ஸ்பேஸ்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

முக்கியம்: டொமைனில் Chat சேவைக்கான அணுகல் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ஸ்பேஸ் பெயர்கள் காட்டப்படும்.

ஏதேனும் ஒரு தலைப்பு, திட்டப்பணி அல்லது பொதுவான ஆர்வம் குறித்து ஒரு குழுவினருடனோ நிறுவனத்துடனோ கலந்துரையாட Google Chatடில் ஸ்பேஸை உருவாக்கலாம். உதாரணமாக, எதிர்கால மார்க்கெட்டிங் விளம்பரத் தொடரின் டைம்லைன்கள் குறித்துக் கலந்துரையாட ஒரு ஸ்பேஸை உருவாக்கலாம்.

ஸ்பேஸ்கள் மூலம் நீங்கள்:

  • உரையாடலில் பொதுவான ஆர்வங்கள் அல்லது உங்கள் திட்டப்பணிகளை மையமாகக் கொண்டு பேசலாம் அல்லது நிறுவனம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடலாம்.
  • விரிவான கலந்துரையாடல் தேவைப்படுபவற்றுக்கு மெசேஜ் தொடர்களை உருவாக்கலாம்.
  • உறுப்பினர்களுக்கு ஃபைல்களைப் பகிரலாம், பணிகளை ஒதுக்கலாம்.
  • உங்கள் ஸ்பேஸிற்குள் எளிய பணிமுறைகளை உருவாக்க ஆப்ஸைச் சேர்க்கலாம்.

கூட்டுப்பணி அல்லது அறிவிப்புகளுக்காக ஸ்பேஸைப் பயன்படுத்துதல்

முக்கியம்: தனிப்பட்ட Google கணக்கின் மூலம் Chatடைப் பயன்படுத்தினால், கூட்டுப்பணி செய்வதற்காக மட்டுமே உங்களால் ஸ்பேஸ்களை உருவாக்க முடியும்.

கூட்டுப்பணிக்காக ஸ்பேஸ்களைப் பயன்படுத்துதல்

  • தனிப்பட்ட, பணி அல்லது பள்ளிக் கணக்குகளின் மூலம் பயன்படுத்தலாம்.
  • முக்கியமான திட்டப்பணி, குழு அறிவிப்புகள், பயணம், சமையல் போன்ற பொது ஆர்வங்கள் சம்பந்தமாகத் தொடர்புகொள்வது போன்றவற்றுக்காக இந்த வகை ஸ்பேஸைப் பயன்படுத்தலாம்.
  • குழுவில் உள்ள அனைவரும் மெசேஜ்களை இடுகையிடலாம், அவற்றுக்கு ரியாக்ட் செய்யலாம், பதிலளிக்கலாம்.
  • குழுவில் உள்ள அனைவருக்கும் முதன்மை உரையாடல் சாளரத்தில் நீங்கள் மெசேஜ் அனுப்பலாம் அல்லது மெசேஜுக்கு நேரடியாகப் பதிலளிக்கலாம், மெசேஜ் தொடரை உருவாக்கலாம்.

அறிவிப்புகளுக்காக ஸ்பேஸ்களைப் பயன்படுத்துதல்

  • பணி அல்லது பள்ளிக் கணக்குகளின் மூலம் பயன்படுத்தலாம்.
  • உங்கள் குழுவுடன் முக்கியமான செய்திகள், அறிவிப்புகள் ஆகியவற்றைப் பகிர இந்த வகை ஸ்பேஸைப் பயன்படுத்தலாம்.
  • ஸ்பேஸ் நிர்வாகியாக நீங்கள்:
    • முதன்மை உரையாடல் சாளரத்தில் அறிவிப்புகளை இடுகையிடலாம்.
    • அறிவிப்பில் உள்ள ஸ்பேஸ் உறுப்பினர் கருத்துகளுக்குப் பதிலளிக்கலாம்.
    • பதில்களை முடக்கலாம்.
  • ஸ்பேஸ் உறுப்பினராக உங்களால் அறிவிப்புகளுக்கு ரியாக்ட் செய்யவும் நேரடியாக பதிலளிக்கவும் மட்டுமே முடியும்.
  • அறிவிப்புகளுக்கென்று ஒரு ஸ்பேஸை உருவாக்கிய பிறகு அதன் வகையை மாற்ற முடியாது.

