ்களில், ஆப்ஸைச் சேர்த்தவரால் மட்டுமே அமைப்புகளை மாற்ற முடியும். ஸ்பேஸில் இருந்து ஆப்ஸை அகற்றினால் அதன் அமைப்புகளும் நீக்கப்படும்.

  1. Chat ஆப்ஸை திறக்கவும்.
  2. ஆப்ஸுடனான நேரடி மெசேஜைத் திறக்கவும் அல்லது ஆப்ஸைச் சேர்த்திருக்கும் ஸ்பேஸிற்குச் செல்லவும்.
  3. ஆப்ஸுக்கான அமைப்புகளைக் கண்டறிய ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • Zendesk ஆப்ஸுடனான நேரடி மெசேஜில் settings என்று டைப் செய்யவும்.
    • ஸ்பேஸில், மெசேஜைத் திறந்து @Zendesk settings என டைப் செய்யவும்.
  4. அமைப்புகளை மாற்று என்பதைத் தட்டவும்.
  5. மாற்று என்பதைத் தட்டி தேவைக்கு ஏற்ப அமைப்புகளை மாற்றவும்.
  6. சேமி என்பதைத் தட்டவும்.

ஸ்பேஸ்களில் ஆப்ஸைப் பயன்படுத்துதல்

ஸ்பேஸ்களில் ஆப்ஸைப் பயன்படுத்த, ஆப்ஸ் அனுப்பும் மெசேஜ்களுக்கான உங்கள் பதில்கள் உட்பட ஆப்ஸிற்கு நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜிலும் ஆப்ஸை @ மூலம் குறிப்பிட வேண்டும். @ மூலம் குறிப்பிடுவதால் ஆப்ஸிற்குத்தான் மெசேஜ் அனுப்புகிறீர்கள், ஸ்பேஸில் உள்ள பிறருக்கு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.

 


Google, Google Workspace, and related marks and logos are trademarks of Google LLC. All other company and product names are trademarks of the companies with which they are associated.

 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6986741129496005686
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false