Google Chat மெசேஜ்களில் ஃபைல்களை அனுப்புதல் & பகிர்தல்

கம்ப்யூட்டர், மொபைல் சாதனம், Google Drive ஆகியவற்றில் இருந்து 200 மெ.பை. வரை ஃபைல்களை நேரடியாக Google Chat மெசேஜ்களில் இணைக்கலாம்.

ஸ்பேஸ்களில் பகிரப்பட்ட ஃபைல்களின் பட்டியலைப் பார்க்கலாம் பைல்களைத் திறக்கலாம் Driveவில் அவற்றைச் சேர்க்கலாம்.

ஆதரிக்கப்படும் பட ஃபைல்கள்:

  • BMP
  • GIF
  • JPEG
  • PNG
  • WBMP
  • HEIC

குறிப்பிட்ட ஃபைல்களை உங்களால் அனுப்ப முடியாது. Chatடில் தடுக்கப்பட்டுள்ள ஃபைல் வகைகளைக் கீழே பார்க்கவும். 

அரட்டை மெசேஜில் ஃபைல்களை அனுப்புதல்

முக்கியம்: Google Chatடில் ஃபைல்களைப் பகிரும்போது அவற்றின் அளவு குறையலாம். குறைந்த அளவுள்ள ஃபைல்கள் வேகமாகப் பதிவேற்றப்படும், ஆனால் அவற்றின் தெளிவுத்திறன் குறைவாக இருக்கலாம்.

  1. Android மொபைல்/டேப்லெட்டில் Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
    • Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
  2. ஓர் உரையாடலைத் திறக்கவும்.
  3. மெசேஜை டைப் செய்து ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • படங்கள்/வீடியோக்களை இணைக்க படம் அல்லது செயல் மெனுவை சேர் தட்டி அதன் பிறகு படங்கள் என்பதைத் தட்டவும்.
      • நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் படம்/வீடியோவைத் தட்டவும். அதன்பிறகு தேர்ந்தெடு அல்லது சேர் என்பதைத் தட்டவும்.
      • பல படங்கள்/வீடியோக்களைத் தேர்ந்தெடுக்க விரும்பினால் அவற்றின் மீது நீண்ட நேரம் அழுத்தவும் அல்லது தட்டவும். அதன்பிறகு தேர்ந்தெடு அல்லது சேர் என்பதைத் தட்டவும்.
        • உதவிக்குறிப்பு: ஒரே நேரத்தில் 20 படங்கள்/வீடியோக்கள் வரை அனுப்பலாம்.
    • படமெடுக்க, செயல் மெனு ஐகானை சேர் தட்டி அதன் பிறகு கேமராவிற்கான ஐகானை தட்டி அதன் பிறகு படமெடுக்கவும்.
    • Drive ஃபைலை இணைக்க, செயல் மெனு சேர் அதன் பிறகு Drive என்பதைத் தட்டவும்.
      • ஃபைலை அனுப்பும்போது ஸ்பேஸிற்கோ ஸ்பேஸில் உள்ளவருக்கோ அணுகல் இல்லையெனில் அதுகுறித்த மெசேஜைப் பெறுவீர்கள். ஃபைலைத் திருத்துவதற்கான அணுகலைப் பெற்றுள்ளீர்கள் எனில் பிறருக்கு அணுகல் வழங்குவதற்கான விருப்பம் உங்களுக்குக் காட்டப்படும். ஸ்பேஸிற்கு அணுகலை வழங்கினால் ஸ்பேஸில் பின்னர் சேர்பவர்களுக்கும் அணுகல் கிடைக்கும்.
    • வீடியோ மீட்டிங்கிற்கான இணைப்பை உருவாக்க, செயல் மெனு சேர் அதன் பிறகு Meet இணைப்பு என்பதைத் தட்டவும்.
    • Google Calendar அழைப்பை உருவாக்க, செயல் மெனு ஐகானை சேர் தட்டி அதன் பிறகு Calendar அழைப்பு என்பதைத் தட்டவும்.
    • GIFஐ அனுப்ப, GIF என்பதைத் தட்டவும்.
  4. அனுப்புவதற்கான ஐகானை தட்டவும்.

பகிரப்பட்ட படங்கள் அல்லது வீடியோக்களைப் பார்த்தல்

  1. ​​Chatடில் உரையாடல் அல்லது ஸ்பேஸைத் திறக்கவும்.
  2. மேலே தொடர்பு அல்லது உரையாடலின் பெயருக்கு அடுத்துள்ள வலது அம்புக்குறி ஐகானை Arrow Right தட்டவும்.
  3. பகிரப்பட்ட மீடியா என்பதைத் தட்டவும்.
  4. மேலும் படங்கள் அல்லது வீடியோக்களைப் பார்க்க கீழே செல்லவும்.
    • ஒரு பிரிவு காட்டப்படவில்லை என்றால் மீண்டும் முயல்க என்பதைத் தட்டவும்.

ஃபைல்கள், இணைப்புகள், மீடியா ஆகியவற்றை ஸ்பேஸில் பார்த்தல் மற்றும் நிர்வகித்தல்

ஸ்பேஸில் பகிரப்பட்ட ஃபைல்கள், இணைப்புகள், மீடியா ஆகியவற்றின் பட்டியலை நீங்கள் பார்க்கலாம், ஃபைலைத் திறக்கலாம், Driveவில் ஃபைலைச் சேர்க்கலாம்.

