Google Calendarரில் ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்துதல்

Google Calendarரில் ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்தினால் உங்களால் இவற்றைச் செய்ய முடியும்:

  • நிகழ்வுகளை உருவாக்கி அவற்றைக் கண்காணித்தல்
  • பிறருக்கு அழைப்புகளை அனுப்புதல்
  • அழைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது நிராகரித்தல்

கீழே உள்ள விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:

தொடங்கும் முன் செய்யவேண்டியவை

Google Calendarரை வெப் ஆப்ஸாகப் பயன்படுத்துதல்

Google Calendarரை 'இணையப் பக்கமாக' இல்லாமல் 'வெப் ஆப்ஸாகப்' பயன்படுத்தும் வகையில் ஸ்கிரீன் ரீடரை அமைக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

Google Calendarரை வெப் ஆப்ஸாகப் பயன்படுத்தும்போது Google Calendar கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்தி மிக எளிதாக உலாவலாம். உதாரணமாக, நிகழ்வை உருவாக்க c பட்டனையும், கேலெண்டர் தேடலைத் தொடங்க '/' பட்டனையும், இன்றைய தேதிக்குச் செல்ல t பட்டனையும் அழுத்தலாம். மேலும் பல ஷார்ட்கட்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

பரிந்துரைக்கப்படும் உலாவியும் ஸ்கிரீன் ரீடர்களும்

Chrome மற்றும் இவற்றை Google Calendar பரிந்துரைக்கிறது:

  • Windowsஸில் NVDA அல்லது JAWS
  • ChromeOSஸில் ChromeVox
  • MacOSஸில் VoiceOver

தொடங்குதல்

Google Calendarரில் பயன்படுத்துவதற்கு ஸ்கிரீன் ரீடரை அமையுங்கள்

Google Calendarரை வெப் ஆப்ஸாகப் பயன்படுத்தும் வகையில் ஸ்கிரீன் ரீடரை அமைக்கவும்.

  • JAWS: விர்ச்சுவல் கர்சரை முடக்க JAWS + z அழுத்தவும்.
  • NVDA: ஃபோகஸ் பயன்முறைக்கு மாற NVDA + Space அழுத்தவும்.
  • ChromeVox: ஒற்றை விசைப் பயன்முறை முடக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும். ஒற்றை விசைப் பயன்முறையை முடக்க தேடல் பட்டனை இருமுறை அழுத்தவும்.
  • VoiceOver: QuickNav முடக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளவும். “QuickNav முடக்கப்பட்டது” என்று VoiceOver சொல்லும் வரை இடது மற்றும் வலது அம்புக்குறிகளை அழுத்தவும்.

Google Calendarரைத் திறத்தல்

  1. calendar.google.com தளத்திற்குச் செல்லவும்.
  2. கேட்கப்பட்டால் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது உள்நுழையவும்.
  3. கேலெண்டரைத் திறக்க, "முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்" பட்டனைப் பயன்படுத்தவும்.
  4. கீபோர்டு ஷார்ட்கட்களைப் பார்க்க "கீபோர்டு ஷார்ட்கட்கள்" பட்டனைப் பயன்படுத்தவும்.

Google Calendar இடைமுகம் குறித்து மேலும் அறிக

Google Calendarரில் 4 முக்கியப் பகுதிகள் உள்ளன:

