Google Chat உங்களை எவ்வாறு பாதுகாக்கிறது என அறிக

ஸ்பேம், ஃபிஷிங், மால்வேர் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்காக ஃபைல்களையும் மெசேஜ்களையும் Google Chat ஸ்கேன் செய்யும்.

ஃபைல்களின் வகைகள் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட மெசேஜ்கள்

Google Chatடில் பதிவேற்றப்படும் ஃபைல்கள் வைரஸ் தடுப்புக்காகத் தானாகவே ஸ்கேன் செய்யப்படும். மால்வேர், இணைப்பதற்கு அனுமதியில்லாத ஃபைல் வகை போன்றவற்றை Google Chat கண்டறிந்தால்:

  • Google Chat உங்களை எச்சரிக்கும்.
  • ஃபைலின் பதிவிறக்கங்களை Google Chat தடுக்கும்.

Google Chatடில் தடுக்கப்பட்டுள்ள ஃபைல் வகைகளைப் பற்றி மேலும் அறிக.

ஆன்லைனில் நடக்கும் சிறார் பாலியல் வன்கொடுமைகளை Google எப்படிக் கண்டறிந்து புகாரளிக்கிறது என அறிக

ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை 2021/1232ன் கீழ், ஆன்லைன் சிறார் பாலியல் வன்கொடுமையை Google Chat கண்டறிகிறது. 2002/58/EC வழிகாட்டுதலின் சட்டப்பிரிவுகள் 5(1) மற்றும் 6(1)ன் படி, ஆன்லைன் சிறார் பாலியல் வன்கொடுமையை எதிர்த்துப் போராடும் நோக்கத்திற்காக, தகவல்தொடர்புகளின் ரகசியத்தைக் காப்பதிலிருந்து இந்த ஒழுங்குமுறை விலக்களிக்கிறது. 

சிறுவர்களைத் தவறாகப் பயன்படுத்தும்/நடத்தும் உள்ளடக்கத்தை உருவாக்கவோ பதிவேற்றவோ பகிரவோ எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை Google அனுமதிப்பதில்லை. எங்கள் சேவையைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக, அத்தகைய உள்ளடக்கத்தைக் கண்டறிய ஹேஷ் மேட்சிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். அத்தகைய உள்ளடக்கத்தை நாங்கள் கண்டறிந்தால் உள்ளடக்கத்தை அகற்றுவது, கணக்குகளை முடக்குவது போன்ற தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம். யாருக்கெல்லாம் கணக்கு முடக்கப்பட்டுள்ளதோ அவர்கள் எங்கள் முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் அதைத் தீர்க்கக்கூடிய வழிகளைப் பற்றிய தகவல்கள் அவர்களுக்கு வழங்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருப்பவர்கள் அவர்களது நாட்டின் தரவுப் பாதுகாப்பு ஆணையத்திடமும் புகாரைத் தாக்கல் செய்யலாம். ஒழுங்குமுறை 2021/1232ல் குறிப்பிட்டுள்ளவாறு சட்டரீதியான தீர்வை நாடுவதற்கும் அவர்களுக்கு உரிமை உள்ளது.

தனிப்பட்ட தகவல், கொள்கைகளை மீறும் உள்ளடக்கம் உள்ளிட்ட தொடர்புடைய தகவல்கள் குறித்து நேஷ்னல் சென்டர் ஃபார் மிஸ்ஸிங் அண்ட் எக்ஸ்ப்லாய்ட்டட் சில்ரன் (NCMEC) அமைப்பிடம் புகாரளிக்கப்படும். அது, உலகெங்கும் உள்ள உரிய சட்ட அமலாக்கத் துறைகளுக்குப் புகார்களை அனுப்பும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14724826243003375195
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false