Google Chatடிற்கான Google Drive ஆப்ஸைப் பயன்படுத்துதல்

Drive செயல்பாடுகள் குறித்த அறிவிப்புகளை Google Chatடில் பெற Google Drive ஆப்ஸைப் பயன்படுத்தலாம்.

Chatடில் பெறும் Google Drive அறிவிப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

அறிவிப்புகளை இயக்கினால், Google Drive செயல்பாடுகளின்போது நேரடி மெசேஜ்களைப் பெறுவீர்கள், அவற்றுள் சில:

  • உங்களுடன் புதிய ஃபைல் அல்லது ஃபோல்டர் பகிரப்படுதல்.
  • கருத்து/பணியில் வேறொருவர் உங்களைக் குறிப்பிடுதல் அல்லது உங்களுக்குப் பணி ஒதுக்கப்படுதல்.
    • Chatடிற்கான Google Drive ஆப்ஸில் இருந்தே கருத்துகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கலாம். எடுத்துக்காட்டாக, உடன் பணிபுரிபவரைக் குறிப்பிட “@” என்று டைப் செய்து அவரது பெயரையோ மின்னஞ்சல் முகவரியையோ டைப் செய்யவும். 
  • உங்களுக்குச் சொந்தமான ஃபைலை அணுகுவதற்காக ஒருவர் கோரிக்கை அனுப்புதல்.

தொடங்குவதற்கு முன்

Chat/Gmailலில் Google Drive அறிவிப்புகளை இயக்குதல்

ரோபோவை நிறுவும்போது, அறிவிப்புகளை இயக்குவதற்கான மெசேஜில் ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.

ஏற்கெனவே அறிவிப்புகளை முடக்கியிருந்தால்:

  1. Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
  2. Google Drive ஆப்ஸிற்கு நேரடி மெசேஜ் ஒன்றை (எ.கா. "ஹலோ") அனுப்பவும்.
  3. பதிலில், அறிவிப்புகளை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

Chat/Gmailலில் Google Drive அறிவிப்புகளை முடக்குதல்

  1. Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
  2. Google Drive ஆப்ஸிற்கு நேரடி மெசேஜ் ஒன்றை (எ.கா. "ஹலோ") அனுப்பவும்.
  3. பதிலில், அறிவிப்புகளை முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

அறிவிப்புகளை மீண்டும் இயக்க, Google Drive ஆப்ஸிற்கு மீண்டும் ஒரு நேரடி மெசேஜை அனுப்பவும்.

Google Drive ஆப்ஸை நிறுவல் நீக்குதல்

  1. Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
  2. மேலே உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்யவும்.
  3. நிறுவல் நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10993056508165434663
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false