Google Chat ஆப்ஸை ஸ்கிரீன் ரீடர் மூலம் பயன்படுத்துதல்

Google Chat மூலம் தனிநபருக்கோ பலருக்கோ நேரடி மெசேஜ்களை அனுப்பலாம். குழுவுடன் நடக்கும் உரையாடல்களில் அனைவருக்கும் ஒரே நேரத்தில் மெசேஜ் அனுப்ப ஸ்பேஸை உருவாக்கலாம்.

ஆப்ஸ் இருந்தால் உங்கள் வேலை தானாக நடக்க அவற்றைப் பயன்படுத்தலாம். Google Chatடில் ஆப்ஸைப் பயன்படுத்த பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்த வேண்டும், ஆப்ஸை நிறுவ உங்கள் Google Workspace நிர்வாகி உங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்.

அறிமுகம்

இந்தக் கட்டுரை, தலைப்புகள் கொண்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் குறிப்பிட்ட பிரிவுக்குச் செல்ல, கீழேயுள்ள இணைப்புகளைப் பயன்படுத்துங்கள்.

விரைவான தொடக்கம்

இந்தக் கட்டுரை chat.google.com பக்கத்திற்கானது. நீங்கள் Chatடைப் பயன்படுத்த உதவும் சிறப்பான பல தகவல்கள் இதில் உள்ளன. இந்தக் கட்டுரையை முழுதாகப் படிக்க நேரம் எடுக்கலாம். விரைவாகத் தொடங்க விரும்பினால், நேரடி மெசேஜ்களிலும் ஸ்பேஸ்களிலும் மெசேஜ்களைப் படிப்பதற்கும் அனுப்புவதற்குமான இந்த உடனடி உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.

  • JAWS பயன்படுத்தினால்: விர்ச்சுவல் கர்சரை முடக்கவும்.
  • NVDA பயன்படுத்தினால்: ஃபோகஸ் பயன்முறைக்கு மாறவும்.
  • ChromeOS பயன்படுத்தினால்: ஒற்றை விசைப் பயன்முறையை முடக்கவும்.
  • MacOS பயன்படுத்தினால்: Quick Nav அம்சத்தை முடக்கவும்.

உங்களுக்கு வரும் உரையாடல்களைப் படிக்க:

  1. உரையாடல்களின் பட்டியலுக்குச் செல்ல, h பட்டனை அழுத்திய பிறகு c பட்டனை அழுத்தவும்.
  2. விரும்பும் உரையாடலுக்குச் செல்லும் வரை மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  3. உரையாடலைத் திறந்து, மெசேஜைத் திருத்துவதற்கான புலத்திற்குச் சென்று மெசேஜ்களை டைப் செய்ய Enter பட்டனை அழுத்தவும்.
  4. மெசேஜைத் திருத்துவதற்கான புலத்தில் இருந்து வெளியேறி, மெசேஜ்களின் பட்டியலுக்குச் செல்ல Escape பட்டனை அழுத்தவும்.
  5. மெசேஜ்களைப் படிக்க மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  6. மெசேஜைத் திருத்துவதற்கான புலத்திற்கு மீண்டும் செல்ல r பட்டனை அழுத்தவும்.

சமீபத்திய மெசேஜ்களைப் பார்க்க, ஆனால் மெசேஜைத் திருத்துவதற்கான புலத்திலேயே கர்சரை வைத்திருக்க:

  • Windowsஸைப் பயன்படுத்தினால்: Alt + {எண்} அழுத்தவும்.
  • ChromeOSஸைப் பயன்படுத்தினால்: Alt + Shift + {எண்} அழுத்தவும்.
  • MacOS பயன்படுத்தினால்: Option + {எண்} பட்டன்களை அழுத்தவும்.
  • சமீபத்திய 9 மெசேஜ்களுக்கு {எண்} என்பதற்குப் பதிலாக 1ல் இருந்து 9 வரையிலான எண்களை டைப் செய்யவும்.

ஒருவருடன் உரையாடலைத் தொடங்க:

  1. ”ஒருவரையோ பலரையோ சேர்க்கவும்” காம்போ பெட்டியைத் திறக்க Ctrl + k அழுத்தவும்.
  2. நபரின் பெயரையோ மின்னஞ்சல் முகவரியையோ டைப் செய்யவும். சரியான பொருத்தத்தைக் கேட்டால் Ctrl + Enter பட்டன்களை அழுத்தவும். சரியான பரிந்துரைகளைப் பார்க்க கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  3. இப்போது கர்சர் மெசேஜைத் திருத்துவதற்கான புலத்திற்குச் செல்லும். மெசேஜை டைப் செய்து Enter பட்டனை அழுத்தவும்.
உதவிக்குறிப்பு: நீங்கள் திருத்துதல் பயன்முறையில் இல்லை எனில் q ஷார்ட்கட் Ctrl + k பட்டன்களைப் போலவே வேலை செய்யும்.

ஸ்பேஸ்களைப் படிக்க:

  1. ஸ்பேஸ்களின் பட்டியலுக்குச் செல்ல, h பட்டனை அழுத்திய பிறகு r பட்டனை அழுத்தவும்.
  2. விரும்பும் ஸ்பேஸைக் கண்டறிய மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  3. ஸ்பேஸுக்கான தலைப்புகளின் பட்டியலுக்குச் செல்ல Enter பட்டனை அழுத்தவும்.
  4. வெவ்வேறு தலைப்புகளுக்குச் செல்ல மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  5. விரும்பும் தலைப்பைத் திறக்க அதன் மீது கர்சரை வைத்து வலது அம்புக்குறியை அழுத்தவும். தலைப்பில் உள்ள மெசேஜ்களைப் படிக்க மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியைப் பயன்படுத்தவும்.
  6. தலைப்புகளின் பட்டியலுக்கு மீண்டும் செல்ல இடது அம்புக்குறியை அழுத்தவும்.
  7. மெசேஜைத் திருத்துவதற்கான புலத்திற்குச் செல்ல r பட்டனை அழுத்தவும். மெசேஜை டைப் செய்யவும். தலைப்பில் மெசேஜைச் சேர்க்க Enter பட்டனை அழுத்தவும்.
  8. புதிய தலைப்பைத் தொடங்க Ctrl + s பட்டன்களை அழுத்தவும்.

தொடங்குதல்

பரிந்துரைக்கப்படும் உலாவியும் ஸ்கிரீன் ரீடர்களும்

Google Chatடைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுவது Chrome மற்றும்:

  • Windowsஸில் NVDA அல்லது JAWS
  • ChromeOSஸில் ChromeVox
  • MacOSஸில் VoiceOver

Chat ஆப்ஸை வெப் ஆப்ஸாகப் பயன்படுத்துதல்

chat.google.com தளத்தை இணையப் பக்கமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வெப் ஆப்ஸாகப் பயன்படுத்தலாம். chat.google.com தளத்தை வெப் ஆப்ஸாகப் பயன்படுத்தும்போது:

  • ஸ்கிரீன் ரீடர் வலை உலாவி ஷார்ட்கட்களை முடக்கவும். விவரங்களுக்கு, கீழேயுள்ள ஸ்கிரீன் ரீடரை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.
  • நகர்வற்கும் படிப்பதற்கும் ஸ்கிரீன் ரீடரின் கட்டளைகளுக்குப் பதிலாக Chatடின் கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்தவும். விவரங்களுக்கு, கீழேயுள்ள Chatடில் நகர்தல் என்பதைப் பார்க்கவும்.

