Google Chat மெசேஜ்களைத் தேடுதல்

Google Chatடில் நீங்கள்:

  • மெசேஜ்கள் அனைத்தையும் தேடலாம்.
  • குறிப்பிட்ட நபர்கள் உள்ள மெசேஜ்களைத் தேடலாம்.
  • படங்கள் போன்ற குறிப்பிட்ட வகையான உள்ளடக்கம் இருக்கும் மெசேஜ்களைத் தேடலாம்.

முக்கியம்:

  • Gmailலில் Chat மெசேஜ்களைத் தேட Gmailலில் Chatடை இயக்கவும்.
  • நீங்கள் சேர்ந்திருக்கும் அல்லது உங்களால் சேர முடிகின்ற உரையாடல்களில் உள்ள மெசேஜ்களைத் தேடலாம்.
  • தேடல் முடிவுகளை வடிகட்ட, தேடும் ஆப்பரேட்டர்களையும் பயன்படுத்தலாம்.
  • Gmail APIயைப் பயன்படுத்தி மெசேஜ்களைத் தேட முடியாது.
  • சேர்வதற்கு அழைக்கப்பட்டிருந்தாலும் கூட, வேறு நிறுவனத்திற்குச் சொந்தமான உரையாடல்கள் அல்லது ஸ்பேஸ்களில் நீங்கள் மெசேஜ்களைத் தேட முடியாது.

Chat மற்றும் Gmailலில் மெசேஜ்களைத் தேடுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. மேற்புறத்தில் உள்ள தேடல் பெட்டியைக் கிளிக் செய்யவும்.
  3. தேடல் வார்த்தைகளை டைப் செய்யவும்.
    • Gmailலில்: in:chats என்ற தேடும் ஆப்பரேட்டரையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
  4. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • Gmailலில்: தேடல் பெட்டியின் கீழே உள்ள உரையாடல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • சமீபத்திய தேடல்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. தேவையான முடிவைத் திறக்க அதைக் கிளிக் செய்யவும்.

ஸ்பேஸ் அல்லது உரையாடலில் மெசேஜ்களைத் தேடுதல்

  1. Chatடில், தேட விரும்பும் ஸ்பேஸ் அல்லது உரையாடலைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள இந்த உரையாடலில் தேடுவதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.
  3. தேடல் வார்த்தைகளை டைப் செய்யவும்.
  4. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • Enter பட்டனை அழுத்தவும்.
    • சமீபத்திய தேடல்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. தேவையான முடிவைத் திறக்க அதைக் கிளிக் செய்யவும்.

மெசேஜ்களை வடிகட்டுதல் மற்றும் வரிசைப்படுத்துதல்

  1. Chatடில் மேற்புறத்தில் உள்ள தேடல் பெட்டியைக் கிளிக் செய்யவும்.
  2. தேடல் வார்த்தைகளை டைப் செய்யவும்.
    • நீங்கள் டைப் செய்யும்போதே கீழே பரிந்துரைகள் காட்டப்படும். மீதமுள்ள வினவலைத் தானாக நிரப்ப "tab" பட்டனை அழுத்தவும்.
  3. Enter பட்டனை அழுத்தவும்.
  4. பின்வரும் வகையான மெசேஜ்களைக் கண்டறிய உதவும் வடிப்பானைத் தேர்ந்தெடுக்கவும்:
    • அனுப்புநர்: குறிப்பிட்ட நபர்கள் அனுப்பிய மெசேஜ்கள்.
    • இதில் கூறப்பட்டுள்ளது: குறிப்பிட்ட உரையாடலிலோ ஸ்பேஸிலோ கூறப்பட்ட மெசேஜ்கள்.
    • தேதி: குறிப்பிட்ட தேதி வரம்பிற்குள் அனுப்பப்பட்ட மெசேஜ்கள்.
    • ஃபைல் இருப்பவை: ஆவணங்கள், விரிதாள்கள், ஸ்லைடுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மெசேஜ்கள்.
    • இணைப்பு இருப்பவை: இணைப்புகள் உள்ள மெசேஜ்கள்.
    • என்னைக் குறிப்பிட்டவை: நீங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் மெசேஜ்கள்.
    • நான் இருக்கும் உரையாடல்கள் மட்டும்: நீங்கள் உறுப்பினராக இருக்கும் உரையாடல்களில் உள்ள மெசேஜ்கள்.
  5. விருப்பத்திற்குரியது: மெசேஜ்களை வரிசைப்படுத்த, வடிப்பான்களுக்குக் கீழே உள்ள வரிசைப்படுத்துதல் மெனுவைக் கிளிக் செய்யவும்.
    • மிகவும் தொடர்புடையவை: உங்கள் தேடல் வார்த்தைகளுடன் எந்த அளவுக்குப் பொருந்துகின்றன என்பதை வைத்து மெசேஜ்கள் வரிசைப்படுத்தப்படும்.
    • மிகச் சமீபத்தியவை: எவ்வளவு சமீபத்தியது என்பதை வைத்து மெசேஜ்கள் வரிசைப்படுத்தப்படும்.
  6. தேவையான மெசேஜைத் திறக்க அதைக் கிளிக் செய்யவும்.
    • நீங்கள் சேராத ஸ்பேஸ்களில் உள்ள மெசேஜ்களும் காட்டப்படலாம். அந்த ஸ்பேஸ்களில் சேர விரும்பினால், மெசேஜுக்கு அடுத்து காட்டப்படுகின்ற சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

பரிந்துரைக்கப்படும் தேடல் முடிவுகளை நீக்குதல்

Chat தேடல் பட்டியில் வார்த்தைகளை டைப் செய்யும்போது நீங்கள் இதுவரை தேடியவற்றின் அடிப்படையில் பரிந்துரைகள் காட்டப்படலாம். மெசேஜ்களைக் கண்டறிய, பரிந்துரையைத் தேர்ந்தெடுக்கலாம்.

  • பயன்படுத்தப்பட்ட பரிந்துரைகள் 90 நாட்களுக்குச் சேமிக்கப்படும்.
  • பரிந்துரைகள் தொடர்பான பதிவுகள் Chatடிற்கும் Gmailலில் உள்ள Chatடிற்கும் இடையே பகிரப்படாது.
  • சமீபத்தில் தேடியவற்றை மட்டுமோ இதுவரை தேடியவற்றை முழுமையாகவோ நீக்கலாம்.
  1. Chatடில் தேடல் பட்டியைக் கிளிக் செய்யவும்.
  2. “சமீபத்திய தேடல்கள்" என்பதன் கீழே நீங்கள் இவற்றைச் செய்யலாம்:
    • சமீபத்திய தேடலை நீக்குதல்: தேடலைக் கிளிக் செய்து அதன் பிறகு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • தேடல்கள் அனைத்தையும் நீக்குதல்: அனைத்தையும் நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4511394596840565502
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false