  • பேனர் பகுதி: இந்தப் பகுதியில் இவற்றுக்கான பட்டன்களும் இணைப்புகளும் இருக்கும்:
    • முதன்மை டிராயரின் தெரிவுநிலையை மாற்றுதல்
    • நிகழ்வுகளைப் பார்ப்பதற்கான பகுதியைக் கட்டுப்படுத்துதல்
    • தேடல் வினவலை மேற்கொள்ளுதல்
      • '/' கீபோர்டு ஷார்ட்கட்டைப் பயன்படுத்தவும். பேனர் பகுதிக்குத் திரும்ப Escape பட்டனை அழுத்தவும்.
    • உதவி பெறுதல்
    • அமைப்புகள் மெனுவைத் திறத்தல்
    • காட்சியை மாற்றுவதற்கான மெனுவைத் திறத்தல்
    • பிற ஆப்ஸைத் திறத்தல்
    • செயலில் உள்ள கணக்கை மாற்றுதல்
  • நிகழ்வுகளுக்கான பகுதி: இதுதான் முக்கியப் பகுதி. நிகழ்வுகள் இங்குதான் திட்ட அட்டவணை, நாள், வாரம், மாதம், ஆண்டு போன்ற காட்சிகளாகக் காட்டப்படும். நிகழ்ச்சி விவரக் காட்சி எனப்படும் திட்ட அட்டவணைக் காட்சியை ஸ்கிரீன் ரீடர் மூலம் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம்.
    • a எனும் கீபோர்டு ஷார்ட்கட்டையோ உங்கள் விருப்பக் காட்சிக்கான ஷார்ட்கட்டையோ பயன்படுத்தவும்.
  • முதன்மை டிராயர் பகுதி: விரிவாக்கும்போது இந்தப் பகுதியில் இவற்றைச் செய்யலாம்:
    • நிகழ்வு, 'விடுப்பில் இருக்கிறேன்' நிலை, பணி மற்றும் பலவற்றை உருவாக்கலாம்
    • முக்கிய நிகழ்வுகளுக்கான பகுதிக்கு இடதுபுறத்தில் சிறிய கேலெண்டரைப் பார்க்கலாம்
    • மீட்டிங்கில் சேர்க்க விரும்புபவர்களைத் தேடலாம்
      • '+' கீபோர்டு ஷார்ட்கட்டைப் பயன்படுத்தவும்.
    • முக்கிய நிகழ்வுகளுக்கான பகுதியில் பிற கேலெண்டர்களைச் சேர்க்கலாம்
  • வலது பக்கப்பட்டி: விரிவாக்கும்போது இந்தப் பகுதியில் பக்கவாட்டுப் பேனலில் காட்டப்படும் Keep, Tasks, Contacts போன்ற பிற Google ஆப்ஸை விரைவாக அணுக முடியும்.
    • Windows: Ctrl + Alt + முற்றுப்புள்ளி அழுத்தவும்.
    • ChromeOS: Shift + Alt + முற்றுப்புள்ளி அழுத்தவும்.
    • MacOS: ⌘ + Option + முற்றுப்புள்ளி அழுத்தவும்.

Google Calendarரில் உள்ள ஷார்ட்கட்கள்

உங்கள் கேலெண்டரில் உலாவவும் பணிகளைச் செய்யவும் கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்தலாம்.

கீபோர்டு ஷார்ட்கட்களைப் பார்க்க 2 வழிகள் உள்ளன:

  • கீபோர்டு ஷார்ட்கட்களைப் பயன்படுத்தலாம்:
    • Windows அல்லது ChromeOSஸில் Ctrl + '/' அழுத்தவும்.
    • MacOSஸில் ⌘ + '/' அழுத்தவும்.
  • Tab பட்டனையும் மற்ற பட்டன்களையும் பயன்படுத்தலாம்: Tab அழுத்தி பக்கத்தின் மேற்புறத்தில் உள்ள “முக்கிய உள்ளடக்கத்திற்குச் செல்" பட்டனுக்கு அடுத்துள்ள “கீபோர்டு ஷார்ட்கட்கள்” பட்டனுக்குச் சென்று Enter அழுத்தவும்.

Google Calendarரில் உள்ள பொதுவான ஷார்ட்கட்கள்

செயல் ஷார்ட்கட்
புது நிகழ்வை உருவாக்க c
நிகழ்வைத் திருத்த e
நிகழ்வுக் காட்சியை 'இன்று' என்று மாற்ற t
நிகழ்வை நீக்க

Windows & ChromeOS: Delete அல்லது Backspace

MacOS: Delete
நாள் காட்சி 1 அல்லது d
வாரக் காட்சி 2 அல்லது w
மாதக் காட்சி 3 அல்லது m
பிரத்தியேகக் காட்சி 4 அல்லது x
திட்ட அட்டவணைக் காட்சி 5 அல்லது a
ஆண்டுக் காட்சி 6 அல்லது y
நிகழ்வைச் சேமிக்க

