Google Chat மெசேஜ்களில் ஃபைல்களை அனுப்புதல் & பகிர்தல்

கம்ப்யூட்டர், மொபைல் சாதனம், Google Drive ஆகியவற்றில் இருந்து 200 மெ.பை. வரை ஃபைல்களை நேரடியாக Google Chat மெசேஜ்களில் இணைக்கலாம்.

ஸ்பேஸ்களில் பகிரப்பட்ட ஃபைல்களின் பட்டியலைப் பார்க்கலாம் பைல்களைத் திறக்கலாம் Driveவில் அவற்றைச் சேர்க்கலாம்.

ஆதரிக்கப்படும் பட ஃபைல்கள்:

  • BMP
  • GIF
  • JPEG
  • PNG
  • WBMP
  • HEIC

குறிப்பிட்ட ஃபைல்களை உங்களால் அனுப்ப முடியாது. Chatடில் தடுக்கப்பட்டுள்ள ஃபைல் வகைகளைக் கீழே பார்க்கவும். 

உரையாடல் மெசேஜில் ஃபைல்களை அனுப்புதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.
    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. ஓர் உரையாடலைத் திறக்கவும்.
  3. மெசேஜை டைப் செய்து ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • ஈமோஜியைச் சேர்க்க, ஈமோஜி ஐகானை கிளிக் செய்யவும்.
    • GIFஐ அனுப்ப, GIF என்பதைக் கிளிக் செய்யவும்.
      • பள்ளி அல்லது பணிக் கணக்கின் மூலம் Google Chatடைப் பயன்படுத்தினால் GIFஐ அனுப்புவதற்கான விருப்பம் இல்லாமல் போகலாம்.
    • கம்ப்யூட்டரில் இருந்து ஃபைலை இணைக்க, ஃபைலைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
      • Driveவில் ஃபைல் சேர்க்கப்படாது. நேரடியாக மெசேஜிலேயே பிறருக்கு அனுப்பப்படும்.
    •  வீடியோ மீட்டிங்கிற்கான இணைப்பைச் சேர்க்க, வீடியோ மீட்டிங்கைச் சேர் ஐகானை கிளிக் செய்யவும்.
    • Drive ஃபைலை இணைக்க, ஒருங்கிணைத்தல் மெனு ஐகானை கிளிக் செய்து அதன் பிறகு Drive என்பதைக் கிளிக் செய்யவும்.
      • ஃபைலை அனுப்பும்போது யாருக்காவது அணுகல் தேவைப்பட்டால் அது குறித்த அறிவிப்பைப் பெறுவீர்கள்.
      • திருத்துவதற்கான அணுகலைப் பயன்படுத்தி நீங்கள் பிறருக்கு அணுகல் வழங்கலாம்.
      • ஸ்பேஸில் அணுகல் வழங்கினால் அதில் பின்னர் சேர்பவர்களுக்கும் அணுகல் இருக்கும்.
      • ஸ்பேஸில் இருந்து வெளியேறுபவர்களுக்கு ஃபைலுக்கான அணுகல் தனிப்பட்ட முறையிலோ குழு மூலமோ வழங்கப்படும் வரை அவர்களால் ஃபைலை அணுக முடியாது.
    • Google Calendar அழைப்பை உருவாக்க, ஒருங்கிணைத்தல் மெனு ஐகானை கிளிக் செய்து அதன் பிறகு Calendar அழைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. அனுப்புவதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.
Driveவில் உள்ள ஃபைல்களை உரையாடல் மெசேஜில் சேர்த்தல்

Driveவில் உள்ள ஃபைல்களை மெசேஜில் சேர்க்க, "@" என்பதைத் தொடர்ந்து உங்கள் ஃபைலின் பெயரைச் சேர்க்கவும்.

  1. உரையாடலில் உள்ள பதிலளிப்பதற்கான பகுதியில் “@ என்பதை டைப் செய்யவும்.”
    • மேலும் பல தொடர்புடைய ஃபைல்களைத் தேட, “@” என்பதற்குப் பிறகு ஃபைல் பெயர் அல்லது தொடர்புடைய தேடல் குறிப்புகளை டைப் செய்யவும்.
  2. “ஃபைல்கள்” என்பதற்குக் கீழேயுள்ள பரிந்துரைகளின் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.
  3. அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஃபைலை அனுப்பும்போது யாருக்காவது அணுகல் தேவைப்பட்டால் அது குறித்த அறிவிப்பைப் பெறுவீர்கள்.
  4. அணுகல் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
    • விருப்பத்திற்குரியது: ஃபைலுக்கான அணுகலைப் பிறருடன் பகிர, Drive ஃபைலை இணைத்தல் பிரிவைப் பார்க்கவும்.

உதவிக்குறிப்பு: உங்களுக்கு அணுகல் உள்ள ஃபைலுக்கான பரிந்துரைகளை நீங்கள் Driveவில் பார்க்கலாம்.

