ஸ்பேஸில் Google குழுவைச் சேர்த்தல்

திட்டப்பணிக் குழுக்கள், துறைகள், சக மாணவர்கள் போன்ற குறிப்பிட்ட பயனர்கள் Google Groupsஸைப் பயன்படுத்தி பொதுவான ஆர்வங்கள் குறித்துத் தொடர்புகொள்ளலாம், கூட்டுப்பணி செய்யலாம். ஸ்பேஸில் ஒரு குழு சேர்க்கப்படும்போது, அதன் உறுப்பினர்கள் Chat குழுக்களில் இருந்து ஸ்பேஸ்களுக்குத் தானாகவே ஒத்திசைக்கப்படுவார்கள்.

  • குழுவின் மெம்பர்ஷிப்பில் செய்யும் மாற்றங்கள் ஸ்பேஸிலும் பிரதிபலிக்கும் (உறுப்பினர்களைச் சேர்த்தல், அகற்றுதல் போன்றவை).
  • இந்த அம்சம் Google Workspace கணக்குகளில் மட்டுமே கிடைக்கிறது.

குழுவின் கட்டுப்பாடுகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்

  • குழுவைச் சேர்த்தல்
    • ஸ்பேஸில் ஒரு குழுவைச் சேர்க்க முடியவில்லையெனில், குழு உரிமையாளரையோ நிர்வாகியையோ தொடர்புகொள்ளவும். இந்த அம்சத்தை உங்கள் நிர்வாகி கட்டுப்படுத்தி இருக்கலாம்.
  • விருந்தினர் அணுகல்
    • நிறுவனத்தைச் சாராதவர்களைச் சேர அனுமதி என்பது இயக்கப்பட்டிருந்தால், ஸ்பேஸில் சேரும்படி குழுவும் அதன் உறுப்பினர்களும் அழைக்கப்படுவார்கள்.
    • நிறுவனத்தைச் சாராதவர்கள் குழுவில் சேர்க்கப்பட்டிருந்து நிறுவனத்தைச் சாராதவர்களைச் சேர அனுமதி என்பது ஸ்பேஸில் முடக்கப்பட்டிருந்தால், நிறுவனத்தைச் சாராதவர்கள் ஸ்பேஸில் இருந்து விலக்கப்பட்டிருப்பார்கள்.
  • ஸ்பேஸில் இருந்து வெளியேறுதல்
    • குழு உறுப்பினர் மெம்பர்ஷிப்கள் குழு வழியாக ஸ்பேஸுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஸ்பேஸில் இருந்து வெளியேற, நீங்கள் Google Groupsஸைப் பயன்படுத்தி வெளியேற வேண்டும். குழுவில் இருந்து வெளியேறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
    • Chatடின் ஸ்பேஸில் உள்ள குழு உறுப்பினரை ஸ்பேஸில் இருந்து நேரடியாக அகற்ற முடியாது. குழுவில் இருந்து உறுப்பினர் அகற்றப்பட வேண்டும் அல்லது ஸ்பேஸில் இருந்து குழு அகற்றப்பட வேண்டும்.
    உதவிக்குறிப்பு: ஸ்பேஸில் இருந்து நேரடியாக உங்களால் வெளியேற முடியவில்லை என்றால் அதற்குப் பதிலாக ஸ்பேஸை நீங்கள் முடக்கிக்கொள்ளலாம்.
  • பணிகள்
    • ஸ்பேஸில் உறுப்பினராக இல்லாதவருக்குப் பணிகளை ஒதுக்க முடியாது.
  • ஸ்பேஸின் வரம்பு
    • ஸ்பேஸின் குழுக்களில் உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை ஸ்பேஸின் வரம்பை மீறினால், அனைத்து குழுக்களும் ஸ்பேஸில் இருந்து அகற்றப்படும்.