Windows & ChromeOS: Ctrl + s அல்லது Ctrl + Enter

MacOS: ⌘ + s அல்லது ⌘ + Enter

ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்தி Google Calendarரில் பொதுவான பணிகளை நிறைவுசெய்தல்

நிகழ்வுகள் பகுதியைப் பயன்படுத்துதல்

திட்ட அட்டவணைக் காட்சியில் கேலெண்டரைப் பயன்படுத்துதல்

திட்ட அட்டவணைக் காட்சியைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறோம். திட்ட அட்டவணைக் காட்சியில்:

செயல் ஷார்ட்கட்
நாட்களுக்கு இடையே மாற

இடது அல்லது வலது அம்புக்குறி பட்டன்கள்

நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் காட்சியின் அளவு ஒவ்வொரு நாளும் வேறுபடும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான நிகழ்வுகள் காட்சியில் இருக்கக்கூடும்.

நாளின் நிகழ்வுகளுக்கு இடையே மாற

மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டன்கள்

நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் காட்சியின் அளவு ஒவ்வொரு நாளும் வேறுபடும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான நிகழ்வுகள் காட்சியில் இருக்கக்கூடும்.

காட்சியை அடுத்த நாளுக்கு மாற்ற n
காட்சியை முந்தைய நாளுக்கு மாற்றுதல் p

நாள் காட்சியில் கேலெண்டரைப் பயன்படுத்துதல்

கவனத்திற்கு: குறிப்பிட்ட நாளுக்கான மற்ற காட்சிகளில் Enter பட்டனை அழுத்தும்போது நாள் காட்சிக்கு மாறுவீர்கள்.

செயல் ஷார்ட்கட்
நாளுக்கான காட்சியில் நிகழ்வுகள் 2 பிரிவுகளின் கீழ் காட்டப்படும்: முழு நாள் நிகழ்வுகள் மற்றும் வழக்கமான நிகழ்வுகள்.

முழு நாள் நிகழ்வுகள், வழக்கமான நிகழ்வுகள் ஆகியவற்றுக்கிடையே மாற, மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.

குறிப்பிட்ட நாளில் நிகழ்வு எதுவும் இல்லை எனில் இந்த ஷார்ட்கட் வேலை செய்யாது.

முழு நாள் நிகழ்வுகளுக்கான அல்லது வழக்கமான நிகழ்வுகளுக்கான பகுதியில் உள்ள நிகழ்வுகளுக்கு இடையே மாற

Tab பட்டன்

குறிப்பிட்ட நாளில் நிகழ்வு எதுவும் இல்லை எனில் இந்த ஷார்ட்கட் வேலை செய்யாது.

மறு நாள் n
முந்தைய நாள் p

வாரக் காட்சியில் கேலெண்டரைப் பயன்படுத்துதல்

செயல் ஷார்ட்கட்
வாரக் காட்சியில் நிகழ்வுகள் 2 பிரிவுகளின்கீழ் காட்டப்படும்: முழு நாள் நிகழ்வுகள் மற்றும் வழக்கமான நிகழ்வுகள். முழு நாள் நிகழ்வுகள், வழக்கமான நிகழ்வுகள் ஆகியவற்றுக்கிடையே மாற, மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.
வாரத்தில் உள்ள நாட்களுக்கு இடையே மாற இடது அல்லது வலது அம்புக்குறி பட்டன்கள்
முழு நாள் நிகழ்வுகளுக்கான அல்லது வழக்கமான நிகழ்வுகளுக்கான பகுதியில் உள்ள நிகழ்வுகளுக்கு இடையே மாற Tab பட்டன்
காட்சியை அடுத்த வாரத்திற்கு மாற்ற

n

புதிய வாரத்தின் தொடக்கத்திற்கு ஃபோகஸை மாற்ற w பட்டனை அழுத்தவும்.

