ஸ்பேஸில் மெசேஜ் தொடரைப் பயன்படுத்துதல்

ஸ்பேஸில் முதன்மை உரையாடலுக்கு மட்டுமல்லாமல் நீங்கள் எந்த மெசேஜுக்கும் பதிலளிக்கலாம், தனி மெசேஜ் தொடரை உருவாக்கலாம். மெசேஜ் தொடரின் மூலம் முக்கியமான கலந்துரையாடல்களைக் கண்காணிக்கலாம், முதன்மை உரையாடலிலேயே எல்லாவற்றையும் உரையாடாமல் அதைத் தனியாக வைத்திருக்கலாம்.

மெசேஜ் தொடரில் பதிலளித்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmailலைத் திறக்கவும்.

    • Gmailலில்: இடதுபுறத்தில் உள்ள Chat என்பதைக் கிளிக் செய்யவும்.

  2. ஸ்பேஸைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. மெசேஜிற்குச் செல்லவும்.
  4. மெனுவில் உள்ள, மெசேஜ் தொடரில் பதிலளிப்பதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.
  5. ஸ்பேஸின் வலதுபுறத்தில் உள்ள மெசேஜ் தொடர் பேனலில் உங்கள் மெசேஜை டைப் செய்யவும்.
  6. அனுப்புவதற்கான ஐகானை கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: மெசேஜ் தொடரில் ஏற்கெனவே பதில்கள் இருந்தால் மெசேஜ் தொடர் பேனலைத் திறக்க மெசேஜைக் கிளிக் செய்யவும்.

மெசேஜ் தொடரைப் பின்தொடர்தல் அல்லது பின்தொடர்வதை நிறுத்துதல்

  1. ஸ்பேஸின் மேல் வலது மூலையில் உள்ள, செயலிலுள்ள மெசேஜ் தொடர்களுக்கான ஐகானை கிளிக் செய்யவும்.
  2. மெசேஜ் தொடர் பேனலில், மெசேஜ் தொடர் மீது கர்சரை வைக்கவும்:
    • மெசேஜ் தொடரைப் பின்தொடர, பின்தொடர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மெசேஜ் தொடரைப் பின்தொடர்வதை நிறுத்த, பின்தொடர்கிறீர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. மெசேஜ் தொடர் பேனலின் மேற்பகுதியில், மெசேஜ் தொடர்களை ஃபில்டர் செய்ய, இதில் ஒன்றைக் கிளிக் செய்யவும்:
    • என்னைக் குறிப்பிட்டவை: நீங்கள் குறிப்பிடப்பட்டுள்ள மெசேஜ் தொடர்கள்.
    • பின்தொடர்கிறீர்கள்: நீங்கள் பின்தொடரும் மெசேஜ் தொடர்கள்.

உதவிக்குறிப்பு: மெசேஜ் தொடர் பேனலின் அளவை மாற்ற, பேனலின் இடது ஓரத்தில் உள்ள பட்டியைக் கிளிக் செய்து நகர்த்தவும்.

மெசேஜ் தொடர் அறிவிப்புகளை நிர்வகித்தல்

மெசேஜ் தொடரில் புதிய மெசேஜ்கள் பற்றிய அறிவிப்பை எப்படி, எப்போது பெறுவது என்பதை நீங்கள் மாற்றலாம்.

  1. ஸ்பேஸின் மேற்பகுதியில் உள்ள ஸ்பேஸின் பெயரைக் கிளிக் செய்து அதன் பிறகு அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. அறிவிப்புகளுக்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • அனைத்தும்: புதிய மெசேஜ்கள் மற்றும் நீங்கள் பின்தொடரும் மெசேஜ் தொடர்களில் வரும் பதில்கள் குறித்த அறிவிப்புகள் காட்டப்படும்.
    • பின்தொடர்பவை: பதில்கள், நீங்கள் பின்தொடரும் மெசேஜ் தொடர்கள் மற்றும் @குறிப்பிடல்கள் குறித்த அறிவிப்புகள் காட்டப்படும்.
    • எதுவுமில்லை: அறிவிப்புகள் எதுவும் காட்டப்படாது. யாராவது உங்களை @ மூலம் குறிப்பிட்டால், அந்த ஸ்பேஸ் பெயருக்கு அடுத்து ஒரு புள்ளி காட்டப்படும்.
    • விருப்பத்திற்குரியது: தடிமனான எழுத்துகளில் காட்டப்படுவதையும் உரையாடல் பட்டியலின் மேற்பகுதிக்கு உரையாடல் நகர்த்தப்படுவதையும் தடுக்க, "உரையாடலை முடக்கு" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: ஸ்பேஸில் உள்ள ஒரு மெசேஜ் தொடரை நீங்கள் பின்தொடர்ந்தால், அந்த மெசேஜ் தொடரில் ஏதேனும் செயல்பாடு நடக்கும்போதெல்லாம் ஒரு புள்ளி மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். ஸ்பேஸில் உள்ள ஒவ்வொரு மெசேஜ் தொடருக்கு அடுத்தும் படிக்கப்படாத மெசேஜ்களின் எண்ணிக்கையை நீங்கள் பார்க்கலாம்.

தொடர்புடைய தகவல்கள்

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2983924053029102815
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false