Google Chatடில் உங்களின் இருக்கும் நிலையை மாற்றுதல்

நீங்கள் செயலில் உள்ளீர்கள் என்பதைப் பிறருக்குத் தெரிவிக்கும் வகையில் உங்கள் Google Chat நிலையை மாற்றிக்கொள்ளலாம்.
நிலை ஐகான் நிலையின் உரை நிலையின் அர்த்தம்
செயலில் Gmail/Google Chat திறந்துள்ளது.
தொந்தரவு செய்ய வேண்டாம்

Google Chat அறிவிப்புகள் முடக்கப்படும்.

Google Workspace கணக்குகளைப் பொறுத்தவரை, டொமைன் அளவில் மட்டுமே உங்கள் நிலை காட்டப்படும்.

செயலில் இல்லை

நீங்கள் இணையத்துடன் இணைக்கப்படவில்லை.

10 நிமிடங்களுக்கும் மேலாக நீங்கள் செயலில் இல்லை.

"செயலில் இல்லை என அமை" நிலையை அமைத்துள்ளீர்கள்.

செயலில் இல்லை

Gmail/Google Chatடில் கடந்த 5 நிமிடங்களாக நீங்கள் செயலில் இல்லை.

டெஸ்க்டாப்பில் மட்டுமே இது காட்டப்படும்.

 

உதவிக்குறிப்புகள்:

  • ஸ்பேஸ்களில் உங்களுடன் இருப்பவர்களும், நீங்கள் ஏற்றுக்கொண்ட உரையாடல் அழைப்பை அனுப்பியவர்களும், நீங்கள் தடுக்காத தொடர்புகளும் மட்டுமே உங்கள் நிலையைப் பார்க்க முடியும்.
  • “தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று உங்கள் நிலையை அமைத்திருந்தால்:
    • “செயலில்” என்று உங்கள் நிலையை மாற்றும்வரை, உங்களின் அனைத்து சாதனங்களிலும் Chat அல்லது Gmailலில் அறிவிப்புகள் தற்காலிகமாக முடக்கப்படும்.
    • எவ்வளவு நேரத்திற்கு அறிவிப்புகளை இடைநிறுத்தியுள்ளீர்கள் என்பதைப் பிறரால் தெரிந்துகொள்ள முடியும். இதனால் உங்களிடம் இருந்து உடனடியாக அவர்கள் பதிலை எதிர்பார்க்கமாட்டார்கள்.
நிலையின் ஐகான் நிலையின் உரை நிலையின் அர்த்தம்
செயலில் Gmail/Google Chat திறந்துள்ளது.
தொந்தரவு செய்ய வேண்டாம்

Google Chat அறிவிப்புகள் ஒலியடக்கப்பட்டுள்ளன.

*Workspace கணக்குகளுக்கு இது டொமைன் நிலையில் மட்டுமே காட்டப்படும்

செயலில் இல்லை
  • நீங்கள் இணையத்துடன் இணைக்கப்படவில்லை.
  • 10 நிமிடங்களுக்கும் மேலாக நீங்கள் செயலில் இல்லை.
  • "செயலில் இல்லை என அமை" நிலையை அமைத்துள்ளீர்கள்.
செயலில் இல்லை Gmail/Google Chatடில் கடந்த 5 நிமிடங்களாக நீங்கள் செயல்படவில்லை.

நிலையை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Gmailலைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உங்களின் நிலை இண்டிகேட்டருக்கு அடுத்துள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்யவும்.
  3. தானாக அமை, தொந்தரவு செய்ய வேண்டாம், செயலில் இல்லை என அமை ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்.

பிரத்தியேக நிலையை அமைத்தல்

  1. Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள நிலை இண்டிகேட்டரில் கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்யவும்.
  3. நிலையைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. ஈமோஜியைத் தேர்வுசெய்ய, நிலைத் தகவலை எழுத, நிலையை அழிக்க/குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு நீக்க, காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரத்தியேக நிலையை நீக்குதல்

  1. Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள நிலை இண்டிகேட்டரில் கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்யவும்.
  3. நீக்க வேண்டிய நிலையைக் கிளிக் செய்யவும்.
  4. X ஐகானைக் கிளிக் செய்யவும்.
  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

Workspace கணக்குகளில் கேலெண்டரில் காட்டப்படும் நிலையை முடக்குதல்

Workspace கணக்குகளில், உங்கள் Calendarரில் காட்டப்படும் நிலையின் அடிப்படையில் உங்கள் Chat நிலை தானாகவே மாற்றப்படும். உதாரணமாக, நீங்கள் மீட்டிங்கில் இருக்கும்போதோ விடுப்பில் இருந்தாலோ உங்கள் நிலை தானாகவே மாறிவிடும். 