காட்சியை முந்தைய வாரத்திற்கு மாற்ற

p

புதிய வாரத்தின் தொடக்கத்திற்கு ஃபோகஸை மாற்ற w பட்டனை அழுத்தவும்.

மாதக் காட்சியில் கேலெண்டரைப் பயன்படுத்துதல்

செயல் ஷார்ட்கட்
வாரங்களுக்கு இடையே மாற மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டன்கள்
நாட்களுக்கு இடையே மாற இடது அல்லது வலது அம்புக்குறி பட்டன்கள்
மாதத்தின் நிகழ்வுகளுக்கு இடையே மாற

Tab பட்டன்

சில நிகழ்வுகள் திரையில் காட்டப்படாமல் போகலாம். எல்லா நிகழ்வுகளையும் பார்க்க 'மேலும்' என்ற பட்டனுக்குச் சென்று Enter அல்லது Space பட்டனை அழுத்தவும்.

காட்சியை அடுத்த மாதத்திற்கு மாற்ற

n

புதிய மாதத்தின் தொடக்கத்திற்கு ஃபோகஸை மாற்ற m பட்டனை அழுத்தவும்.

காட்சியை முந்தைய மாதத்திற்கு மாற்ற

p

புதிய மாதத்தின் தொடக்கத்திற்கு ஃபோகஸை மாற்ற m பட்டனை அழுத்தவும்.

ஆண்டுக் காட்சியில் கேலெண்டரைப் பயன்படுத்துதல்

செயல் ஷார்ட்கட்
முந்தைய அல்லது அடுத்த வாரங்களில் அதே நாளுக்கு இடையே மாற மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டன்கள்
நாட்களுக்கு இடையே மாற இடது அல்லது வலது அம்புக்குறி பட்டன்கள்
நாளின் நிகழ்வுகள் பட்டியலைத் திறக்க (Tab பட்டனை அழுத்தி நிகழ்வுகளைத் தேர்ந்தெடுக்குக்கூடிய பட்டியல்) Enter பட்டன்
மாதக் காட்சிக்குச் செல்ல Space பட்டன்
காட்சியை அடுத்த ஆண்டிற்கு மாற்ற

n

புதிய ஆண்டின் தொடக்கத்திற்கு ஃபோகஸை மாற்ற y பட்டனை அழுத்தவும்.

காட்சியை முந்தைய ஆண்டிற்கு நகர்த்த

p

புதிய ஆண்டின் தொடக்கத்திற்கு ஃபோகஸை மாற்ற y பட்டனை அழுத்தவும்.

குறிப்பிட்ட தேதிக்குச் செல்ல

குறிப்பிட்ட தேதிக்கான காட்சியை மாற்ற, “தேதிக்குச் செல்” என்பதற்கான ஷார்ட்கட்டைப் பயன்படுத்தவும்:

  1. “தேதிக்குச் செல்” உரையாடலைத் திறக்க g பட்டனை அழுத்தவும்.
  2. விரும்பும் தேதியை டைப் செய்யவும். உதாரணமாக, 05/06/2021.
  3. Enter பட்டனை அழுத்தவும்.

உதவிக்குறிப்புகள்:

  • நீங்கள் இன்றைய தேதியைப் பயன்படுத்தும்போது “தேதிக்குச் செல்” என்பதற்கான ஷார்ட்கட் g, “இன்றைக்குச் செல்” என்பதற்கான ஷார்ட்கட் t போன்றே செயல்படும்.
  • வாரம், மாதம் மற்றும் ஆண்டுக் காட்சிகளில், புதிய தேதியை உள்ளடக்கிய கால அளவின் தொடக்கம் தெரியும்படி ஸ்க்ரோல் செய்யப்படும். ஆனால் ஃபோகஸ் மாறாது. சரியான புதிய தேதிக்கு ஃபோகஸை மாற்ற, அட்டவணைக் காட்சிக்கு a பட்டனையோ நாள் காட்சிக்கு d பட்டனையோ அழுத்தவும்.

