உங்களுக்கு எப்போது பணி இருக்கும் என்றோ எப்போது ஓய்வாக இருப்பீர்கள் என்றோ தெரிந்துகொள்ள உங்கள் கேலெண்டரைப் பாருங்கள்.
குறிப்பிட்ட நாளுக்குச் செல்லுதல்
- Android மொபைலில் Google Calendar ஆப்ஸை
திறக்கவும்.
- மேல் இடதுபுறத்தில், மாதத்தின் பெயரைத் தட்டவும். எடுத்துக்காட்டாக, ஜனவரி
.
- பிற மாதங்களுக்குச் செல்ல இடதுபுறமோ வலதுபுறமோ ஸ்வைப் செய்யவும்.
- ஒரு குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகளைப் பார்க்க தேதியைத் தட்டவும்.
இன்றைய நாளுக்குச் செல்ல: மேல் வலது மூலையில், இன்றைய நாளுக்குச் செல்வதற்கான ஐகானை தட்டவும்.
காட்ட வேண்டிய நாட்களின் எண்ணிக்கையைத் தேர்வுசெய்தல்
Calendar ஆப்ஸைத் திறந்ததும் வரவிருக்கும் நிகழ்வுகளின் பட்டியல் காட்டப்படும். ஒரு நாள் அல்லது பல நாட்களுக்கான நிகழ்வுகளைப் பார்க்க, நீங்கள் காட்சிகளுக்கு இடையே மாறலாம்.
- Android மொபைலில் Google Calendar ஆப்ஸை
திறக்கவும்.
- மேல் இடது மூலையில் உள்ள மெனு ஐகானை
தட்டவும்.
- திட்ட அட்டவணை அல்லது மாதம் போன்ற காட்சி விருப்பத்தைத் தேர்வுசெய்யவும். நாள்வாரியாக உங்கள் அனைத்து நிகழ்வுகள் அல்லது பணிகளின் பட்டியலைப் பார்க்க, திட்ட அட்டவணை என்பதைத் தேர்வுசெய்யவும்.