ஃபைல்கள், இணைப்புகள், மீடியா ஆகியவற்றை ஸ்பேஸில் பார்த்தல் மற்றும் நிர்வகித்தல்

ஸ்பேஸில் பகிரப்பட்ட ஃபைல்கள், இணைப்புகள், மீடியா ஆகியவற்றின் பட்டியலை நீங்கள் பார்க்கலாம், ஃபைலைத் திறக்கலாம், Driveவில் ஃபைலைச் சேர்க்கலாம். பகிரப்பட்ட ஃபைல் இருக்கும் உரையாடல் மெசேஜை நீங்கள் நீக்கினால் அது ஸ்பேஸில் இருந்தும் நீக்கப்படும்.

Driveவில் ஒரு ஃபைலை நீக்கினால் அது பகிரப்பட்ட உரையாடல் மெசேஜில் இருந்து நீக்கப்படும் வரை அதன் இணைப்பு ஸ்பேஸில் காட்டப்படும். உரையாடல் மெசேஜில் இருந்து ஃபைலை நீக்கினால் உரையாடலில் இருந்தும் ஸ்பேஸின் ’பகிர்ந்தவை’ பிரிவில் இருந்தும் அதன் இணைப்பு அகற்றப்படும்.

  1. Chatடில் ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. மேலே உள்ள பகிர்ந்தவை பிரிவைக் கிளிக் செய்யவும்.
    • உதவிக்குறிப்பு: Gmailலில் ’பகிர்ந்தவை’ பிரிவைப் பார்க்க, ஸ்பேஸை விரிவாக்க வேண்டியிருக்கலாம்.
  3. "பகிர்ந்தவை" பிரிவில், வகை அல்லது பகிர்ந்த தேதி அடிப்படையில் ஃபைல்களை வரிசைப்படுத்தவும்.
    • வகைப்படி வரிசைப்படுத்து: ’பகிர்ந்தவை’ பிரிவில் உள்ள ஃபைல்கள், இணைப்புகள், மீடியா ஆகியவற்றைத் தனித்தனிப் பிரிவுகளாக ஒழுங்கமைக்கும்.
    • பகிர்ந்த தேதிப்படி வரிசைப்படுத்து: ஃபைல்கள், இணைப்புகள், மீடியா ஆகியவற்றைத் தேதிவாரியான பட்டியலில் காட்டும்.
  4. ஃபைலைத் திறக்க, ஃபைலின் பெயரைக் கிளிக் செய்யவும்.
    • Google ஃபைல்கள்: உரையாடலுக்கு அடுத்துள்ள அரட்டைச் சாளரம் அல்லது புதிய உலாவிப் பக்கத்தில் ஃபைல் திறக்கப்படும்.
    • பிற வகை ஃபைல்கள்: முழுத்திரையில் மாதிரிக்காட்சியாகத் திறக்கப்படும். Driveவில் இல்லாத ஃபைல்கள் பதிவிறக்கப்படும். PDF மற்றும் வீடியோ ஃபைல்கள் பதிவிறக்கப்படாமல் புதிய உலாவிப் பக்கத்தில் திறக்கப்படும்.

(விருப்பத்தேர்வு) ஃபைலைப் பார்க்கவோ சேமிக்கவோ அதற்கு அடுத்துள்ள இவற்றைக் கிளிக் செய்யவும்:

  • : Driveவில் ஷார்ட்கட்டைச் சேர்க்கும்
  • : ஃபைல் பகிரப்பட்டுள்ள உரையாடல் மெசேஜைத் திறக்கும்

உதவிக்குறிப்பு: Google Workspace கணக்கைப் பயன்படுத்தியும் Driveவில் ஃபைல்களைச் சேர்க்க முடியவில்லை என்றால் உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.

ஸ்பேஸில் இருந்து ஃபைலை அகற்றுதல்

முக்கியம்: ஸ்பேஸில் இருந்து ஃபைலை அகற்ற Google Workspace கணக்கைப் பயன்படுத்த வேண்டும்.

  1. Chatடில் ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. மேலே உள்ள பகிர்ந்தவை பிரிவைக் கிளிக் செய்யவும். ஃபைலுக்கு அடுத்துள்ள, உரையாடலில் பார்ப்பதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.
  3. ஃபைல் இருக்கும் மெசேஜின் மேலே கர்சரைக் கொண்டுசெல்லவும்.
  4. மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து அதன் பிறகு நீக்கு அதன் பிறகு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்:

  • Driveவில் ஒரு ஃபைலை நீக்கினால் அது பகிரப்பட்ட அரட்டை மெசேஜில் இருந்து நீக்கப்படும் வரை அதன் இணைப்பு ஸ்பேஸில் காட்டப்படும்.
    • அரட்டையில் இருந்து ஃபைலை நீக்கவில்லையெனில் அதைத் தேர்ந்தெடுக்கும்போது "நீக்கியவை ஃபோல்டரில் ஃபைல் உள்ளது" மெசேஜை ஃபைல் இணைப்பு காட்டும்.
    • உரையாடலில் இருந்து ஃபைலை நீக்காமல் Driveவில் நீக்கியவை ஃபோல்டரைக் காலியாக்கி இருந்தால் ஃபைலை அதன் இணைப்பு மூலம் திறக்க முடியாது.
  • உரையாடல் மெசேஜில் இருந்து ஃபைலை நீக்கினால் உரையாடலில் இருந்தும் ஸ்பேஸின் ’பகிர்ந்தவை’ பிரிவில் இருந்தும் அதன் இணைப்பு அகற்றப்படும்.