ஸ்பேஸில் ஒரு குழுவைச் சேர்த்தல்

நீங்கள் ஒரு ஸ்பேஸ் நிர்வாகியாகவோ உறுப்பினர்களை நிர்வகிப்பதற்கான அனுமதிகளைக் கொண்டவராகவோ இருந்தால், ஸ்பேஸில் உங்களால் ஒரு குழுவைச் சேர்க்க முடியும். குழுவைச் சேர்க்கும்போது, குழு உறுப்பினர்கள் அனைவரும் ஸ்பேஸில் ஒத்திசைக்கப்படச் சிறிது நேரம் ஆகலாம். குழுவும் அதன் உறுப்பினர்களும் ஸ்பேஸில் ஒத்திசைக்கப்படும்போதும் நீங்கள் மெசேஜ்களை ஸ்பேஸில் இடுகையிடலாம். மெசேஜ்கள் இடுகையிடப்பட்ட பிறகு ஸ்பேஸில் சேரும் குழு உறுப்பினர்களுக்கு அந்த மெசேஜ்கள் ‘படிக்காதது’ என்று காட்டப்படும்.

  1. கம்ப்யூட்டரில், Google Chat அல்லது உங்கள் Gmail கணக்கிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில், ஸ்பேஸ்கள் அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்து ஒரு ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே உள்ள ஸ்பேஸின் பெயரைக் கிளிக் செய்யவும்.
  4. உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. மேல் வலதுபுறத்தில் உள்ள + சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. நீங்கள் சேர்க்க விரும்பும் குழுவின் பெயரை டைப் செய்யவும்.
  7. சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்:

  • ஸ்பேஸில் ஒரு குழுவைச் சேர்க்க முடியவில்லையெனில், குழு உரிமையாளர்களையும் நிர்வாகிகளையும் தொடர்புகொள்ளவும். இந்தச் செயலை குழு உரிமையாளர்களும் நிர்வாகிகளும் மட்டும் செய்யும் வகையில் உங்கள் நிர்வாகி கட்டுப்படுத்தி இருக்கலாம்.
  • குழு உறுப்பினர்களை ஸ்பேஸ் நிர்வாகிகளாக மாற்றலாம். ஸ்பேஸ் நிர்வாகியாக உங்கள் பொறுப்பு குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஸ்பேஸில் இருந்து ஒரு குழுவை அகற்றுதல்

முக்கியம்: ஸ்பேஸில் இருந்து ஒரு குழுவை அகற்றினால், ஸ்பேஸில் முன்பு பகிரப்பட்ட ஃபைல்களுக்கான அணுகலையும் அதன் உறுப்பினர்கள் இழப்பார்கள். இருப்பினும், குழுக்கள் அல்லது உறுப்பினர்களுடன் இந்த ஃபைல்கள் நேரடியாகப் பகிரப்பட்டிருந்தால், உறுப்பினர்களுக்கு அவற்றுக்கான அணுகல் தொடர்ந்து இருக்கும்.

நீங்கள் ஒரு ஸ்பேஸ் நிர்வாகியாகவோ உறுப்பினர்களை நிர்வகிப்பதற்கான அனுமதிகளைக் கொண்டவராகவோ இருந்தால், ஸ்பேஸில் இருந்து உங்களால் ஒரு குழுவை அகற்ற முடியும். குழுவை அகற்றிய பிறகு, குழு உறுப்பினர்கள் ஸ்பேஸில் இருந்து அகற்றப்படச் சிறிது நேரம் ஆகலாம். ஸ்பேஸில் இருந்து உறுப்பினர்கள் அகற்றப்பட்ட பிறகு அவர்களால்:

  • அந்த ஸ்பேஸில் எந்தச் செயலையும் செய்ய முடியாது
  • அந்த ஸ்பேஸின் இதுவரையிலான மெசேஜ்களைப் பார்க்க முடியாது
  1. கம்ப்யூட்டரில், Google Chat அல்லது உங்கள் Gmail கணக்கிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில், ஸ்பேஸ்கள் அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்து ஒரு ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே உள்ள ஸ்பேஸின் பெயரைக் கிளிக் செய்யவும்.
  4. உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. குழுவின் பெயருக்கு அடுத்துள்ள, மூன்று புள்ளி மெனு அதன் பிறகு ஸ்பேஸில் இருந்து அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: ஒரு தனிப்பட்ட குழு உறுப்பினரை ஸ்பேஸில் இருந்து அகற்ற வேண்டுமெனில், அந்த உறுப்பினரை Google Groupsஸில் இருந்து அகற்றவும். குழு உரிமையாளர்கள் அல்லது முறையான அனுமதிகளைக் கொண்ட குழு உறுப்பினர்கள் மட்டுமே குழுவில் இருந்து உறுப்பினர்களை அகற்ற முடியும்.

