Google Chat ஆப்ஸைப் பயன்படுத்தத் தொடங்குதல்

உங்களுடன் பணிபுரிபவருக்கு மெசேஜ் அனுப்பவும், அவருடன் கூட்டுப்பணி செய்யவும் Google Chatடைப் பயன்படுத்துங்கள். Chatடைப் பயன்படுத்தி இவற்றைச் செய்யலாம்:

  • ஒருவருடன் நேரடியாகவோ சிறிய குழுச் செய்திகளிலோ பேசலாம்.
  • ஸ்பேஸ்கள் என்று அழைக்கப்படும் பெரிய, பெயரிடப்பட்ட குழுக்களில் கூட்டுப்பணி செய்யலாம்.
  • Google Docs, Slides, Sheets ஆகியவற்றில் இருந்து ஃபைல்களை அனுப்பலாம் பகிரலாம்.
  • பணிகளையும் மீட்டிங்குகளையும் அமைக்கலாம்.
  • உங்கள் பணிச் செயல்திறனை மேம்படுத்த ஆப்ஸைச் சேர்க்கலாம்.

Gmailலில் Chatடைப் பயன்படுத்துதல்

டெஸ்க்டாப்பில் நேரடியாக Gmailலில் இருந்தும், Android மற்றும் iOSஸில் Gmail ஆப்ஸில் இருந்தும் Chatடைப் பயன்படுத்தலாம்.

Gmailலில் Chatடைக் கண்டறிய முடியவில்லை என்றால், Gmail அமைப்புகளில் அதை இயக்க வேண்டியிருக்கலாம். Gmailலில் உள்ள Chat குறித்து மேலும் அறிக.

Gmail அமைப்புகளுக்குச் செல்

இணையத்தில் இருந்து Chatடை அணுகுதல்

இணையத்தில் இருந்து பிறருக்கு மெசேஜ் அனுப்ப, உலாவியில் Chatடைத் திறக்கவும்.

உரையாடலைத் திற

உதவிக்குறிப்பு: Google Chrome உலாவிக்கான தனித்தியங்கும் ஆப்ஸையும் நிறுவலாம். தனித்தியங்கும் Chat ஆப்ஸை எப்படிப் பதிவிறக்குவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Chatடைப் பதிவிறக்குதல் மற்றும் நிறுவுதல்

மொபைல் சாதனத்தில் இருந்து பிறருக்கு மெசேஜ் அனுப்ப, Android மற்றும் iOSஸிற்கான Chat ஆப்ஸைப் பதிவிறக்கவும்.

Android  iOS

Google Chat ஆப்ஸில் உள்நுழைதல்

முக்கியம்: Chaடைப் பயன்படுத்துவதற்கு உங்களிடம் Google கணக்கு இருக்க வேண்டும். Google கணக்கை உருவாக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

  1. உலாவியில் Chatடைத் திறக்கவும்.
  2. கேட்கப்பட்டால் உள்நுழையவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் Google கணக்கில் உள்ள பெயரும் சுயவிவரப் படமும் Chatடில் காட்டப்படும். உங்கள் Google கணக்கில் உள்ள தனிப்பட்ட தகவலை மாற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பள்ளி அல்லது பணியிடத்தில் Chatடைப் பயன்படுத்துதல்

Google Workspaceஸின் அங்கமான பணி/பள்ளிக் கணக்கை வைத்திருக்கிறீர்கள் என்றால், பெரிய ஸ்பேஸ்களிலோ சிறிய குழுக்களிலோ வேறொருவருடனோ உரையாட Chatடைப் பயன்படுத்தலாம்.

Chatடைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் நிறுவனம் Chatடை அமைத்திருக்க வேண்டும். Chat காட்டப்படவில்லை என்றால், உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும். உங்கள் நிர்வாகியைக் கண்டறிவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9301524120085608293
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false