ஸ்பேஸில் Google Docs மற்றும் Sheetsஸில் கூட்டுப்பணி செய்தல்

ஸ்பேஸில் இருந்தே, பகிரப்பட்ட Google Docs & Sheets ஃபைல்களில் பிறருடன் இணைந்து பணியாற்றலாம். உரையாடலுக்கு அடுத்துள்ள உரையாடல் சாளரத்தில் ஆவணம் அல்லது விரிதாள் திறக்கப்படும். இதனால் ஃபைலில் ஒன்றாக இணைந்து பணியாற்றும்போதே நீங்கள் உரையாடலாம். Gmail அல்லது Google Chatடில் இருந்து வெளியேறாமலே ஆவணத்தையோ விரிதாளையோ திருத்தலாம் வடிவமைக்கலாம் பகிரலாம் பெயர் மாற்றலாம்.

முக்கியம்:

  • கருத்துகள் அம்சத்தையோ Docs/Sheetsஸின் பிற அம்சங்களையோ பயன்படுத்த, புதிய பக்கத்தில் ஃபைலைத் திறக்கவும்.
  • உரையாடல் சாளரம் முழுத் திரையில் காட்டப்படவில்லை என்றால் 'உரையாடலை முழுத் திரையில் திற' ஐகானை  கிளிக் செய்யவும்.
  1. Chatடில் ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
    • ஏற்கெனவே பகிரப்பட்ட ஆவணத்தைத் திறக்க, உரையாடலில் அதன் மீது கர்சரை வைத்து உரையாடலில் திறப்பதற்கான ஐகானை கிளிக் செய்யவும். பிரிவுகளுக்கு இடையே மாறாமல் திருத்தங்களை நேரடியாகச் செய்யும் வகையில் ஆவணம் வலதுபக்கத்தில் திறக்கப்படும்.
    • பகிர்ந்த ஆவணத்தை ஸ்பேஸிற்குள் உருவாக்க, “Chat” பிரிவின் பதிலளிப்பதற்கான பகுதியில் உள்ள செயல் மெனு ஐகானை கிளிக் செய்து அதன் பிறகு Google Docs என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள மூடுவதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.
  3. விருப்பத்திற்குரியது: புதிய உலாவிப் பக்கத்தில் ஆவணத்தைத் திறக்க, உரையாடல் மாதிரிக்காட்சியின் மேல் வலதுபுறத்தில் உள்ள 'புதிய பக்கத்தில் திற' என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்:

  • Google Workspace கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள், ஆனால் ஆவணங்களைச் சேர்க்க முடியவில்லை எனில் உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.
  • ஏற்கெனவே உள்ள Google Docs & Sheets ஃபைல்களில் 1:1 மெசேஜ்களில் இணைந்து பணியாற்றலாம்.

Google Chatடில் தடுக்கப்பட்ட ஃபைல் வகைகள்

Google Chatடில் பதிவேற்றப் பிழையைப் பெறுவதற்குச் சில காரணங்கள் உள்ளன. செயல்படுத்தக்கூடிய ஃபைல்கள் போன்ற வைரஸ்களைப் பரப்பக்கூடிய ஃபைல்களையும் இணைப்புகளையும் Chat தடுக்கிறது. தீங்கிழைக்கும் மென்பொருளைத் தடுப்பதற்காக அனுமதிக்கப்படாத ஃபைல் வகைகளை Chat அடிக்கடி புதுப்பிக்கும்.

குறிப்பிட்ட ஃபைல் வகைகளை இணைக்க முடியாது. இதில் அடங்குபவை:

  • ADE, ADP, APK, BAT, CAB, CHM, CMD, COM, CPL, DLL, DMG, EXE, HTA, INS, ISP, JAR, JS, JSE, LIB, LNK, MDE, MSC, MSI, MSP, MST, NSH, PIF, SCR, SCT, SHB, SYS, VB, VBE, VBS, VXD, WSC, WSF, WSH.
    GZ, BZ2 ஃபைல்கள் போன்ற சுருக்கப்பட்ட ஃபைல்களும் ZIP, TGZ ஃபைல்கள் போன்ற காப்பகங்களில் இருக்கும் ஃபைல்களும் இந்தப் பட்டியலில் அடங்கும்.
  • தீங்கிழைக்கும் மேக்ரோக்களைக் கொண்ட ஆவணங்கள்.
  • உள்ளடக்கம் ஒரு காப்பகமாக இருக்கும் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்ட காப்பகங்கள்.

தடுக்கப்பட்ட ஃபைல் மேலே பட்டியலிடப்படாமல் இருந்து, ஃபைல் பாதுகாப்பானது என நீங்கள் உறுதியாக இருந்தால் ஃபைலை Driveவில் பதிவேற்றி அதை Drive இணைப்பாக அனுப்பவும்.

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
13507847325020812824
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false