உதவிக்குறிப்பு: சில நேரங்களில் chat.google.com தளத்தை இணையப் பக்கமாகவும் ஸ்கிரீன் ரீடர் உலாவிக் கட்டளைகளையும் பயன்படுத்த வேண்டும். அந்த நேரம் வரும்போது நாங்கள் தெரிவிப்போம்.

ஸ்கிரீன் ரீடரை அமைத்தல்

சில ஸ்கிரீன் ரீடர் அமைவுகளுக்கு Chatடை வெப் ஆப்ஸாகப் பயன்படுத்த வேண்டும்:

  • JAWS: விர்ச்சுவல் கர்சரை முடக்கவும். "ஆஃப்” என்று கேட்கும் வரை Insert + z பட்டன்களை அழுத்தவும்.
  • NVDA: ஃபோகஸ் பயன்முறையை இயக்கவும். கீபோர்டில் டைப் செய்வதைப் போன்ற கிளிக் சத்தம் கேட்கும் வரை Insert + Spacebar அழுத்தவும்.
  • ChromeVox: ஒற்றை விசைப் பயன்முறையை முடக்கவும். “ஒற்றை விசைப் பயன்முறை முடக்கப்பட்டது” என்று கேட்கும் வரை Search பட்டனை விரைவாக இருமுறை அழுத்தவும்.
  • VoiceOver: Quick Nav அம்சத்தை முடக்கவும். ”Quick Nav முடக்கப்பட்டது” என்று கேட்கும் வரை இடது + வலது அம்புக்குறியை அழுத்தவும்.

Chatடைத் திறத்தல்

chat.google.com தளத்திற்குச் செல்லவும். Chatடைத் திறக்கும்போது கீபோர்டின் கர்சர், மேற்பகுதிக்கு அருகே பேனர் லேண்ட்மார்க்கின் உள்ளே முதன்மை மெனு பட்டனில் இருக்கும். Chatடை முதல் முறை திறக்கும்போது அடுத்த பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போல நீங்கள் அதை ஓர் இணையப் பக்கமாகவே வைத்து உலாவலாம். உலாவி முடித்த பிறகு, மேலே ஸ்கிரீன் ரீடரை அமைத்தல் எனும் பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போல Chatடை வெப் ஆப்ஸாக மாற்றிப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.

Chat இடைமுகம் பற்றிய அறிமுகம்

Chatடில் 4 முதன்மையான பகுதிகள் உள்ளன:

  • உங்கள் ஸ்கிரீன் ரீடரால் பேனர் லேண்ட்மார்க் எனக் குறிப்பிடப்படும் மேற்பகுதி: இதில் உங்கள் நிலை, தேடல் பட்டி, பிற ஆப்ஸுக்கும் பயனர் கணக்குகளுக்கும் மாறுவதற்கான Google பட்டி போன்ற பொதுவான அமைப்புகளும் கட்டுப்பாடுகளும் இருக்கும்.
  • நகர்தல் லேண்ட்மார்க் என்று குறிப்பிடப்படும் இடதுபுற நகர்தல் பகுதி: இடதுபுறத்தில் Chat உரையாடல்கள், ஸ்பேஸ்களின் உள்ளடக்கம், Meet தலைப்புகள் ஆகியவை இருக்கும்.
  • முதன்மை லேண்ட்மார்க் என்று குறிப்பிடப்படும் Chat உள்ளடக்கம்: இதில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Chat உரையாடல், ஸ்பேஸ் உள்ளடக்கம், மீட்டிங் தகவல்கள் போன்றவை இருக்கும். இந்தப் பகுதியில் கடந்தகால மெசேஜ்களின் பட்டியல், புதிய மெசேஜ்களுக்கான மெசேஜைத் திருத்துவதற்கான புலம், செயல் பட்டன்கள் ஆகியவை இருக்கும்.
  • காம்ப்ளிமெண்ட்டரி லேண்ட்மார்க் என்று குறிப்பிடப்படும் வலதுபுறப் பக்கவாட்டு பேனல்: இது Calendar, Keep, Tasks, Contacts போன்ற பிற Google தயாரிப்புகளுக்கான உட்பொதிக்கப்பட்ட அணுகலை வழங்குகிறது.

ஒருவருடனோ குழுவுடனோ உரையாடுவது மெசேஜ்களின் பட்டியலை உருவாக்கும். இயல்பாகவே ‘இதுவரையிலான மெசேஜ்கள்’ அம்சம் முடக்கப்பட்டிருக்கும், மேலும் வந்துசேர்ந்த 24 மணிநேரத்தில் மெசேஜ்கள் மறைந்துவிடும். ஸ்பேஸ்கள் என்பது அணியுடனோ குழுவுடனோ தொடர்ச்சியாக நீண்ட நேரம் உரையாடுவதற்கானது. ‘இதுவரையிலான மெசேஜ்கள்’ அம்சம் இயல்பாகவே இயக்கப்பட்டிருக்கும். நீங்கள் ஸ்பேஸ்களை இருநிலைகளைக் கொண்ட கிளை உரையாடல்களாக உருவாக்கும் தலைப்புகளாக ஒழுங்கமைக்கலாம்.

முதன்மை Chat உள்ளடக்கத்தில் நகர்தல்

Chat மற்றும் ஸ்பேஸ்களின் உள்ளடக்கத்தில் இரண்டு பயன்முறைகள் உள்ளன: திருத்துதல் மற்றும் நகர்தல். மெசேஜைத் திருத்துவதற்கான புலத்தில் கர்சர் இருக்கும்போது Chat திருத்துதல் பயன்முறையில் இருக்கும். திருத்துதலில் இருந்து நகர்தல் பயன்முறைக்கு மாற Escape பட்டனை அழுத்தவும்.

ஒவ்வொரு பயன்முறையிலும் Tab மற்றும் அம்புக்குறி பட்டன்கள் வெவ்வேறு விதமாகச் செயல்படும்:

  • திருத்துதல் பயன்முறையில்: மேல்நோக்கிய அம்புக்குறி கடைசியாக இடுகையிடப்பட்ட மெசேஜுக்குச் சென்று, அதைத் திருத்தி மீண்டும் அனுப்ப உங்களை அனுமதிக்கும்.
  • நகர்தல் பயன்முறையில்:
    • மேல்நோக்கிய அம்புக்குறி மிகச் சமீபத்திய மெசேஜுக்குச் செல்லும், பிறகு பழைய மெசேஜ்களுக்குச் செல்லும்.
    • மெசேஜில் வைத்து Tab பட்டனை அழுத்தினால் இந்த பட்டன்களுக்குக் கர்சர் செல்லும்: ரியாக்ஷனைச் சேர் (ஈமோஜி), மெசேஜைத் திருத்து (நீங்கள் அதை இடுகையிட்டிருந்தால்), படிக்காததாகக் குறி, மேலும் பல செயல்கள்.
    • தலைப்புகள் கொண்ட ஸ்பேஸில்:
      • மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறி மூலம் தலைப்பிற்குள் நகரலாம்.
      • இடது அம்புக்குறி மூலம் தலைப்புகளின் பட்டியலுக்குச் செல்லலாம், பிறகு மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறி மூலம் தலைப்புகளுக்கு இடையே நகரலாம்.
      • வலது அம்புக்குறி மூலம் தலைப்பில் இருக்கும் மெசெஜ்களுக்குச் செல்லலாம்.