மெசேஜ் தொடர்கள் மூலம் ஸ்பேஸ்களை ஒழுங்கமைத்தல்

ஸ்பேஸில் முதன்மை உரையாடலுக்கு மட்டுமல்லாமல் நீங்கள் எந்த மெசேஜுக்கும் பதிலளிக்கலாம், தனி மெசேஜ் தொடரை உருவாக்கலாம். முக்கியமான கலந்துரையாடல்களைக் கண்காணிக்கவும், முதன்மை உரையாடல் சீரான ஒழுங்கமைப்பில் இருக்கவும் மெசேஜ் தொடர்களைப் பயன்படுத்தலாம்.

மெசேஜ் தொடரில், நீங்கள்:

  • மெசேஜ்களை அனுப்பலாம் அவற்றுக்குப் பதிலளிக்கலாம்.
  • மெசேஜ் தொடர்களைப் பின்தொடரலாம் அல்லது பின்தொடர்வதை நிறுத்தலாம்.
  • மெசேஜ் தொடரில் புதிய மெசேஜ்களுக்கான அறிவிப்பைப் பெறும் விதத்தை மாற்றலாம்.

ஸ்பேஸில் மெசேஜ் தொடர்களைப் பயன்படுத்துதல்.

ஸ்பேஸுக்கான அணுகலை நிர்வகித்தல்

பணி அல்லது பள்ளிக் கணக்குகளில், ஸ்பேஸைத் தனிப்பட்டதாகவோ, உங்கள் நிறுவனத்தில் உள்ள அனைவரும் அல்லது இலக்குப் பார்வையாளர்கள் மட்டும் கண்டறியத்தக்க வகையிலோ அமைக்கலாம்.

தனிப்பட்ட ஸ்பேஸ்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

  • குழுக்களுக்கு இடையேயான கலந்துரையாடல், திட்டப்பணிகள் மற்றும் குழுக்களுக்கு ஏற்றவை.
  • ஸ்பேஸில் சேர, அந்த ஸ்பேஸில் உள்ள உறுப்பினர் உங்களை அழைக்க வேண்டும் அல்லது சேர்க்க வேண்டும்.
  • ஸ்பேஸில் உறுப்பினராகாத வரை அல்லது ஸ்பேஸிற்கு அழைக்காத வரை Chatடில் உங்களால் அதைத் தேட முடியாது.

கண்டறியத்தக்க ஸ்பேஸ்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

  • குறிப்பிட்ட தனிநபர்களுக்கோ குழுக்களுக்கோ வரையறுக்கப்படாத தலைப்புகளுக்கு ஏற்றவை.
  • ஸ்பேஸ் கண்டறியக்கூடியதாக இருந்தால் ஸ்பேஸைத் தேடலாம், அதன் மாதிரிக்காட்சியைப் பார்க்கலாம், அதில் சேரலாம்.
  • ஸ்பேஸுக்கான இணைப்பு உங்களிடம் இருந்தால் அதன் மூலம் ஸ்பேஸில் சேரலாம்.

ஸ்பேஸ்களுக்கும் நேரடி மெசேஜ்களுக்கும் இடையேயான வேறுபாடுகள்

Chatடில் ஸ்பேஸ்கள் மூலமோ நேரடி மெசேஜ்கள் மூலமோ குழுவினருடன் தொடர்புகொள்ளலாம். தொடர்புகொள்வதற்கான இந்த இரண்டு முறைகளும் வெவ்வேறு வழிகளில் செயல்படுவதுடன் வெவ்வேறு நோக்கங்களுக்காகவும் பயன்படுகின்றன:

  • ஸ்பேஸ்கள்: ஃபைல்களைப் பகிர்வது, பணிகளை ஒதுக்குவது போன்றவற்றைச் செய்வதற்கும் தொடர்ந்து இணைப்பில் இருப்பதற்குமான ஒரே இடம்.
  • நேரடி மெசேஜ்கள்: குழுவினருடன் நேரடியாக உரையாடலாம். உதாரணமாக, மீட்டிங் முடிந்த பிறகு விரைவாக ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ள நேரடி மெசேஜ்களைப் பயன்படுத்தலாம்.
  ஸ்பேஸ்கள் நேரடி மெசேஜ்கள்
இதுவரையிலான மெசேஜ்கள்

