PagerDuty ஆப்ஸைப் பயன்படுத்துதல்

உங்கள் PagerDuty சிக்கல்கள் குறித்த அறிவிப்புகளைப் பெறுவதற்கும் புதிய சிக்கல்களை ஏற்றுக்கொள்வது, அவற்றைச் சரிசெய்வது, பதிவுசெய்வது ஆகியவற்றுக்கும் Google Chatடில் PagerDuty ஆப்ஸைப் பயன்படுத்தலாம்.

தொடங்குவதற்கு முன்:

Chatடில் PagerDuty ஆப்ஸை அமைத்தல்

  1. Chatடைத் திறக்கவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
  • ஆப்ஸில் நேரடி மெசேஜைத் திறக்கவும்.
  • ஆப்ஸில் ஒரு ஸ்பேஸிற்குச் செல்லவும்.
  1. உங்கள் PagerDuty கணக்கிலும் துணை டொமைனிலும் உள்நுழைய, அங்கீகரி என்பதைக் கிளிக் செய்யவும். ஆப்ஸை உள்ளமைக்க, நீங்கள் துணை டொமைனில் நிர்வாகி அல்லது கணக்கு உரிமையாளர் அனுமதிகள் கொண்ட PagerDuty கணக்கில் உள்நுழைய வேண்டும்.
  2. PagerDuty இணையதளத்தில் உள்நுழைவை நிறைவுசெய்யவும்.
  3. சில PagerDuty அனுமதிகளை அணுக, Chatடில் PagerDuty ஆப்ஸை அனுமதிக்கவும்.
  4. கேட்கப்பட்டால் சரியான PagerDuty கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. இணைக்கப்பட்டதும் “/pd_settings” என்று டைப் செய்து அறிவிப்பு அமைப்புகளை உள்ளமைக்கவும்.
  6. புதிய அமைப்புகளை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. நீங்கள் அறிவிப்புகளைப் பெற விரும்பும் PagerDuty மூலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  8. Chatடில் அறிவிப்புகளைப் பெற விரும்புபவற்றுக்கு அருகிலுள்ள செக்பாக்ஸைத் தேர்வுசெய்யவும்.
  9. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  10. (விருப்பத்திற்குரியது) மற்றொரு திட்டப்பணியைச் சேர்க்க “/pd_settings” என்று மீண்டும் டைப் செய்யவும். அதன்பிறகு உரையாடலின் கீழ்ப்பகுதியில் அங்கீகரி பட்டனைக் கிளிக் செய்யவும்.

இந்த ஆப்ஸைச் சேர்க்கும் ஒவ்வொரு ஸ்பேஸிலும் அறிவிப்புகளை அமைக்க வேண்டும். உறுப்பினராக உள்ள எல்லா ஸ்பேஸ்களுக்கும் ஆப்ஸ் அறிவிப்புகளை அனுப்பும்.

ஆப்ஸ் அமைப்புகளை மாற்றுதல்

PagerDuty நிர்வாகிகளோ கணக்கு உரிமையாளர்களோ மட்டுமே அமைப்புகளை மாற்ற முடியும்.

  1. Chatடைத் திறக்கவும்.
  2. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:
    • ஆப்ஸில் நேரடி மெசேஜைத் திறக்கவும்.
    • ஆப்ஸில் ஒரு ஸ்பேஸிற்குச் செல்லவும்.
  3. அமைப்புகள் என டைப் செய்யவும்.
    • ஸ்பேஸில் “/pd_settings” என்று டைப் செய்யவும். ஆப்ஸின் தற்போதைய அமைப்புகள் காட்டப்படும்.
    • ஆப்ஸின் நேரடி மெசேஜில் இருந்தால் செயலில் உள்ள PagerDuty இணைப்புகள் அனைத்தையும் பார்க்கலாம்.
    • ஸ்பேஸில் இருந்தால் அந்த ஸ்பேஸில் செயலில் உள்ள PagerDuty இணைப்புகள் அனைத்தையும் பார்க்கலாம்.
  4. தெரியக்கூடிய இணைப்பு எதையேனும் மாற்றவோ நீக்கவோ, மாற்று அல்லது நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. புதிய PagerDuty இணைப்புகளை உருவாக்க, அங்கீகரி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்பேஸில் இருந்து ஆப்ஸை அகற்றினால் ஆப்ஸ் அமைப்புகள் நீக்கப்படும்.

ஸ்பேஸ்களில் ஆப்ஸைப் பயன்படுத்துதல்

ஸ்பேஸ்களில் ஆப்ஸைப் பயன்படுத்த “/” என்று டைப் செய்வதன் மூலம் நீங்கள் பல்வேறு கட்டளைகளைப் பயன்படுத்தலாம். கட்டளைகளின் முழுப் பட்டியலைப் பார்க்க “/pd_help” என்று டைப் செய்யவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14731357738228275417
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false