அடிப்படை நகர்தல்

Tab மற்றும் அம்புக்குறி பட்டன்கள் அடிப்படை நகர்தலுக்குப் பயன்படுகின்றன. கூடுதல் Chat நகர்தலுக்கு இந்தக் கட்டளைகளைப் பயன்படுத்தலாம்:

  • Chat மற்றும் ஸ்பேஸ்களுக்கான இடதுபுற நகர்தல் பகுதியில்:
    • வேறு உரையாடலைத் தேர்ந்தெடுக்க மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
    • முந்தைய அல்லது அடுத்த படிக்காத உரையாடலுக்குச் செல்ல Shift + மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
    • Chat, ஸ்பேஸ்கள் அல்லது Meetடுக்கு இடையே நகர, Ctrl + மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
    • Chat அல்லது ஸ்பேஸ் உரையாடல் மீது கர்சர் இருந்தால்: அதைத் திறக்க வலது அம்புக்குறி அல்லது Enter பட்டனை அழுத்தவும்.
  • முதன்மை மெசேஜ் பகுதியில்: நகருவதற்கு Tab மற்றும் மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  • மெசேஜைத் திருத்துவதற்கான புலத்தில் கர்சர் இருக்கும்போது:
    • நீங்கள் கடைசியாக அனுப்பிய மெசேஜைத் திருத்த மேல்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
    • எல்லா மெசேஜ்களையும் பார்க்க Escape பட்டனை அழுத்தி, மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  • ஸ்பேஸின் தலைப்புகளில் கர்சர் இருக்கும்போது:
    • இடதுபுற உலாவுதல் பகுதிக்குச் செல்ல இடது அம்புக்குறியை அழுத்தவும்.
    • தேர்ந்தெடுத்த தலைப்பின் மெசேஜ்களுக்குச் செல்ல வலது அம்புக்குறியை அழுத்தவும்.
  • ஸ்பேஸில் மெசேஜ் மீது கர்சர் இருந்தால்: தலைப்புகளுக்குச் செல்ல இடது அம்புக்குறியை அழுத்தவும்.
  • தலைப்புகள் இல்லாமல் ஸ்பேஸை இயக்கும்போது மெசேஜைத் திருத்துவதற்கான புலத்திற்குக் கர்சர் செல்லும்.

மேம்பட்ட உலாவுதல்

Chat உங்களுக்குப் பழக்கப்பட்ட பிறகு, கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்துவதுதான் Chatடில் திறம்பட வேலை செய்வதற்கான சிறந்த வழி.

Chat கீபோர்டு ஷார்ட்கட்களின் முழுப் பட்டியலையும் பார்க்க:

  1. ஸ்கிரீன் ரீடரில் விர்ச்சுவல் கர்சர் அல்லது உலாவிப் பயன்முறையை முடக்கவும்.
  2. கர்சர் மெசேஜைத் திருத்துவதற்கான புலத்தில் இருந்தால் Escape பட்டனை அழுத்தவும்.
  3. கேள்விக்குறி பட்டனை (Shift + ஸ்லாஷ்) அழுத்தவும்.

கீபோர்டு ஷார்ட்கட்களைப் படிக்க Chatடை இணையப் பக்கமாகப் பயன்படுத்தவும். ஸ்கிரீன் ரீடரில் விர்ச்சுவல் கர்சர் அல்லது உலாவிப் பயன்முறையை இயக்கவும். கீபோர்டு ஷார்ட்கட்களின் பட்டியல் ஓர் அட்டவணையில் இருக்கும் என்பதால், அதை எளிதாகப் படிக்க ஸ்கிரீன் ரீடரின் அட்டவணை வாசிப்புக் கட்டளைகளைப் பயன்படுத்தவும். Tab பட்டனை அழுத்தும்போது கர்சர் முதலில் ஓர் இணைப்பிற்குச் செல்லும். சில கீபோர்டு ஷார்ட்கட்களை இயக்க அல்லது முடக்க அந்த இணைப்பைப் பயன்படுத்தலாம். கூடுதல் கீபோர்டு ஷார்ட்கட்களைப் பெற அந்த இணைப்பில் ‘முடக்கு’ என்று காட்டப்படுவதை உறுதிசெய்துகொள்ளவும்.

புதிய உலாவிப் பக்கத்தில் Google Chat கீபோர்டு ஷார்ட்கட்களைத் திறக்கலாம்.

பிரபலமான ஷார்ட்கட்கள்

ஷார்ட்கட்கள் Chrome மற்றும் Windows சாதனங்களுக்கானவை. Mac சாதனத்தில் Ctrl பட்டனுக்குப் பதிலாக Command பட்டனையும் Alt பட்டனுக்குப் பதிலாக Option பட்டனையும் பயன்படுத்தவும்.

  • ஸ்கிரீன் ரீடர் மூலம், Alt + {எண்} பட்டன்களை அழுத்தி Chat உரையாடலிலோ ஸ்பேஸ்கள் தலைப்பிலோ இருக்கும் கடைசி 9 மெசேஜ்கள் ஒவ்வொன்றையும் படிக்கலாம். ChromeVoxஸில் Alt + Shift + {எண்} பட்டன்களைப் பயன்படுத்தவும். VoiceOverரில் Option + {எண்} பட்டன்களைப் பயன்படுத்தவும். சமீபத்திய மெசேஜைக் குறிப்பிட {எண்} என்பதற்கு 1ஐயும் அதற்கு முந்தைய மெசேஜுக்கு எண் 2ஐயும் அதற்கு முந்தைய மெசேஜ்களுக்கு அடுத்தடுத்த எண்களையும் பயன்படுத்தவும். கர்சர் நகராது.
  • உரையாடலின் சமீபத்திய மெசேஜுக்குச் செல்ல Ctrl + j பட்டன்களை அழுத்தவும். திருத்துதல் பயன்முறை இயக்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது வேலை செய்யும். அத்துடன், மேலே 'அடிப்படை நகர்தல்' பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போல Escape பட்டனுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்தலாம்.
  • கர்சரை இடதுபுற உலாவுதல் பகுதியில் இருக்கும் Chat மெசேஜ்களுக்கு நகர்த்த h பட்டனை அழுத்திய பிறகு c பட்டனை அழுத்தவும்.
  • கர்சரை இடதுபுற உலாவுதல் பகுதியில் இருக்கும் ஸ்பேஸ்கள் மெசேஜ்களுக்கு நகர்த்த h பட்டனை அழுத்திய பிறகு r பட்டனை அழுத்தவும்.
  • நபர், குழு அல்லது ஸ்பேஸைச் சேர்க்க, உருவாக்க அல்லது கண்டறிய Ctrl + k பட்டன்களை அழுத்தவும். நீங்கள் திருத்துதல் பயன்முறையில் இல்லை எனில் q ஷார்ட்கட் Ctrl + k பட்டன்களைப் போலவே வேலை செய்யும்.
    • எதைச் சேர்க்க அல்லது உருவாக்க விரும்புகிறீர்களோ அதற்குச் செல்ல கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
    • ஏற்கெனவே இருக்கும் உரையாடலைக் கண்டறிய, பெயரின் ஒரு பகுதியை டைப் செய்யவும். காட்டப்படும் பட்டியலில் பொருத்தமான உரையாடலுக்குச் செல்ல கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  • நபர்கள், ஸ்பேஸ்கள் அல்லது மெசேஜ்களைக் கண்டறிய, திருத்துதல் பயன்முறையில் இல்லாதபோது ஸ்லாஷ் பட்டனை அழுத்தவும்.
  • ஸ்பேஸில் புதிய தலைப்பையோ Chatடில் புதிய மெசேஜையோ உருவாக்க Ctrl + s பட்டன்களை அழுத்தவும்.
  • Chat அல்லது ஸ்பேஸ் மெனுவைத் திறக்க Ctrl + g பட்டன்களை அழுத்தவும். விவரங்களுக்கு, கீழேயுள்ள மெசேஜ் மற்றும் ஸ்பேஸ்கள் விருப்பங்களை அணுகுதல் என்பதற்குச் செல்லவும்.
  • உரையாடல் அல்லது தலைப்புக்குப் பதிலளித்துவிட்டு, மெசேஜைத் திருத்துவதற்கான புலத்திற்குச் செல்ல r பட்டனை அழுத்தவும்.