இதுவரையிலான மெசேஜ்கள் அம்சம் இயல்பாகவே இயக்கப்பட்டிருக்கும். அத்துடன், அவை உங்கள் நிறுவனத்தின் கொள்கையின்படி இருக்கும். இதுவரையிலான மெசேஜ்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

தனிப்பட்ட கணக்குகளுக்கு இதுவரையிலான மெசேஜ்களை நீங்கள் இயக்கலாம் அல்லது முடக்கலாம். Google Workspace கணக்குகளுக்கு அவை உங்கள் நிறுவனத்தின் அமைப்புகளைப் பொறுத்து இருக்கும். இதுவரையிலான மெசேஜ்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

பெயர்

ஸ்பேஸின் நிர்வாகி அதற்கான பெயரைத் தேர்வுசெய்யலாம்.

நீங்கள் Google Workspace கணக்கைப் பயன்படுத்துபவராகவும் ஸ்பேஸை உருவாக்கியவர் உங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தால் அந்த ஸ்பேஸின் பெயரை நீங்கள் மாற்றலாம்.

தனிப்பட்ட கணக்கின் மூலம் ஸ்பேஸை உருவாக்கியிருந்தால் ஸ்பேஸில் உள்ள அனைவராலும் அதன் பெயரை மாற்ற முடியும்.

உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும்.

விளக்கம் ஸ்பேஸின் நிர்வாகி அறையின் விளக்கத்தைத் தேர்வுசெய்யலாம். நேரடி மெசேஜ்களுக்கு விளக்கங்கள் இருக்காது.
இயல்பு அறிவிப்புகள் தாங்கள் உறுப்பினராக இருக்கும் உரையாடல்களுக்கும் @ மூலம் குறிப்பிடப்படும்போதும் உறுப்பினர்கள் அறிவிப்பைப் பெறுவார்கள். ஒவ்வொரு மெசேஜிற்கும் உறுப்பினர்கள் அறிவிப்புகளைப் பெறுவார்கள்.
மெம்பர்ஷிப்

ஸ்பேஸில் இருந்து உறுப்பினர்கள் வெளியேறலாம். ஸ்பேஸில் அவர்கள் மீண்டும் சேர, அவர்களை வேறொரு உறுப்பினர் சேர்க்கவோ அழைக்கவோ வேண்டும்.


உதவிக்குறிப்பு: ஸ்பேஸ் கண்டறியக்கூடியதாக இருந்தால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதில் மீண்டும் சேரலாம்.

உறுப்பினர்கள் வெளியேறலாம், மீண்டும் சேரலாம்.

உதவிக்குறிப்பு: டிசம்பர் 2020க்கு முன்பு உருவாக்கப்பட்ட நேரடி மெசேஜ்களில் இருந்து உறுப்பினர்கள் வெளியேற முடியாது.
அதே உறுப்பினர்கள் இருக்கும் பல உரையாடல் ஸ்பேஸ்கள் ஒரே குழுவுடன் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்பேஸ்களைக் கொண்டிருக்கலாம். ஒரே குழுவுடன் 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழு உரையாடல்களைக் கொண்டிருக்கலாம்.
பணிகளை உருவாக்குதலும் ஒதுக்குதலும் பணிகளை உருவாக்கலாம், அவற்றை ஸ்பேஸின் பிற உறுப்பினர்களுக்கு ஒதுக்கலாம். பெயரிடப்படாத குழு உரையாடல்களில் பணி தொடர்பான அம்சங்கள் இல்லை.
பகிர்ந்த ஃபைல்கள் ஸ்பேஸில் ஃபைல்களைப் பகிரலாம், பகிரப்பட்ட ஃபைல்களின் பட்டியலைப் பார்க்கலாம். குழுவில் ஃபைல்களைப் பகிரலாம், ஆனால் பகிரப்பட்ட ஃபைல்களின் பட்டியலைப் பார்க்க முடியாது.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
133945464196878551
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false