ஸ்பேஸில் குழுக்களைப் பார்த்தல்

  1. கம்ப்யூட்டரில், Google Chat அல்லது உங்கள் Gmail கணக்கிற்குச் செல்லவும்.
  2. இடதுபுறத்தில், ஸ்பேஸ்கள் அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்து ஒரு ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மேலே உள்ள ஸ்பேஸின் பெயரைக் கிளிக் செய்யவும்
  4. உறுப்பினர்களை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

இந்தச் சூழல்களில் குழு மெம்பர்ஷிப்களைப் பார்க்க முடியாது:

  • உங்கள் குழுவின் உறுப்பினர் தெரிவுநிலை உரிமையாளர்கள், நிர்வாகிகள் அல்லது உறுப்பினர்களுக்கு என்று அமைக்கப்படாமல் இருத்தல்.
  • நீங்கள் மொபைல் சாதனத்தைப் பயன்படுத்துதல்.

சில உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் இருக்கலாம்

  • குழு ஒத்திசைக்கப்படச் சிறிது நேரம் ஆகலாம்.
  • விருந்தினர் அணுகல் முடக்கப்பட்டுள்ள ஸ்பேஸ்களில், நிறுவனத்தைச் சாராத உறுப்பினர்கள் தானாகவே விலக்கப்பட்டிருப்பதால், அவர்கள் எப்போதும் தேர்ந்தெடுக்க முடியாத நிலையிலேயே இருப்பார்கள்.

குழுக்களையும் மெம்பர்ஷிப்களையும் ஒத்திசைப்பதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

அக்டோபர் 17, 2023 முதல், ஸ்பேஸ்களில் நேரடியாகக் குழுக்களைச் சேர்க்கலாம்.

  • குழுக்களையும் மெம்பர்ஷிப்களையும் ஒத்திசைக்க, தற்போது அழைக்கப்பட்ட குழுக்களில் ஒன்றை மீண்டும் சேர்க்கவும்.
  • அதற்குப் பதிலாக, பயனர்கள் ஸ்பேஸில் சேர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ஸ்பேஸைக் கண்டறியத்தக்கதாக மாற்றிவிட்டு ஸ்பேஸின் இணைப்பைப் பகிரவும். வெவ்வேறு அணுகல் நிலைகளுடன் கூடிய ஸ்பேஸ்கள் பற்றி மேலும் அறிக.

முக்கியம்: அக்டோபர் 17, 2023க்கு முன்பு ஸ்பேஸிற்கு அழைக்கப்பட்ட குழுக்கள், உறுப்பினர் பட்டியலின் “அழைக்கப்பட்டவை” பிரிவின் கீழ் காட்டப்படும். இந்தக் குழு உறுப்பினர்கள் தானாகச் சேர்க்கப்படவில்லை, அவர்களாகவே ஸ்பேஸில் சேர்ந்தவர்கள்.

Google Takeoutடில் இருந்து உங்கள் தரவைப் பதிவிறக்குவது எப்படி?

ஸ்பேஸின் நேரடி உறுப்பினர்கள் அனுப்பிய மெசேஜ்களை Google Chat தரவின் ஒரு பகுதியாக Google Takeoutடில் இருந்து நீங்கள் பதிவிறக்கலாம். ஸ்பேஸின் குழு உறுப்பினர்கள் அனுப்பிய மெசேஜ்களை Google Groups தரவின் ஒரு பகுதியாக Google Takeoutடில் இருந்து நீங்கள் பதிவிறக்கலாம். தரவைப் பதிவிறக்குவதற்கான வழிமுறையைத் தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16600396824998632731
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false