ஸ்பேஸ் அமைப்புகளை நிர்வகித்தல்

ஸ்பேஸ் நிர்வாகியாக நீங்கள்:

  • ஸ்பேஸில் யார் சேரலாம் என்பதைக் கட்டுப்படுத்தலாம்.
  • உறுப்பினர்களையும் குழுக்களையும் யார் நிர்வகிக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்தலாம்.
  • உங்கள் நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் ஸ்பேஸை அணுகலாமா அல்லது நீங்கள் அழைக்கும் நபர்கள் மட்டும் அணுகலாமா என்பதை மாற்றலாம்.
  • ஸ்பேஸ் உறுப்பினர்களுக்கான அனுமதிகளைக் கட்டுப்படுத்தலாம்.

முக்கியம்:

ஸ்பேஸ் அணுகல் அமைப்புகளை மாற்றுதல்

நீங்கள் ஸ்பேஸ் நிர்வாகியாக இருந்தால், ஸ்பேஸை உங்கள் நிறுவனத்தில் இருக்கும் அனைவருக்குமோ நீங்கள் அழைப்பவர்களுக்கு மட்டுமோ அணுகக்கூடியதாக மாற்றலாம்.

  1. iPhone அல்லது iPadல், Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
    • Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
  2. கீழே உள்ள வழிசெலுத்தல் மெனுவில், ஸ்பேஸ்கள் ஐகானை தட்டவும்.
  3. மாற்ற விரும்பும் ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. ஸ்பேஸின் பெயருக்கு அடுத்துள்ள வலது அம்புக்குறியை Arrow Right தட்டவும்.
  5. ஸ்பேஸ் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  6. “அணுகல்” என்பதற்குக் கீழே, கீழ் தோன்றும் மெனுவில் இருந்து பார்வையாளர் விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கவும்:
    • கட்டுப்படுத்தப்பட்ட ஸ்பேஸைக் கண்டறியத்தக்கதாக மாற்ற உங்கள் ஒட்டுமொத்த டொமைனுக்கும் பார்வையாளர்களைத் தேர்ந்தெடுக்கவும்.
    • கண்டறியத்தக்க ஸ்பேஸைக் கட்டுப்படுத்தப்பட்டதாக மாற்ற, கட்டுப்படுத்தப்பட்டது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. “உறுப்பினர்களையும் குழுக்களையும் யார் நிர்வகிக்கலாம்” என்பதற்குக் கீழே, அனைவரும் அல்லது ஸ்பேஸ் நிர்வாகி என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்புகள்:

  • கண்டறியத்தக்க ஸ்பேஸ்களைத் தேட முடியும், ஆனால் உலாவ முடியாது.
  • நீங்கள் அழைக்கப்பட்டுள்ள கட்டுப்படுத்தப்பட்ட ஸ்பேஸ்களைத் தேட முடியும்.
  • உங்கள் நிறுவனத்தைச் சேராதவர்கள் ஸ்பேஸில் சேர ஏற்கெனவே நீங்கள் அனுமதித்திருந்தால் பிறருக்கு அந்த ஸ்பேஸைக் கண்டறியத்தக்கதாக மாற்ற முடியாது.

ஸ்பேஸிற்கான அனுமதிகளை மாற்றுதல்

  1. iPhone அல்லது iPadல், Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸை திறக்கவும்.
    • Gmailலில்: கீழ்ப்பகுதியில் உள்ள Chat ஐகானை தட்டவும்.
  2. கீழே உள்ள வழிசெலுத்தல் மெனுவில், ஸ்பேஸ்கள் ஐகானை தட்டவும்.
  3. மாற்ற விரும்பும் ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. வலது அம்புக்குறியை Arrow Right தட்டவும்.
  5. ஸ்பேஸ் அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
  6. “அனுமதிகள்” என்பதற்குக் கீழே, இவற்றைப் பயனர்கள் செய்யலாமா அல்லது ஸ்பேஸ் நிர்வாகிகள் மட்டும் செய்யலாமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:
    • ஸ்பேஸ் விவரங்களை மாற்றுதல்
    • 'இதுவரையிலான உரையாடல்கள்' அம்சத்தை இயக்குதல்/முடக்குதல்
    • @அனைவருக்கும் குறிப்பிடலைப் பயன்படுத்துதல்
    • ஆப்ஸை நிர்வகித்தல்
    • Webhookகுகளை நிர்வகித்தல்
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
3703895069577950574
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false