Google Chatடில் இருந்து வெளியேறுதல்

எந்தச் சாதனத்தில் இருந்தும் பல்வேறு Google Chat கணக்குகளில் இருந்து வெளியேறலாம், அவற்றை அகற்றலாம், அவற்றுக்கு இடையே மாறலாம்.

கம்ப்யூட்டரில் இருந்து வெளியேறுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Chat அல்லது Gmail கணக்கைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்யவும்.
  3. வெளியேறு அல்லது எல்லாக் கணக்குகளில் இருந்தும் வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.

வேறொரு கம்ப்யூட்டரிலிருந்து வெளியேறுதல்

வேறொரு கம்ப்யூட்டரில் உள்ள Google Chatடில் இருந்து வெளியேற மறந்துவிட்டால் தொலைநிலையில் இருந்தே உங்கள் கணக்கிலிருந்து வெளியேற முடியும். பயன்படுத்தாத சாதனத்திலிருந்து வெளியேறுதல்.

கணக்குகளுக்கு இடையே மாறி உள்நுழைந்த நிலையிலேயே இருத்தல்

உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட Google கணக்குகள் இருந்தால், ஒரே நேரத்தில் பல கணக்குகளில் உள்நுழையலாம். கணக்குகளுக்கு இடையே மாறி, அவற்றில் உள்நுழைந்த நிலையிலேயே இருக்கலாம்.

பல கணக்குகளில் உள்நுழைவது எப்படி என அறிக.

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
14664374682843899427
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
1026838
false
false