கம்ப்யூட்டரில் Google Chat தொடர்பான பிழைகளைச் சரிசெய்தல்

கம்ப்யூட்டரில் Google Chatடைப் பயன்படுத்தும்போது பிழை ஏற்பட்டால், சிக்கலைச் சரிசெய்வதற்குச் சில வழிகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்.

காட்டப்படக்கூடிய பிழைகள்:

  1. "உரையாடலை ஏற்ற முடியவில்லை."
  2. "உரையாடலுடன் இணைக்க முயல்கிறது."
  3. "ஸ்பேஸ்களின் பட்டியலை ஏற்ற முடியவில்லை. ஒரு நிமிடம் கழித்து மீண்டும் முயலவும்."
உலாவியில் நீட்டிப்புகளையும் ஆப்ஸையும் நிறுவல் நீக்குதல்

சில நீட்டிப்புகளும் ஆப்ஸும் Google Chat ஏற்றப்படுவதைத் தடுக்கக்கூடும். இந்தச் சிக்கலைச் சரிசெய்ய:

  1. செயலிலுள்ள நீட்டிப்புகளை நிறுவல் நீக்கலாம்.
  2. செயலிலுள்ள ஆப்ஸை நிறுவல் நீக்கலாம்.
  3. மறைநிலைப் பயன்முறையில் உலாவுவதன் மூலம் நீட்டிப்புகளின் உபயோகத்தைத் தவிர்க்கலாம்.

உதவிக்குறிப்பு: Google Chat ஏற்றப்படுவதை வைரஸ் தடுப்பு மென்பொருள் தடுக்கக்கூடும்.

தள அனுமதிகளைச் சரிபார்த்தல்

பின்வரும் தளங்களை உங்கள் உலாவி தடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்:

Chromeமில் தள அனுமதிகளை மாற்றுவது எப்படி என அறிக. Chrome அல்லாமல் வேறு உலாவியைப் பயன்படுத்தினால் தள அனுமதிகளை மாற்றுவது எப்படி என அறிய, அந்த உலாவியின் உதவித் தளத்திற்குச் செல்லவும்.

நெட்வொர்க்கைச் சரிபார்த்தல்

உங்கள் கம்ப்யூட்டர் இணையத்துடன் இணைக்கப்பட்டிருப்பதையும், பின்வரும் டொமைன்கள் உங்கள் நெட்வொர்க் நிர்வாகியால் தடுக்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவும்:

உலாவியைச் சரிபார்த்தல்

ஆதரிக்கப்படும் உலாவியை நீங்கள் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். மொபைல் உலாவிகளிலும் Internet Explorer உலாவியிலும் Gmailலில் Chatடைப் பயன்படுத்த முடியாது.

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
2313289029890623715
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false