  • யாரேனும் உங்களுக்கு நேரடியாக மெசேஜை அனுப்பினால் மேலே உங்கள் பெயருக்கு அடுத்தபடியாக உங்கள் கேலெண்டரில் காட்டப்படும் நிலையைப் பார்ப்பார்கள். 
  • குழு உரையாடல்களிலும் ஸ்பேஸ்களிலும் Calendarரில் காட்டப்படும் நிலை காட்டப்படாது.

உங்கள் நிர்வாகி இவற்றைக் கட்டுப்படுத்துகிறார்:

  • “விடுப்பில் இருக்கிறேன்”, “முழுக் கவன நேரத்தில்” போன்ற Chatடில் உள்ள 'கிடைக்கும் நிலை' விருப்பங்கள்.
  • Calendarரில் காட்டப்படும் நிலையை Chatடில் தானாகக் காட்டுதல்.

உங்கள் Calendarரில் காட்டப்படும் நிலையைப் பகிர வேண்டாம் என்று விரும்பினால் நீங்கள் அதை முடக்கிக்கொள்ளலாம்.

  1. Google Calendarருக்குச் செல்லவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் மெனு அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இடதுபுறத்தில் உள்ள “எனது கேலெண்டர்களுக்கான அமைப்புகள்” என்பதன் கீழ் உங்கள் கேலெண்டரைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. “நிகழ்வுகளுக்கான அணுகல் அனுமதிகள்” என்பதன் கீழ், “அணுகல் அனுமதிகள் மூலம் வரம்பிடப்பட்ட பிற Google ஆப்ஸில் கேலெண்டர் தகவலைக் காட்டு” என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும். 

உதவிக்குறிப்பு: நீங்கள் செய்யும் மாற்றங்கள் தானாகவே சேமிக்கப்படும்.

Google Chat அல்லது Gmailலில் தற்காலிகமாக அறிவிப்புகளை நிறுத்துதல்

  1. Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள உங்கள் நிலையைக் கிளிக் செய்யவும்.
  3. தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.  
  4. விரும்பும் கால அளவை அமைக்க, பட்டியலில் இருந்து ஒரு கால அளவைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது "குறிப்பிட்ட நேரம் வரை" என்பதைக் கிளிக் செய்யவும்.  
  5. அமை என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: தேர்ந்தெடுத்துள்ள கால அளவு முடிந்ததும் அறிவிப்புகள் தானாகவே இயக்கப்படும். தேர்ந்தெடுத்துள்ள கால அளவுக்கு முன்பாக அறிவிப்புகளை இயக்க, உங்கள் நிலை and then தொந்தரவு செய்ய வேண்டாம் and then 'தொந்தரவு செய்ய வேண்டாம்' அம்சத்தை முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

Google Chat அல்லது Gmailலில் அறிவிப்புகளை இடைநிறுத்துவதற்கான நேரத்தைத் திட்டமிடுதல்

  1. Google Chat அல்லது Gmail கணக்கிற்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள உங்கள் நிலையைக் கிளிக் செய்யவும்.
  3. தொந்தரவு செய்ய வேண்டாம் என்பதைத் தேர்ந்தெடுத்து அதன் பிறகு தொந்தரவு செய்யாமல் இருப்பதற்கான நேரத்தை அமைக்கவும்.
  4. “தொந்தரவு செய்ய வேண்டாம் அமைப்பின் திட்ட அட்டவணை” என்பதற்குக் கீழே, புதிய நேரம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. எந்த நேரங்களில் அறிவிப்புகளை இடைநிறுத்த வேண்டும் என்பதை உள்ளிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. விருப்பத்திற்குரியது: உங்கள் நேர மண்டலத்திற்கேற்ப 'தொந்தரவு செய்ய வேண்டாம்' நேரத்தை அமைக்க:
    1. அமைப்புகள் settings மெனுவைத் திறக்கவும்.
    2. பெட்டியைத் தேர்ந்தெடுத்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களை நீங்கள் திட்டமிடலாம். திட்டமிட்ட ஒவ்வொரு நேரத்திற்கும் அறிவிப்புகள் இடைநிறுத்தப்படும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14201222727456971786
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false