வெவ்வேறு உறுப்புகளுடனான செயல்கள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, கீழேயுள்ள Chatடில் பொதுவான பணிகளை முடித்தல் என்ற பக்கத்திற்குச் சென்று உங்கள் ஸ்கிரீன் ரீடருக்கான ஆவணத்தைப் பார்க்கவும்.

ஸ்கிரீன் ரீடர் மூலம் Chatடில் பொதுவான பணிகளை முடித்தல்

நேரடி மெசேஜ்கள்

DMகள் மற்றும் Chat என்றும் அழைக்கப்படும் நேரடி மெசேஜ்கள் என்பவை உங்களுக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கும் இடையேயான உரையாடல்கள் ஆகும். நேரடி மெசேஜ்களில், மெசேஜ் பட்டியலுக்கு ஒரே ஒரு நிலைதான் இருக்கும்.

நேரடி மெசேஜைப் படித்தல்

  1. இடதுபுற உலாவுதல் பகுதியின் Chat பிரிவுக்குச் செல்ல Escape பட்டனை அழுத்திய பிறகு h பட்டனையும் c பட்டனையும் அழுத்தவும்.
  2. யாருடைய மெசேஜைப் படிக்க விரும்புகிறீர்களோ அவரைத் தேர்ந்தெடுக்க மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்திய பிறகு Enter பட்டனை அழுத்தவும்.
  3. உலாவுதல் பயன்முறைக்கு மாற Escape பட்டனை அழுத்தவும்.
  4. உரையாடலில் உள்ள முந்தைய மெசேஜ்களைப் பார்க்க மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  5. மெசேஜில் இணைப்பு இருந்தால் அந்த இணைப்பிற்குக் கர்சரை நகர்த்த Tab பட்டனை அழுத்தவும், அதன்பிறகு இணைப்பைத் திறக்க Enter பட்டனை அழுத்தவும்.

சமீபத்திய மெசேஜ்களைப் பார்க்க, ஆனால் மெசேஜைத் திருத்துவதற்கான புலத்திலேயே கர்சரை வைத்திருக்க:

  • Windowsஸைப் பயன்படுத்தினால்: Alt + {எண்} அழுத்தவும்.
  • ChromeOSஸைப் பயன்படுத்தினால்: Alt + Shift + {எண்} அழுத்தவும்.
  • MacOS பயன்படுத்தினால்: Option + {எண்} பட்டன்களை அழுத்தவும்.
  • சமீபத்திய 9 மெசேஜ்களுக்கு {எண்} என்பதற்குப் பதிலாக 1ல் இருந்து 9 வரையிலான எண்களை டைப் செய்யவும்.

நேரடி மெசேஜ்களுக்கு இடையே மாறுதல்

நீங்கள் மெசேஜ் அனுப்பிய நபரையோ குழுவையோ கண்டறிய:

  1. “ஒருவரையோ பலரையோ சேர்க்கவும்” காம்போ பெட்டியைத் திறக்க Ctrl + k அழுத்தவும்.
  2. நீங்கள் கண்டறிய விரும்பும் நபர் அல்லது குழுவின் பெயரை டைப் செய்யவும். நீங்கள் டைப் செய்யும்போதே அந்தப் பெயரை Chat படித்துக் காட்டும்.
  3. பெயரைத் தேர்வுசெய்யவும்:
    • நீங்கள் விரும்பும் பெயரை Chat படித்துக் காட்டினால், Ctrl + Enter பட்டன்களை அழுத்தவும்.
    • நீங்கள் விரும்பும் பெயரை Chat படித்துக் காட்டவில்லை எனில் அந்தப் பெயர் கேட்கும் வரை கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தி, பிறகு Ctrl + Enter பட்டன்களை அழுத்தவும்.
    • அப்போதும் அந்த நபரின் பெயர் கேட்கவில்லை எனில் அவரது பயனர்பெயரை முழுமையாக டைப் செய்துவிட்டு Enter பட்டனை அழுத்தவும்.

முந்தைய மெசேஜ்களின் பட்டியலில் உள்ள மெசேஜைத் திறக்க:

  1. இடதுபுற உலாவுதல் பகுதிக்குச் செல்ல Escape பட்டனை அழுத்திய பிறகு இடது அம்புக்குறியை அழுத்தவும்.
  2. நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் நபரைக் கண்டறியும் வரை மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  3. Enter பட்டனை அழுத்தவும்.

உதவிக்குறிப்பு: இடதுபுற உலாவுதல் பகுதியில் நகரும்போது, படிக்காத நேரடி மெசேஜ்கள் அல்லது ஸ்பேஸ் மெசேஜ்கள் உள்ளனவா என உங்களுக்குத் தெரிவிக்கப்படும். படிக்காத அடுத்த மெசேஜுக்குச் செல்ல Shift + வலது அம்புக்குறியை அழுத்தவும்.

