வீடியோ மீட்டிங்கைத் தொடங்குதல்

Google Chatடில் இருந்து வீடியோ மீட்டிங்கைத் தொடங்கலாம்.

முக்கியம்: அறைகளிலோ குழு உரையாடல்களிலோ சேர்வதற்கு வெளிப்புறப் பயனர்களை உங்கள் நிறுவனம் அனுமதித்தால், அறை அல்லது குழுவில் உள்ள எவரும் அனுமதி கேட்காமலேயே வீடியோ மீட்டிங்கில் சேரலாம்.

உதவிக்குறிப்பு: உதவிக்குறிப்பு: காலாவதியான குறியீட்டுடன் மீட்டிங்கில் இணைய முயல்வதைத் தவிர்ப்பதற்கும் எதிர்கால மீட்டிங்குகளைச் சிறப்பாகத் திட்டமிடுவதற்கும் மீட்டிங் குறியீடுகள் எப்போது காலாவதி ஆகின்றன என்பதைச் சரிபாருங்கள். Google Meet மீட்டிங் குறியீடுகள் குறித்து அறிக.

Chat, Gmail போன்றவற்றில் இருந்து வீடியோ மீட்டிங்கைத் தொடங்குதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. ஓர் உரையாடலைத் திறக்கவும்.
  3. பதிலை டைப் செய்வதற்கான இடத்தில், வீடியோ மீட்டிங்கைச் சேர்ப்பதற்கான ஐகானை கிளிக் செய்து அதன் பிறகு அனுப்புவதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.
  4. வீடியோ மீட்டிங்கில் சேர, வீடியோ மீட்டிங்கில் சேர் அதன் பிறகு இப்போதே சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: Meet வீடியோ மீட்டிங்குகள் குறித்து மேலும் அறிய Meet உதவி மையத்திற்குச் செல்லவும்.

 

Chat அல்லது Gmailலில் இருந்து நேரடியாக ஒருவரை அழைத்தல்

கவனத்திற்கு: Chrome உலாவியில் Chat, Gmail போன்றவற்றில் இருந்து நேரடியாக நீங்கள் ஒருவரை அழைக்கலாம். Chrome உலாவியைப் பயன்படுத்தாத ஒருவரை அழைத்தால் அவரால் அழைப்பைப் பெறவும் சேரவும் முடியும். ஆனால் அழைப்பில் சேருவதற்கான ஒலியைக் கேட்க முடியாது.

Chat, Gmail போன்றவற்றில் இருந்து குரல் அல்லது வீடியோ மீட்டிங்கைத் தொடங்கலாம். எதிர் முனையில் இருப்பவர் அழைப்பைப் பெறும்போது அவருக்கு ரிங்டோன் ஒலி கேட்கும்.

  1. Chatடில் நேரடி மெசேஜைத் திறக்கவும்.
  2. மேலே உள்ள, வீடியோ அழைப்பைத் தொடங்குவதற்கான ஐகானை கிளிக் செய்யவும். ஒரு சிறிய சாளரத்தில் அழைப்பு திறக்கப்படும்.
  3. அழைப்பை முடிக்க, அழைப்பை முடிப்பதற்கான ஐகானை Call end icon கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: அழைப்புச் சாளரத்தைச் சரிசெய்ய வேண்டும் எனில்:

  • புதிய உலாவிப் பக்கத்திற்கு அழைப்பை நகர்த்த, ஓர் உலாவிப் பக்கத்திற்குச் செல் New window என்பதைக் கிளிக் செய்யவும்.
  • புதிய உலாவிப் பக்கத்திற்குச் செல்ல, சாளரத்தைக் கிளிக் செய்து பிடித்திருக்கவும்.
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12980925457401411569
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false