Google Chatடில் பிரத்தியேக ஈமோஜிகள் குறித்து அறிக

Google Chat மூலம் பிரத்தியேக ஈமோஜிகளை உருவாக்கி உங்கள் நிறுவனத்துடன் பகிருங்கள். மெசேஜ்களைப் பிரத்தியேகமாக்கவும் உங்கள் குழுவின் பாணியைப் பகிரவும் உங்கள் பிரத்தியேக ஈமோஜிகளைப் பயன்படுத்துங்கள்.

முக்கியம்:

  • பணி அல்லது பள்ளிக் கணக்குகளுக்கு மட்டுமே பிரத்தியேக ஈமோஜிகள் கிடைக்கும்.
  • உங்கள் நிர்வாகி பிரத்தியேக ஈமோஜிகளை இயக்கலாம் அல்லது முடக்கலாம். உங்கள் நிர்வாகி யார் என்பதைக் கண்டறியுங்கள்.
  • உங்கள் நிறுவனத்தைச் சேராதவர்களுடன் பிரத்தியேக ஈமோஜிகளைப் பகிர முடியாது.

பிரத்தியேக ஈமோஜியை உருவாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
  2. உரையாடலைத் திறக்கவும்.
  3. கீழ் வலதுபுறத்தில் உள்ள ஈமோஜியைச் சேர்ப்பதற்கான ஐகானை Emoji கிளிக் செய்யவும்.
  4. “ஈமோஜிகளைத் தேடு” என்பதற்கு அடுத்துள்ள, உருவாக்கு  அதன் பிறகு படத்தைப் பதிவேற்று அதன் பிறகு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Chatடில் பிரத்தியேக ஈமோஜிகளைப் பயன்படுத்துதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
  2. உரையாடலைத் திறக்கவும்.
  3. கீழ் வலதுபுறத்தில் உள்ள ஈமோஜியைச் சேர்ப்பதற்கான ஐகானை Emoji கிளிக் செய்யவும்.
  4. உங்கள் நிறுவனத்தின் பிரத்தியேக ஈமோஜிகள் அனைத்தையும் திறக்க, பிரத்தியேக ஈமோஜிகளை  கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: பிரத்தியேக ஈமோஜியின் பெயரைப் பார்க்க நீங்கள் அதன் மேலே கர்சரைக் கொண்டுசெல்லலாம்.

உங்கள் பிரத்தியேக ஈமோஜிகளைக் கண்டறிதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
  2. உரையாடலைத் திறக்கவும்.
  3. கீழ் வலதுபுறத்தில் உள்ள ஈமோஜியைச் சேர்ப்பதற்கான ஐகானை Emoji கிளிக் செய்யவும்.
  4. பிரத்தியேக ஈமோஜிகள்  அதன் பிறகு நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: பெயரை டைப் செய்து பிரத்தியேக ஈமோஜிகளைத் தேடலாம்.

உங்கள் பிரத்தியேக ஈமோஜிகளை நீக்குதல்

முக்கியம்:

  • பிரத்தியேக ஈமோஜியை நீக்கும்போது உங்கள் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் அது அகற்றப்படும். மெசேஜ்கள் அல்லது உணர்வு வெளிப்பாடுகளில் உள்ள ஈமோஜியும் மாற்றப்படும்.
  • நீங்கள் உருவாக்கும் பிரத்தியேக ஈமோஜிகளை மட்டுமே உங்களால் நீக்க முடியும்.
  • ஈமோஜி நிர்வாகிகளால், நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உருவாக்கிய பிரத்தியேக ஈமோஜிகளை அகற்ற முடியும்.

பிரத்தியேக ஈமோஜியை நீக்க:

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
  2. உரையாடலைத் திறக்கவும்.
  3. கீழ் வலதுபுறத்தில் உள்ள ஈமோஜியைச் சேர்ப்பதற்கான ஐகானை Emoji கிளிக் செய்யவும்.
  4. பிரத்தியேக ஈமோஜிகள்  அதன் பிறகு நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. ஈமோஜிக்கு வலதுபுறத்தில் உள்ள நீக்குவதற்கான ஐகான்  அதன் பிறகு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் நிறுவனத்தில் உள்ள பிரத்தியேக ஈமோஜிகளைக் கண்டறிதல்

ஈமோஜி நிர்வாகியாக நீங்கள்:

  • உங்கள் நிறுவனத்தில் உள்ளவர்கள் உருவாக்கும் பிரத்தியேக ஈமோஜிகளைக் கண்டறியலாம்.
  • ஈமோஜியின் பின்வரும் விவரங்களைக் கண்டறியலாம்:
    • படம்
    • பெயர்
    • உருவாக்கியவரின் பெயர்
    • உருவாக்கிய தேதி

பிரத்தியேக ஈமோஜியைக் கண்டறிய:

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
  2. அமைப்புகள் அதன் பிறகு பிரத்தியேக ஈமோஜியை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

 உதவிக்குறிப்பு: தேடல் பட்டியில் ஈமோஜியின் பெயரை டைப் செய்து தேடலாம்.

உங்கள் நிறுவனத்தில் உள்ள பிரத்தியேக ஈமோஜிகளை நீக்குதல்

ஈமோஜி நிர்வாகியாக, சிக்கலுக்குரிய அல்லது உங்கள் நிறுவனத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத ஈமோஜிகளை நீங்கள் நீக்கலாம்.

முக்கியம்: நீக்கப்பட்ட ஈமோஜிகள் அனைத்தும் மெசேஜ்கள் மற்றும் ரியாக்ஷன்களில் இருந்து அகற்றப்படும். நிறுவனத்தில் யாரும் அவற்றைப் பகிரவோ பயன்படுத்தவோ முடியாது.

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலுக்குச் செல்லவும்.
  2. அமைப்புகள் அதன் பிறகு பிரத்தியேக ஈமோஜியை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் நீக்க விரும்பும் ஈமோஜியின் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனு அதன் பிறகு ஈமோஜியை நீக்கு  அதன் பிறகு நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
9406388214332420701
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false