நேரடி மெசெஜுக்குப் பதிலளித்தல்

  1. நீங்கள் பதிலளிக்க விரும்பும் நபரைக் கண்டறியவோ அவரிடம் கர்சரை நகர்த்தவோ முந்தைய பிரிவுகளில் உள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தவும். உலாவுதல் பயன்முறையில், மெசேஜைத் திருத்துவதற்கான புலத்திற்கு மீண்டும் செல்ல r பட்டனை அழுத்தவும்.
  2. மெசேஜை டைப் செய்த பிறகு Enter பட்டனை அழுத்தவும்.
  3. திருத்துதல் பயன்முறையில் இல்லாதபோது மெசேஜுக்கு ஈமோஜி மூலம் பதிலளிக்கலாம்:
    1. “உணர்வு வெளிப்பாட்டைச் சேர்” பட்டனுக்குச் செல்ல Tab பட்டனை அழுத்திவிட்டு ஸ்பேஸை அழுத்தவும்.
    2. ஈமோஜியின் பெயரின் பகுதியை டைப் செய்யவும்.
    3. பொருத்தப் பட்டியலுக்குச் செல்ல Tab பட்டனை இருமுறை அழுத்தவும்.
    4. கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தி நீங்கள் விரும்பும் ஈமோஜிக்குச் சென்று Enter பட்டனை அழுத்தவும்.

ஸ்மார்ட் ரிப்ளையைப் பயன்படுத்துதல்

முக்கியம்: சில மெசேஜ்களில் ஸ்மார்ட் ரிப்ளைகள் அம்சம் இருக்காது.

  1. மெசேஜைத் திருத்துவதற்கான புலத்தில் கர்சர் இருக்கும்போது, பரிந்துரைக்கப்படும் 3 ரிப்ளை பட்டன்களில் ஒன்றுக்குக் கர்சரை நகர்த்தும் வரை Shift + Tab அழுத்தவும்.
  2. ரிப்ளையைத் தேர்ந்தெடுத்து அதை மெசேஜைத் திருத்துவதற்கான புலத்தில் ஏற்ற Spacebar பட்டனை அழுத்தவும்.
  3. விரும்பினால் கூடுதல் உள்ளடக்கத்தைச் சேர்க்கலாம். பின்னர், ரிப்ளையை அனுப்ப Enter பட்டனை அழுத்தவும்.

ஒரு நேரடி மெசேஜைப் பலருக்கு அனுப்புதல்

  1. “ஒருவரையோ பலரையோ சேர்க்கவும்” காம்போ பெட்டியைத் திறக்க Ctrl + k அழுத்தவும்.
  2. நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் பெயரை டைப் செய்யவும். நீங்கள் டைப் செய்யும்போதே அந்தப் பெயரை Chat படித்துக் காட்டும்.
  3. பெயரைத் தேர்வுசெய்யவும்:
    • நீங்கள் விரும்பும் பெயரை Chat படித்துக் காட்டினால், Ctrl + Enter பட்டன்களை அழுத்தவும்.
    • நீங்கள் விரும்பும் பெயரை Chat படித்துக் காட்டவில்லை எனில் அந்தப் பெயர் கேட்கும் வரை கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தி, பிறகு Ctrl + Enter பட்டன்களை அழுத்தவும்.
    • அப்போதும் அந்த நபரின் பெயர் கேட்கவில்லை எனில் அவரது பயனர்பெயரை முழுமையாக டைப் செய்துவிட்டு Enter பட்டனை அழுத்தவும்.
  4. அனைவரையும் மெசேஜில் சேர்க்க வழிமுறைகள் 3, 4 ஆகியவற்றை மீண்டும் மேற்கொள்ளவும்.
  5. புதிய Chatடில் மெசேஜைத் திருத்துவதற்கான புலத்திற்குச் செல்ல Enter பட்டனை அழுத்தவும்.
  6. உங்கள் மெசேஜை டைப் செய்துவிட்டு Enter பட்டனை அழுத்தவும்.

இடுகையிட்ட மெசேஜைத் திருத்துதல்

நீங்கள் இடுகையிட்ட சமீபத்திய மெசேஜைத் திருத்த மெசேஜைத் திருத்துவதற்கான புலத்தில் இருந்து மேல்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும். மெசேஜைத் திருத்திய பிறகு மீண்டும் இடுகையிட Enter பட்டனை அழுத்தவும் அல்லது மாற்றங்களை ரத்துசெய்ய Escape பட்டனை அழுத்தவும்.

நேரடி மெசேஜுக்கு ‘இதுவரையிலான மெசேஜ்கள்’ அம்சத்தை இயக்குதல் அல்லது முடக்குதல்

உங்கள் நிர்வாகி அனுமதித்திருந்தால் இதுவரையிலான மெசேஜ்களை நீங்கள் சேமிக்கலாம். உரையாடலின் மெசேஜைத் திருத்துவதற்கான புலத்தில் கர்சரைக் கொண்டுசெல்லும்போது ‘இதுவரையிலான மெசேஜ்கள்’ அம்சம் இயக்கத்தில் உள்ளதா இல்லையா என்று தெரிவிக்கப்படும்.

  1. இடதுபுற நகர்தல் பகுதியில், எந்த உரையாடலின் ‘இதுவரையிலான மெசேஜ்கள்’ அமைப்புகளை மாற்ற விரும்புகிறீர்களோ அதைத் தேர்ந்தெடுத்து Enter பட்டனை அழுத்தவும்.
  2. உரையாடல் மெனுவைத் திறக்க Ctrl + g பட்டன்களை அழுத்தவும்.
  3. “இதுவரையிலான மெசேஜ்கள்” அம்சத்திற்குச் செல்ல கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தி, தற்போதைய அமைப்பை மாற்ற Spacebar அல்லது Enter பட்டனை அழுத்தவும். ‘இதுவரையிலான மெசேஜ்கள்’ அம்சத்தின் சில அமைப்புகளை மாற்ற முடியாது.

ஸ்பேஸ்கள்

ஸ்பேஸ்கள் என்பது அணியுடனோ குழுவுடனோ தொடர்ச்சியாக நீண்ட நேரம் உரையாடுவதற்கானது. ஸ்பேஸ் மெம்பர்ஷிப், உரையாடலில் நபர்கள் சேரும்போதோ அதில் இருந்து வெளியேறும்போதோ மாறக்கூடும்.

ஸ்பேஸ்களில் 1 அல்லது 2 நிலைகள் இருக்கலாம். தலைப்புகள் இல்லாத ஸ்பேஸ்களில் Chat உரையாடல்களைப் போல 1 நிலை இருக்கும். மேலும் தொடக்கத்தில் மெசேஜைத் திருத்துவதற்கான புலத்தில் கர்சர் இருக்கும். தலைப்புகள் இருக்கும் ஸ்பேஸ்களில் 2 நிலைகள் இருக்கும். நிலை 1 என்பது உரையாடல் தலைப்புகளின் பட்டியல். நிலை 2 என்பது தலைப்பில் இருக்கும் மெசேஜ்கள். ஸ்பேஸைத் திறக்கும்போது படிக்காத பழைய தலைப்பில் கர்சர் இருக்கும். படிக்காத தலைப்புகள் எதுவும் இல்லையெனில் கர்சர் சமீபத்திய தலைப்பில் இருக்கும்.