  1. கீழே உள்ள வழிசெலுத்தல் மெனுவில், ஸ்பேஸ்கள் ஐகானை தட்டி and then ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. மேலே உள்ள பகிர்ந்தவை பிரிவைத் தட்டவும்.
  3. "பகிர்ந்தவை" பிரிவில், வகை அல்லது பகிர்ந்த தேதி அடிப்படையில் ஃபைல்களை வரிசைப்படுத்தவும்.
    • வகைப்படி வரிசைப்படுத்து: ’பகிர்ந்தவை’ பிரிவில் உள்ள ஃபைல்கள், இணைப்புகள், மீடியா ஆகியவற்றைத் தனித்தனிப் பிரிவுகளாக ஒழுங்கமைக்கும்.
    • பகிர்ந்த தேதிப்படி வரிசைப்படுத்து: ஃபைல்கள், இணைப்புகள், மீடியா ஆகியவற்றைத் தேதிவாரியான பட்டியலில் காட்டும்.
  4. ஃபைலைத் திறக்க, ஃபைலின் பெயரைத் தட்டவும்.
    • Drive ஆப்ஸை நிறுவியிருந்தால் Drive ஃபைல்கள் அதில் திறக்கப்படும்.

விருப்பத்தேர்வு: ஃபைலைப் பார்க்க/சேமிக்க, ஃபைலுக்கு அடுத்துள்ள 'மேலும் விருப்பங்கள்' என்பதைத் தட்டியபிறகு இதைச் செய்யவும்:

  • அரட்டையில் காட்டு: ஃபைல் பகிரப்பட்ட அரட்டை மெசேஜைத் திறக்கும்.
  • Driveவில் ஷார்ட்கட்டைச் சேர்: Driveவில் ஷார்ட்கட்டைச் சேமிக்கும்.

உதவிக்குறிப்பு: Google Workspace கணக்கைப் பயன்படுத்தியும் Driveவில் ஃபைல்களைச் சேர்க்க முடியவில்லை என்றால் உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.

ஃபைலை அகற்றுதல்

முக்கியம்: ஸ்பேஸில் இருந்து ஃபைலை அகற்ற Google Workspace கணக்கைப் பயன்படுத்த வேண்டும்.

  1. கீழே உள்ள வழிசெலுத்தல் மெனுவில், ஸ்பேஸ்கள் ஐகானை தட்டி and then ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. மேலே உள்ள பகிர்ந்தவை பிரிவைக் கிளிக் செய்யவும். ஃபைலுக்கு அடுத்துள்ள, உரையாடலில் பார்ப்பதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.
  3. ஃபைல் இருக்கும் மெசேஜின் மேலே கர்சரைக் கொண்டுசெல்லவும்.
  4. மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து அதன் பிறகு நீக்கு அதன் பிறகு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்:

  • Driveவில் ஒரு ஃபைலை நீக்கினால் அது பகிரப்பட்ட அரட்டை மெசேஜில் இருந்து நீக்கப்படும் வரை அதன் இணைப்பு ஸ்பேஸில் காட்டப்படும்.
    • அரட்டையில் இருந்து ஃபைலை நீக்கவில்லையெனில் அதைத் தேர்ந்தெடுக்கும்போது "நீக்கியவை ஃபோல்டரில் ஃபைல் உள்ளது" மெசேஜை ஃபைல் இணைப்பு காட்டும்.
    • உரையாடலில் இருந்து ஃபைலை நீக்காமல் Driveவில் நீக்கியவை ஃபோல்டரைக் காலியாக்கி இருந்தால் ஃபைலை அதன் இணைப்பு மூலம் திறக்க முடியாது.
  • உரையாடல் மெசேஜில் இருந்து ஃபைலை நீக்கினால் உரையாடலில் இருந்தும் ஸ்பேஸின் ’பகிர்ந்தவை’ பிரிவில் இருந்தும் அதன் இணைப்பு அகற்றப்படும்.

Google Chatடில் தடுக்கப்பட்ட ஃபைல் வகைகள்

Google Chatடில் பதிவேற்றப் பிழையைப் பெறுவதற்குச் சில காரணங்கள் உள்ளன. செயல்படுத்தக்கூடிய ஃபைல்கள் போன்ற வைரஸ்களைப் பரப்பக்கூடிய ஃபைல்களையும் இணைப்புகளையும் Chat தடுக்கிறது. தீங்கிழைக்கும் மென்பொருளைத் தடுப்பதற்காக அனுமதிக்கப்படாத ஃபைல் வகைகளை Chat அடிக்கடி புதுப்பிக்கும்.

குறிப்பிட்ட ஃபைல் வகைகளை இணைக்க முடியாது. இதில் அடங்குபவை:

  • ADE, ADP, APK, BAT, CAB, CHM, CMD, COM, CPL, DLL, DMG, EXE, HTA, INS, ISP, JAR, JS, JSE, LIB, LNK, MDE, MSC, MSI, MSP, MST, NSH, PIF, SCR, SCT, SHB, SYS, VB, VBE, VBS, VXD, WSC, WSF, WSH.
    GZ, BZ2 ஃபைல்கள் போன்ற சுருக்கப்பட்ட ஃபைல்களும் ZIP, TGZ ஃபைல்கள் போன்ற காப்பகங்களில் இருக்கும் ஃபைல்களும் இந்தப் பட்டியலில் அடங்கும்.
  • தீங்கிழைக்கும் மேக்ரோக்களைக் கொண்ட ஆவணங்கள்.
  • உள்ளடக்கம் ஒரு காப்பகமாக இருக்கும் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்ட காப்பகங்கள்.

தடுக்கப்பட்ட ஃபைல் மேலே பட்டியலிடப்படாமல் இருந்து, ஃபைல் பாதுகாப்பானது என நீங்கள் உறுதியாக இருந்தால் ஃபைலை Driveவில் பதிவேற்றி அதை Drive இணைப்பாக அனுப்பவும்.

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
4318864847837932133
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false