Google Chatடில் தேடல் ஆப்பரேட்டர்களைப் பயன்படுத்துதல்

Google Chat தேடல் முடிவுகளை வடிகட்ட, தேடல் ஆப்பரேட்டர்கள் என்றழைக்கப்படும் வார்த்தைகளையோ குறியீடுகளையோ பயன்படுத்தலாம். துல்லியமாகத் தேட ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பரேட்டர்களைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் பயன்படுத்தக்கூடிய தேடல் ஆப்பரேட்டர்கள்

முக்கியம்: Gmailலில் உள்ள Chatடில் தேடல் ஆப்பரேட்டர்களைப் பயன்படுத்த முடியாது.

நீங்கள் தேடக்கூடியவை தேடல் ஆப்பரேட்டர் மற்றும் உதாரணம்
குறிப்பிட்ட ஒருவர் அனுப்பிய மெசேஜ்களைத் தேடுதல்.

from:

எடுத்துக்காட்டுகள்:

from:me

from:john@xyz.com

Google Docs, Sheets அல்லது Slides இணைப்பைக் கொண்ட மெசேஜ்களைத் தேடுதல்.

has:doc

has:sheet

has:slide

ஃபைல், இணைப்பு, வீடியோ அல்லது வேறொரு வகையான இணைப்பைக் கொண்ட மெசேஜ்களைத் தேடுதல்.

has:file

has:url

has:video

has:pdf

has:image

ஒரு குறிப்பிட்ட நபரைக் குறிப்பிடும் மெசேஜ்களைத் தேடுதல்.

at:

எடுத்துக்காட்டுகள்:

at:me

at:rashad

at:fatima@xyz.com

குறிப்பிட்ட வார்த்தை அல்லது சொற்றொடரைத் தேடுதல்.

" "

எடுத்துக்காட்டுகள்:

"happy birthday"

"anniversary"

தேடல் முடிவுகளில் இருந்து குறிப்பிட்ட மெசேஜ்களைத் தேடுதல்.

-

எடுத்துக்காட்டுகள்:

from:issac -from:jenny

-birthday from:jenny

-has:file from:issac

குறிப்பிட்ட காலக் கட்டத்தில் அனுப்பிய மெசேஜ்களைத் தேடுதல்.

after:

before:

எடுத்துக்காட்டுகள்: 

after:16/04/2023

before:18/04/2023

குறிப்பிட்ட காலக் கட்டத்திற்கு முன்பு அல்லது பிறகு உள்ள மெசேஜ்களை “d” (நாள்), “m” (மாதம்) மற்றும் “y” (ஆண்டு) எழுத்துகளைப் பயன்படுத்தித் தேடலாம்.

older_than:

newer_than:

எடுத்துக்காட்டுகள்:

newer_than:2d

older_than:1y

குறிப்பிட்ட காலக் கட்டத்திற்குள் அனுப்பப்பட்ட மெசேஜ்களுக்கான நேரமண்டலத்தைக் குறிப்பிடுதல்.

tz:GMT+hh:mm

tz:GMT-hh:mm

எடுத்துக்காட்டுகள்:

after:02/01/2023 before:20/12/2023 tz:GMT-05:30

newer_than:3d older_than:2d tz:GMT+05:00

நேரடி மெசேஜ் அல்லது ஸ்பேஸ் முடிவுகளை மட்டும் வடிகட்டுதல்.

நேரடி மெசேஜை வடிகட்ட

is:dm

is:chat

ஸ்பேஸ் முடிவுகளை வடிகட்ட

is:room

எடுத்துக்காட்டுகள்:

happy birthday is:dm

anniversary is:room

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12860015132757359847
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false