ஸ்பேஸ்களில் மெசேஜ்களைப் படித்தல்

  1. திருத்துவதற்கான புலத்தில் (திருத்துதல் பயன்முறை) கர்சர் இருந்தால் உலாவுதல் பயன்முறைக்கு மாற Escape பட்டனை அழுத்தவும்.
  2. இடதுபுற உலாவுதல் பகுதியின் ஸ்பேஸ்கள் பிரிவுக்குச் செல்ல h பட்டனை அழுத்திய பிறகு r பட்டனை அழுத்தவும்.
  3. நீங்கள் விரும்பும் ஸ்பேஸை அடையும் வரை மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும், பிறகு Enter பட்டனை அழுத்தவும். படிக்காத உள்ளடக்கத்தைக் கொண்ட ஸ்பேஸுக்குச் செல்ல Shift + மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியைப் பயன்படுத்தலாம்.
  4. ஸ்பேஸில் தலைப்புகள் இல்லையெனில் Chat மெசேஜைப் போல, மெசேஜைத் திருத்துவதற்கான புலத்திற்குக் கர்சர் நகரும்.
  5. ஸ்பேஸில் தலைப்புகள் இருந்தால் வெவ்வேறு தலைப்புகளுக்கிடையே மாற மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  6. தலைப்பைத் திறக்க வலது அம்புக்குறியை அழுத்தவும்.
  7. மெசேஜ்களைப் படிக்க மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  8. தலைப்பு நிலைக்குத் திரும்ப இடது அம்புக்குறியை அழுத்தவும்.

சமீபத்திய மெசேஜ்களைப் பார்க்க, ஆனால் திருத்துவதற்கான புலத்திலேயே கர்சரை வைத்திருக்க:

  • Windows: Alt + {எண்} அழுத்தவும்.
  • ChromeOSஸைப் பயன்படுத்தினால்: Alt + Shift + {எண்} அழுத்தவும்.
  • MacOS பயன்படுத்தினால்: Option + {எண்} பட்டன்களை அழுத்தவும்.
  • சமீபத்திய 9 மெசேஜ்களுக்கு {எண்} என்பதற்குப் பதிலாக 1ல் இருந்து 9 வரையிலான எண்களை டைப் செய்யவும்.

ஸ்பேஸ்களில் மெசேஜ்களுக்குப் பதிலளித்தல்

  1. திருத்துவதற்கான புலத்திற்குக் கர்சரை நகர்த்த r ஷார்ட்கட்டை அழுத்தவும்.
  2. உங்கள் மெசேஜை டைப் செய்துவிட்டு Enter பட்டனை அழுத்தவும்.
  3. மற்றொரு தலைப்பிற்குச் செல்ல Ctrl + j (Macகில் ⌘ + j) பட்டன்களை அழுத்தி கடைசித் தலைப்பிற்குச் செல்லவும். பிறகு புதிய தலைப்பிற்குச் செல்ல மேல்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும். இந்தத் தலைப்பிற்குப் பதிலளிக்க, திருத்துவதற்கான புலத்திற்குக் கர்சரை நகர்த்த r ஷார்ட்கட்டை அழுத்தவும்.
உதவிக்குறிப்பு: ஸ்பேஸ்களில் நீங்கள் ஸ்மார்ட் ரிப்ளையையும் பயன்படுத்தலாம்.

ஸ்பேஸில் உரையாடல் தலைப்பை உருவாக்குதல்

  1. கர்சரை எந்தவொரு தலைப்பிற்கும் நகர்த்தவும்.
  2. மெசேஜைத் திருத்துவதற்கான புலத்தைத் திறக்க Ctrl + s அழுத்தவும்.
  3. உங்கள் புதிய தலைப்பை விவரிக்கும் மெசேஜை டைப் செய்துவிட்டு Enter பட்டனை அழுத்தவும்.

தலைப்பின் முதல் மெசேஜாகவும் தலைப்பின் பெயராகவும் உங்கள் மெசேஜ் இருக்கும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் உருவாக்கும் புதிய தலைப்பை, கர்சர் உள்ள திருத்துவதற்கான புலத்தில் இருக்கும் பெயரின் அடிப்படையில் சரிபார்க்கலாம்:

  • புதிய தலைப்பின் பெயர் "Message" என்பதன் பின்னால் ஸ்பேஸின் பெயருடன் இருக்கும்.
  • ஏற்கெனவே இருக்கும் தலைப்பிற்கான பதில் “Reply” என்ற பெயரில் இருக்கும்.

ஸ்பேஸை உருவாக்குதல்

  1. ”ஸ்பேஸை உருவாக்குதல்” உரையாடலைத் திறக்க Ctrl + i பட்டன்களை அழுத்தவும்.
  2. தேவையான “ஸ்பேஸின் பெயரை” டைப் செய்யவும்.
  3. நீங்கள் மட்டுமே உறுப்பினராக இருக்கக்கூடிய ஸ்பேஸை உருவாக்க Enter பட்டனை அழுத்தவும்.
  4. பிற விருப்பங்களுக்கு Tab பட்டனை அழுத்தி இவற்றைச் செய்யலாம்:
    • ஸ்பேஸ் விளக்கத்தைச் சேர்க்கலாம்.
    • ஸ்பேஸில் நபர்களையோ குழுக்களையோ சேர்க்கலாம்.
    • புதிய ஸ்பேஸில் யார் சேரலாம் என்று குறிப்பிடலாம்.
    • உங்கள் பணி அல்லது பள்ளியைச் சாராதவர்கள் ஸ்பேஸில் சேரலாமா என்று குறிப்பிடலாம்.
    • “தலைப்பின்படி உரையாடலை ஒழுங்கமை” என்பதற்கான செக்பாக்ஸ் காட்டப்படுவதற்கு ‘மேம்பட்டது’ பட்டனை இயக்கலாம்.
    • ரத்துசெய் அல்லது உருவாக்கு பட்டன்களை இயக்கலாம்.

ஏற்கெனவே இருக்கும் ஸ்பேஸில் சேருதல்

  1. Ctrl + o பட்டன்களை அழுத்தவும்.
  2. பெயரின் எந்தப் பகுதியையும் டைப் செய்யவும்.
  3. ஸ்பேஸ்கள் பட்டியலுக்குள் உலாவ மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறியைப் பயன்படுத்தவும்.
  4. நீங்கள் விரும்புவதைக் கண்டறியும்போது, “சேர்ந்த ஸ்பேஸ்” செக்ஸ்பாக்ஸுக்குச் செல்ல Tab பட்டனை அழுத்திய பிறகு அதைத் தேர்வுசெய்ய Spacebar பட்டனை அழுத்தவும்.
  5. புதிய ஸ்பேஸில் சேர்ந்து அதைத் திறக்க Enter பட்டனை அழுத்தவும்.

