Google Chatடிற்கான Zapier ஆப்ஸ்

Zap செயல்கள் குறித்த அறிவிப்புகளைப் பெற Chatடில் Zapier ஆப்ஸைப் பயன்படுத்தலாம். இந்த ஆப்ஸ் Zapபில் இருந்து Chatடுக்கு மெசேஜ்களை அனுப்பும்.

தொடங்குவதற்கு முன்:

Chatடில் Zapier ஆப்ஸை அமைத்தல்

Zapபில் இருந்து மெசேஜ்களைப் பெறும் வகையில் Chatடை அமைக்கலாம்.

  1. Chat ஆப்ஸை திறக்கவும்.
  2. ஆப்ஸுடனான நேரடி மெசேஜைத் திறக்கவும் அல்லது ஆப்ஸைச் சேர்த்திருக்கும் ஸ்பேஸிற்குச் செல்லவும்.
  3. allowzaps என்ற கட்டளையை டைப் செய்யவும். ஸ்பேஸ்களில் @Zapier allowzaps என டைப் செய்யவும்.
    Zapsஸை அனுமதிப்பதற்கான கார்டை ஆப்ஸ் காட்டும்.
  4. Zapsஸை அனுமதிக்க கிளிக் செய்யவும் என்பதைத் தட்டவும்.
  5. Chatடிற்காக நீங்கள் பயன்படுத்தும் பணி/பள்ளிக் கணக்கில் உள்நுழையவும்.
    உங்கள் சார்பாக இந்த அரட்டையில் Zaps மெசேஜ்களை அனுப்பலாம் என்பதை உறுதிப்படுத்தும் மெசேஜ் ஒன்று காட்டப்படும்.

Chatடில் Zapsஸை நிறுத்துதல்

  1. Chat ஆப்ஸை திறக்கவும்.
  2. ஆப்ஸுடனான நேரடி மெசேஜைத் திறக்கவும் அல்லது ஆப்ஸைச் சேர்த்திருக்கும் ஸ்பேஸிற்குச் செல்லவும்.
  3. stopzaps என்ற கட்டளையை டைப் செய்யவும். ஸ்பேஸ்களில் @Zapier stopzaps என டைப் செய்யவும்.
    Zapsஸை நிறுத்துவதற்கான கார்டை ஆப்ஸ் காட்டும்.
  4. Zapsஸை நிறுத்த கிளிக் செய்யவும் என்பதைத் தட்டவும்.
    உங்கள் சார்பாக இந்த அரட்டையில் Zaps இனி மெசேஜ்களை அனுப்பாது என்பதை உறுதிப்படுத்தும் மெசேஜ் ஒன்று காட்டப்படும்.

Google Chatடுடன் Zapபை இணைக்கவும்

Chatடுடன் சேர்த்துப் பயன்படுத்த Zap செயலை அமைக்க வேண்டும். Zapierரில் செய்ய வேண்டியவை குறித்த சுருக்கவிவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான வழிகாட்டுதல்களுக்கு, Zapier இணையதளத்திற்குச் செல்லவும்.

  1. Zapierயைத் திறக்கவும்.
  2. Zapபை உருவாக்கவும் அல்லது ஏற்கெனவே உள்ள Zapபைத் திறக்கவும்.
  3. Zapபில் செயல் படியைச் சேர்க்கவும்:
    1. Google Chat ஆப்ஸைத் தேர்வுசெய்யவும்.
    2. 'மெசேஜை உருவாக்கு' செயலைச் சேமிக்கவும்.
    3. உங்கள் Google கணக்கை இணைக்கவும். இது, Chatடிற்காக நீங்கள் பயன்படுத்தும் பணி அல்லது பள்ளிக் கணக்காகும்.
    4. மெசேஜ்களுக்கு டெம்ப்ளேட்டை அமைக்கவும். ஆப்ஸைச் சேர்த்திருக்கும் Chat ஸ்பேஸ்களைத் தேர்வுசெய்து Zaps செயல்களை அனுமதிக்கவும்.

Zap இப்போது Zapier ஆப்ஸைத் தொடர்புகொள்ளலாம், Chatடுக்கு மெசேஜ்களை அனுப்பலாம்.

ஸ்பேஸ்களில் ஆப்ஸைப் பயன்படுத்துதல்

ஸ்பேஸ்களில் ஆப்ஸைப் பயன்படுத்த, ஆப்ஸ் அனுப்பும் மெசேஜ்களுக்கான உங்கள் பதில்கள் உட்பட ஆப்ஸிற்கு நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜிலும் ஆப்ஸை @ மூலம் குறிப்பிட வேண்டும். @ மூலம் குறிப்பிடுவதால் ஆப்ஸிற்குத்தான் மெசேஜ் அனுப்புகிறீர்கள், ஸ்பேஸில் உள்ள பிறருக்கு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13817482432252557423
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false