ஏன் என்னால் மற்றவர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியவில்லை?

Google Chatடில் இருந்து ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப முயலும்போது, அவருக்கு மெசேஜ் அனுப்ப முடியாது எனத் தெரிவிக்கும் பேனர் ஒன்று காட்டப்படலாம். உங்களுக்கும் நீங்கள் மெசேஜ் அனுப்ப முயலும் நபருக்கும் இடையே அமைப்புகள் இணக்கமற்று இருப்பதன் காரணமாகவே இந்த பேனர் காட்டப்படுகிறது.

உங்களால் மற்றவர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்:

  • நிறுவனத்தைச் சேராதவர்களுக்கு மெசேஜ் அனுப்புவதைத் தடுக்கும் அமைப்புகள். வெளிநபர்களுக்கு மெசேஜ் அனுப்புவதை Google Workspace கணக்கைப் பயன்படுத்துவோரின் நிர்வாகி முடக்கியிருந்தால், நீங்களும் வெளிநிறுவனத்தைச் சேர்ந்தவரும் உங்களுக்கிடையில் மெசேஜ் அனுப்ப முடியாது.
  • இணக்கமாக இல்லாத ‘இதுவரையிலான உரையாடல்கள்’ அமைப்புகள். ‘இதுவரையிலான உரையாடல்கள்’ அமைப்புகளைப் பிற நபருக்கு இணக்கமாக மாற்றுவதன் மூலம் இதைச் சரிசெய்யலாம். ‘இதுவரையிலான உரையாடல்கள்’ அம்சத்தை இயக்குவது/முடக்குவது எப்படி என அறிக.
  • தரவுப் பகுதிக்கான அமைப்புகள் இணக்கமில்லாமல் இருப்பது & 'இதுவரையிலான உரையாடல்கள்' அமைப்பை இருவரில் ஒருவரால் முடக்க முடியாமல் இருப்பது. Google Workspace கணக்கை நீங்கள் பயன்படுத்தினால், 'இதுவரையிலான உரையாடல்கள்' அமைப்பைப் பிரத்தியேகமாக்குவதை உங்கள் நிர்வாகி முடக்கியிருக்கலாம். இருவராலும் 'இதுவரையிலான உரையாடல்கள்' அமைப்பை முடக்க முடிந்தால், வேறொரு தரவுப் பகுதியில் இருப்பவருக்கு மெசேஜ் அனுப்பும்போது இந்த அம்சம் தானாகவே முடக்கப்படும்.
  • Google Chat அல்லது பிற தயாரிப்புகளில் உங்களைத் தடுக்கும் அமைப்புகள். தடுக்கப்பட்ட கணக்குகள் குறித்து மேலும் அறிக.
  • ஸ்பேஸ் நிர்வாகிகளால் மட்டுமே ஸ்பேஸின் உறுப்பினர்களை நிர்வகிக்க முடியும். ஸ்பேஸில் உறுப்பினர்களைச் சேர்க்க, ஸ்பேஸுக்கான அணுகல் அமைப்புகளை ஸ்பேஸ் நிர்வாகி கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். தற்போதுள்ள ஸ்பேஸ் அமைப்புகளை நிர்வகிப்பது எப்படி என்று மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10508326053232091310
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false