ஸ்பேஸில் பிறரைச் சேர்த்தல்

  1. நீங்கள் மாற்ற விரும்பும் ஸ்பேஸைத் திறக்கவும்.
  2. ஸ்பேஸ் மெனுவைத் திறக்க Ctrl + g பட்டன்களை அழுத்தவும்.
  3. "உறுப்பினர்களை நிர்வகியுங்கள்” என்பதற்குச் செல்ல கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தி, பிறகு Enter பட்டனை அழுத்தவும்.
  4. சேர் பட்டனுக்குச் செல்ல Tab பட்டனை அழுத்தி, Enter பட்டனை அழுத்தவும்.
  5. நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் பெயரை டைப் செய்யவும். நீங்கள் டைப் செய்யும்போது, பொருந்தும் முதல் பெயர் கேட்கும்.
  6. பெயரைத் தேர்வுசெய்யவும்:
    • நீங்கள் விரும்பும் பெயரை Chat படித்துக் காட்டினால், Ctrl + Enter பட்டன்களை அழுத்தவும்.
    • நீங்கள் விரும்பும் பெயரை Chat படித்துக் காட்டவில்லை எனில் அந்தப் பெயர் கேட்கும் வரை கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தி, பிறகு Ctrl + Enter பட்டன்களை அழுத்தவும்.
    • அப்போதும் அந்த நபரின் பெயர் கேட்கவில்லை எனில் அவரது பயனர்பெயரை முழுமையாக டைப் செய்துவிட்டு Enter பட்டனை அழுத்தவும்.
  7. 'சேர்' பட்டனுக்குக் கர்சரை நகர்த்தும் வரை Tab பட்டனை அழுத்தி, Enter பட்டனை அழுத்தவும்.

ஸ்பேஸில் ஃபைல்கள்

விவாதத்திற்காகவோ ஸ்பேஸின் உறுப்பினர்களுடன் பகிர்வதற்காகவோ ஃபைல்களை ஸ்பேஸில் இடுகையிடலாம். ஸ்பேஸைத் திறக்கும்போது மெசேஜைத் திருத்துவதற்கான புலத்திற்கோ சமீபத்திய தலைப்பின் தொடக்கத்திற்கோ கர்சர் நகரும். திருத்துவதற்கான புலத்தில் இருந்து, “Google Workspace கருவிகள்” பட்டனுக்குக் கர்சரை நகர்த்த Shift + Tab பட்டன்களை அழுத்தவும். அதில் நீங்கள் Drive ஃபைலையோ Calendar அழைப்பையோ சேர்க்கலாம்.

பிறர் இடுகையிட்ட ஃபைல்களைப் பார்க்க Ctrl + g அழுத்தி ஸ்பேஸ் மெனுவிற்குச் செல்லவும், பிறகு Chat பிரிவுக்குச் செல்ல Tab பட்டனைச் சில முறை அழுத்தவும். Files பிரிவுக்குச் செல்ல வலது அம்புக்குறியை அழுத்தி, பிறகு Enter பட்டனை அழுத்தவும். Files பிரிவைத் திறக்கும்போது “ஃபைலைச் சேர்” பட்டனுக்குக் கர்சர் நகரும். ஃபைல் எதுவும் பகிரப்பட்டால் ஒவ்வொரு ஃபைலுக்குமான 3 உறுப்புகளிடையே Tab பட்டன் மூலம் நகரலாம்:

  1. ஃபைல் விவரங்கள்: ஃபைலின் பெயர், இடுகையிட்டவர், இடுகையிட்ட நேரம். புதிய உலாவிப் பக்கத்தில் ஃபைலைத் திறக்க Enter பட்டனை அழுத்தவும்.
  2. "Driveவுக்குள் நகர்தல்" அல்லது “Driveவில் ஷார்ட்கட்டைச் சேர்த்தல்" என்பதற்கான விருப்பம்.
  3. "Chatடில் பார்த்தல்” என்பதற்கான விருப்பம், சூழலைப் புரிந்துகொள்வதற்காகக் கர்சரை ஃபைல் சேர்க்கப்பட்ட இடத்திற்கு நகர்த்தும்.

ஆப்ஸ்

முக்கியம்: Google Chatடில் ஆப்ஸைப் பயன்படுத்த பணி அல்லது பள்ளிக் கணக்கைப் பயன்படுத்த வேண்டும், ஆப்ஸை நிறுவ உங்கள் Google Workspace நிர்வாகியின் அனுமதி வேண்டும்.

ஆப்ஸ் என்பவை, பிறருடன் உரையாடுவதைப் போலவே சாதாரணமாக நீங்கள் உரையாடக்கூடிய சிறப்புக் கணக்குகள் ஆகும். தகவல்களைத் தேட, மீட்டிங்குகளைத் திட்டமிட அல்லது பிற பணிகளைச் செய்ய உரையாடல் மூலம் ஆப்ஸுடன் தொடர்புகொள்ளலாம். Google Meet, Google Drive ஆப்ஸ் போன்ற சில ஆப்ஸை Google உருவாக்கிப் பராமரித்து வருகிறது. மூன்றாம் தரப்பு மென்பொருள் விற்பனையாளர்கள் பிற ஆப்ஸை உருவாக்கிப் பராமரித்து வருகின்றனர்.

ஆப்ஸைக் கண்டறிதல்

  1. “ஒருவரையோ பலரையோ சேர்க்கவும்” காம்போ பெட்டியைத் திறக்க Ctrl + k அழுத்தவும்.
  2. ”ஆப்ஸைக் கண்டறி” என்பதற்குச் செல்லும் வரை கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தி, Enter பட்டனை அழுத்தவும்.
  3. பகுதியளவு பெயரை டைப் செய்யவும் அல்லது வழங்கப்படும் உள்ளடக்கத்தைப் பார்க்க Tab மற்றும் அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.
  4. ஆப்ஸில் Enter பட்டனை அழுத்தி உரையாடலில் விளக்கத்தைப் படிக்கவும். முதலில், Chatடில் ஆப்ஸைச் சேர்ப்பதற்கான பட்டனில் கர்சர் இருக்கும்.
  5. உங்கள் Chat உரையாடல்களின் தொகுப்பில் இந்த ஆப்ஸைச் சேர்க்க Enter பட்டனை அழுத்தவும்.
  6. ஸ்பேஸில் ஆப்ஸைச் சேர்க்க:
    1. ”ஸ்பேஸில் சேர்” பட்டனுக்குச் செல்ல Tab பட்டனை அழுத்தவும்.
    2. ”ஸ்பேஸ் பெயரை டைப் செய்யுங்கள்” உரையாடலுக்குச் செல்ல Enter பட்டனை அழுத்தவும்.
    3. பகுதியளவு பெயரை டைப் செய்யவும் அல்லது நீங்கள் ஆப்ஸைச் சேர்க்க விரும்பும் ஸ்பேஸுக்குச் செல்ல கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  7. பட்டன்களில் ஒன்றை இயக்கிய பிறகு ஆப்ஸ் சேர்க்கப்பட்டு உரையாடல் மூடப்படும்.

உதவிக்குறிப்பு: இது ஆப்ஸை எப்படிக் கண்டறிவது என்பதற்கும் அதை Chat அல்லது ஸ்பேஸில் எப்படிச் சேர்ப்பது என்பதற்குமான வழிமுறை. அடுத்த பிரிவு, தற்போதைய ஸ்பேஸில் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் ஆப்ஸை எப்படிச் சேர்ப்பது என்பதற்கான வழிமுறை.

