தனித்தியங்கும் Google Chat ஆப்ஸை நிறுவுதல்

Google Chatடை எளிதாகப் பயன்படுத்த, தனித்தியங்கும் Google Chat ஆப்ஸை உங்கள் Chrome உலாவியில் நிறுவவும். இது நேட்டிவ் ஆப்ஸ் போன்ற அனுபவத்தை வழங்குகிறது. அத்துடன் இது ஒரு மேம்பட்ட வெப் ஆப்ஸ் (PWA - Progressive Web Application) ஆகும். 

முக்கியம்: Google Chatடிற்கு Chrome நீட்டிப்பு எதுவும் கிடையாது. அது போன்ற அனுபவத்தைப் பெற தனித்தியங்கும் ஆப்ஸை நிறுவவும்.

தொடங்குவதற்கு முன்:

தனித்தியங்கும் Chat PWA ஆப்ஸை நிறுவ:

  • உங்கள் சாதனம் Google Chrome 73 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்க வேண்டும்.
    • Chrome உங்களின் இயல்பு உலாவியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் தனித்தியங்கும் Chat ஆப்ஸைப் பயன்படுத்த அது திறந்திருக்க வேண்டும்.
  • Chrome நீட்டிப்புகளையும் ஆப்ஸையும் கம்ப்யூட்டரில் நிறுவ உங்களுக்கு அனுமதி இருக்க வேண்டும்.
    • நிறுவும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், பணி/பள்ளிக் கணக்கைப் பயன்படுத்துபவர் எனில் உங்கள் Google Workspace நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.

தனித்தியங்கும் ஆப்ஸைக் கம்ப்யூட்டரில் நிறுவுதல்

  1. chat.google.com தளத்தில் உள்நுழையவும்.
  2. கம்ப்யூட்டரில் ஆப்ஸை நிறுவ இவற்றில் ஏதாவது ஒரு வழிமுறையைப் பயன்படுத்தவும்:
    • ஆப்ஸ் நிறுவப்படாமல் இருந்தால் அதைப் பதிவிறக்க பாப்-அப் சாளரம் ஒன்று தோன்றும்.
      • உதவிக்குறிப்பு: நீங்கள் Google Chatடை முதல்முறையாகப் பயன்படுத்தத் தொடங்கிய சிறிது நேரத்திற்குப் பிறகு இந்த பாப்-அப் சாளரம் தோன்றக்கூடும்.
    • Google Chromeமின் மேல் வலதுபுறத்தில் உள்ள URL பட்டியில் தோன்றும் 'நிறுவு' அதன் பிறகு நிறுவு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • Google Chromeமின் மேல் வலதுபுறத்தில் உள்ள 'Google Chromeமைப் பிரத்தியேகமாக்கிக் கட்டுப்படுத்துக' அதன் பிறகு Google Chatடை நிறுவு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்:

  • chat.google.com தளத்திற்கு Google Chrome ஷார்ட்கட்டை ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்தால் தனித்தியங்கும் ஆப்ஸ் தானாகவே நிறுவப்படும். ஆப்ஸை நேரடியாக நிறுவுவதற்கான விருப்பம் தோன்றாது.
  • Google Chromeமில் இருந்து ஆப்ஸைத் திறக்க, முகவரிப் பட்டியில் chrome://apps என டைப் செய்து Google Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  • Chromebookகில், தொடக்கியில் ஆப்ஸைக் கண்டறியலாம்.

சாதனம் தொடங்கும்போதே தனித்தியங்கும் ஆப்ஸ் தானாகத் திறக்கும்படி அமைத்தல்

முக்கியம்: Chrome OSஸில் இந்தப் படிகளைப் பயன்படுத்த முடியாது.

  1. கம்ப்யூட்டரில், Chrome உலாவியைத் திறக்கவும்.
  2. முகவரிப் பட்டியில் chrome://apps என டைப் செய்யவும்.
  3. தனித்தியங்கும் Chat ஆப்ஸ் என்பதை வலது கிளிக் செய்யவும்.
  4. நான் உள்நுழையும்போது ஆப்ஸைத் தொடங்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

தனித்தியங்கும் ஆப்ஸை Mac, Windows, Linux ஆகியவற்றில் இருந்து நிறுவல் நீக்குதல்

  1. கம்ப்யூட்டரில், Chrome உலாவியைத் திறக்கவும்.
  2. முகவரிப் பட்டியில் chrome://apps என டைப் செய்யவும்.
  3. தனித்தியங்கும் Chat ஆப்ஸ் என்பதை வலது கிளிக் செய்யவும்.
  4. Chromeமிலிருந்து அகற்று அதன் பிறகு அகற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

தனித்தியங்கும் ஆப்ஸை Chrome OSஸில் இருந்து நிறுவல் நீக்குதல்

  1. கம்ப்யூட்டரில் தொடக்கியை திறக்கவும்.
  2. தேடல் பட்டியில் Google Chat எனத் தேடவும்.
  3. தேடல் முடிவுகளில், தனித்தியங்கும் Chat ஆப்ஸ் என்பதை வலது கிளிக் செய்யவும்.
  4. Chromeமிலிருந்து அகற்று அதன் பிறகு அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
972327729412948788
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false