Google Chatடில் மெசேஜைத் திருத்துதல் அல்லது நீக்குதல்

மெசேஜில் பிழை ஏற்பட்டிருந்தாலோ நீங்கள் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய விரும்பினாலோ மெசேஜைத் திருத்தலாம் நீக்கலாம்.

கவனத்திற்கு

  • மெசேஜைத் திருத்தியபிறகு, முந்தைய திருத்தத்தையோ அசல் மெசேஜையோ மீண்டும் பெற முடியாது.
  • மெசேஜை நீக்கியபிறகு அதைச் செயல்தவிர்க்க முடியாது.
  • உரையாடல் அறிவிப்புகளில் அசல் மெசேஜ் காட்டப்படலாம்.
  • நீங்கள் (அல்லது உரையாடலில் இருக்கும் பிற உறுப்பினர்கள்) மெசேஜை நீக்கியபிறகு, உங்கள் Google கணக்கில் இருந்து மெசேஜ் நிரந்தரமாக நீக்கப்படும். அதை மீட்டெடுக்க முடியாது.
  • இதற்கு முன்பு திருத்தப்பட்ட மெசேஜ்களை உங்கள் Google கணக்கில் இருந்து பதிவிறக்கிக்கொள்ளலாம். உங்கள் தரவைப் பதிவிறக்குவதற்கான வழிமுறையைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அனுப்பிய மெசேஜைத் திருத்துதல்

  1. கம்ப்யூட்டரில், உரையாடலுக்குச் சென்று மெசேஜ் மீது கர்சரை வைக்கவும்.
  2. 'திருத்து' ஐகானை கிளிக் செய்யவும்.
  3. மாற்றங்களைச் செய்யவும்.
  4. மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

அனுப்பிய மெசேஜை நீக்குதல்

  1. கம்ப்யூட்டரில், உரையாடலுக்குச் சென்று மெசேஜ் மீது கர்சரை வைக்கவும்.
  2. 'நீக்கு' ஐகானை கிளிக் செய்யவும்.
  3. உறுதிசெய்ய, நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

மெசேஜை நீக்கவோ திருத்தவோ முடியாதது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

  • ஆப்ஸில் இருந்து மெசேஜ்களைத் திருத்த முடியாது.
  • தனிப்பட்ட கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், பின்வரும் சூழல்களில் உங்களால் மெசேஜ்களை நீக்க முடியாது:
    • வேறொரு நிறுவனம் தொடங்கிய ஸ்பேஸில் நீங்கள் இருக்கும்போது.
    • Google Workspace கணக்கிற்கு நீங்கள் நேரடியாக அல்லது குழுவில் மெசேஜ் அனுப்பும்போது.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12900237219104782019
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false