ஸ்பேஸில் ஆப்ஸைச் சேர்த்தல்

  1. நீங்கள் மாற்ற விரும்பும் ஸ்பேஸைத் திறக்கவும்.
  2. மெனுவைத் திறக்க Ctrl + g பட்டன்களை அழுத்தவும்.
  3. "ஆப்ஸ் & ஒருங்கிணைப்புகள்" என்பதற்குக் கர்சரை நகர்த்தும் வரை கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்திவிட்டு Enter பட்டனை அழுத்தவும்.
  4. ”ஆப்ஸைச் சேர்” பட்டனுக்குச் செல்ல Tab பட்டனை அழுத்தி, பிறகு Enter பட்டனை அழுத்தவும்.
  5. நீங்கள் சேர்க்க விரும்பும் ஆப்ஸின் பெயரை டைப் செய்யவும். நீங்கள் டைப் செய்யும்போது, பொருந்தும் முதல் பெயர் கேட்கும்.
  6. பெயரைத் தேர்வுசெய்யவும்:
    • நீங்கள் விரும்பும் பெயர் கேட்டால் Enter பட்டனை அழுத்தவும்.
    • நீங்கள் விரும்பும் பெயரைக் கேட்கும் வரை கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தி, பிறகு Enter பட்டனை அழுத்தவும்.
  7. சேர் பட்டனுக்குச் செல்லும் வரை Tab பட்டனை அழுத்தி, பிறகு Enter பட்டனை அழுத்தவும்.

ஸ்பேஸில் ஆப்ஸுக்கு மெசேஜ் அனுப்புதல்

  1. ஆப்ஸ் இருக்கும் ஸ்பேஸைத் திறக்கவும்.
  2. புதிய தலைப்பைத் திறக்க Ctrl + s அழுத்தவும்.
  3. "@appname" என்பதைத் தொடர்ந்து உங்கள் மெசேஜை டைப் செய்யவும். "appname" என்பதற்குப் பதிலாக ஆப்ஸின் பெயரை டைப் செய்யவும்.
  4. Enter பட்டனை அழுத்தி அது கட்டளைகளைக் காட்டுவதற்குக் காத்திருக்கவும்.

அந்த ஆப்ஸில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய கட்டளைகள் காட்டப்படும்

  • ஆப்ஸுடனான நேரடி மெசேஜில் "help" என்று டைப் செய்யவும்.
  • ஸ்பேஸில் "@appname help" என்று டைப் செய்யவும். "appname" என்பதற்குப் பதிலாக ஆப்ஸின் பெயரை டைப் செய்யவும்.

தேடல்

Chat அல்லது ஸ்பேஸுக்குள் உள்ளடக்கத்தைத் தேட:

  1. திருத்துதல் பயன்முறையில் இல்லாதபோது ஸ்லாஷ் பட்டனை அழுத்தவும்.
  2. தேடல் வார்த்தையை டைப் செய்தவுடன் முதலில் வரும் பொருத்தங்கள் நபர்கள், குழுக்கள் அல்லது ஸ்பேஸ்களாக இருக்கும்.
  3. ”கூடுதல் தேடல் முடிவுகள்” என்ற கடைசி விருப்பத்திற்கு நேரடியாகச் செல்ல மேல்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  4. உங்கள் தேடல் வார்த்தையை உள்ளடக்கிய எல்லா மெசேஜ்களையும் பார்க்க Enter பட்டனை அழுத்தவும். சமீபத்திய முடிவு முதலில் என்ற வரிசையில் முடிவுகள் காட்டப்படும்.
  5. உங்கள் தேடல் வார்த்தையை உள்ளடக்கிய மெசேஜ்களுக்குச் செல்ல கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.

உதவிக்குறிப்பு: முடிவை உள்ளடக்கிய Chat மெசேஜ் அல்லது ஸ்பேஸ்களின் தலைப்புக்குச் செல்ல அந்த முடிவை இயக்கவும். தேடல் முடிவுகளுக்குச் செல்ல உலாவியின் பின்செல் ஷார்ட்கட்டைப் பயன்படுத்தவும். தேடல் முடிவுகளில் இருந்து வெளியேற உலாவியின் பின்செல் ஷார்ட்கட்டை மீண்டும் பயன்படுத்தவும்.

அறிவிப்பு அமைப்புகளை மாற்றுதல்

Chat ஆப்ஸில் இருந்து அல்லது உரையாடல் ஒவ்வொன்றுக்கும் உங்களுக்கு எப்படி அறிவிப்பு வர வேண்டும் என்பதை மாற்றலாம். கீழேயுள்ள மெசேஜ் மற்றும் ஸ்பேஸ்களுக்கான விருப்பங்களை அணுகுதல் என்பதில் உரையாடல் விருப்பங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

Chat ஆப்ஸுக்கான அமைப்புகளைத் திறக்க:

  1. உலாவுதல் பயன்முறைக்கு மாற Escape பட்டனை அழுத்தவும்.
  2. ”நபர்கள், ஸ்பேஸ்கள், மெசேஜ்கள் ஆகியவற்றைக் கண்டறி” என்ற புலத்திற்குக் கர்சரை நகர்த்த ஸ்லாஷ் பட்டனை அழுத்தவும்.
  3. Tab பட்டனை அழுத்தி அமைப்புகள் பட்டனுக்குச் செல்லவும், பிறகு அறிவிப்புகளுக்கான விருப்பங்கள் இருக்கும் அமைப்புகள் உரையாடலைத் திறக்க Enter பட்டனை அழுத்தவும்.
  4. மாற்றங்களைச் செய்த பிறகு, முடிந்தது பட்டனுக்குச் செல்ல Tab பட்டனை அழுத்தி Enter பட்டனை அழுத்தவும்.

மெசேஜ் மற்றும் ஸ்பேஸ்களுக்கான விருப்பங்களை அணுகுதல்

Chat மெசேஜ்கள் மற்றும் ஸ்பேஸ்களுக்கான விருப்பங்கள் மெனுவைத் திறக்க Ctrl + g பட்டன்களை அழுத்தவும். இந்த மெனுவில் அடங்குபவை:

  • உறுப்பினர்களைப் பார்த்தல் அல்லது உறுப்பினர்களை நிர்வகித்தல்
  • ஆப்ஸ் & ஒருங்கிணைப்புகள்
  • உரையாடலை Chat அல்லது ஸ்பேஸ்களில் பின் செய்தல்
  • இந்த உரையாடலுக்கான அறிவிப்பு விருப்பங்கள்
  • ‘இதுவரையிலான மெசேஜ்கள்’ அம்சத்தை இயக்குதல் அல்லது முடக்குதல்
  • உரையாடலைத் தடுத்தல்

ஸ்மார்ட் ரிப்ளைகளைப் பயன்படுத்துதல்

நீங்கள் பெறும் குறிப்பிட்ட மெசேஜ்களுக்கு விரைவாகப் பதிலளிக்க Chat உங்களுக்குப் பரிந்துரைகளை வழங்கும்.

ஸ்மார்ட் ரிப்ளை இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்

  1. முந்தைய பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போல அமைப்புகளைத் திறக்கவும்.
  2. "இணையம் மற்றும் டெஸ்க்டாப்பில் ஸ்மார்ட் ரிப்ளையை இயக்கு" என்ற செக்பாக்ஸுக்குச் செல்ல Tab பட்டனை அழுத்தவும்.
  3. இயக்கவோ முடக்கவோ Spacebar பட்டனை அழுத்தவும்.


Google, Google Workspace, and related marks and logos are trademarks of Google LLC. All other company and product names are trademarks of the companies with which they are associated.

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14907856920727563300
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false