சிறிய கேலெண்டர் காட்சியைப் பயன்படுத்துதல்

முதன்மை டிராயர் பகுதியில் ஒரு சிறிய கேலெண்டர் உள்ளது. தற்போதைய காட்சியில் தேதிகளை மாற்றுவதற்கும் மாதத்தின் அனைத்து நாட்களையும் பார்ப்பதற்கும் சிறிய கேலெண்டரைப் பயன்படுத்தலாம்.

சிறிய கேலெண்டரைக் கண்டறிதல்
  • முதன்மை டிராயர் பகுதியில் “நபர்களைத் தேடுக” என்பதற்கு '+' பட்டனை அழுத்தவும்.
  • மாதாந்திர அட்டவணையின் மீது ஃபோகஸை வைக்க Shift + Tab அழுத்தவும்.

கவனத்திற்கு: முதன்மை டிராயர் பகுதி சுருக்கப்பட்டிருந்தால் சிறிய கேலெண்டர் காட்டப்படாமல் இருக்கலாம். "முதன்மை டிராயர்" பட்டனை விரிவாக்க, பேனர் பகுதியின் தொடக்கத்திற்குச் சென்று Enter பட்டனை அழுத்தவும்.

சிறிய கேலெண்டரைப் பயன்படுத்துதல்
  • விரும்பும் தேதியைக் கண்டறிய அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும். விரும்பும் தேதியைக் கண்டறிந்ததும் Enter பட்டனை அழுத்தவும். நீங்கள் தேர்வுசெய்யும் தேதியில் இருந்து தொடங்கும் வகையில் முதன்மைக் கேலெண்டர் காட்சி மாற்றப்படும்.
  • மீண்டும் முதன்மைக் கேலெண்டர் பகுதிக்குச் செல்ல, a பட்டனை அழுத்தி புதிய தேதி ஃபோகஸ் செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி விவரக் காட்சிக்குத் திரும்பவும்.

நிகழ்வுகளை உருவாக்குதல் & நிர்வகித்தல்

நிகழ்வை உருவாக்குதல்

  1. நிகழ்வை உருவாக்க 3 வழிகள் உள்ளன:
    • c பட்டனை அழுத்தவும். வழக்கமான நிகழ்வை உருவாக்குவதற்கான பக்கம் திறக்கப்படும்.
    • Shift + c அழுத்தவும். ஓர் உரையாடல் திறக்கப்படும். நீங்கள் உருவாக்க விரும்பும் நிகழ்வின் வகையைத் தேர்வுசெய்யவும். வழக்கமான நிகழ்வு, விடுப்பில் இருக்கும் நிகழ்வு, பணி, நினைவூட்டல் போன்றவற்றை நீங்கள் உருவாக்கலாம்.
    • முதன்மை டிராயர் பகுதியில் “உருவாக்கு” மெனு பட்டனைப் பயன்படுத்தவும். “நிகழ்வு”, “முழுக் கவன நேரம்”, “விடுப்பில் இருக்கிறேன்”, “பணி”, “அப்பாயிண்ட்மெண்ட் நேர அட்டவணை” போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
  2. நிகழ்விற்கான தலைப்பை டைப் செய்யும் இடத்தில் ஃபோகஸ் இருக்கும்.
  3. “தேதி மற்றும் நேரத்திற்கான புலங்கள்” வரும் வரை Tab பட்டனை அழுத்தி, தேதியையும் நேரத்தையும் வழங்கவும்.
  4. விருப்பத்திற்குட்பட்டது: நிகழ்வுக்கு விருந்தினர்களை அழைக்க, திருத்த வேண்டிய “விருந்தினர்கள்” புலம் வரும் வரை Tab பட்டனை அழுத்தி, விருந்தினரின் மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும்.
    • பெயரையோ மின்னஞ்சல் முகவரியையோ டைப் செய்யும்போது ஒரு பரிந்துரை அறிவிக்கப்படும். பரிந்துரைக்கப்படுபவர்தான் நீங்கள் அழைக்க விரும்புபவர் எனில் Enter பட்டனை அழுத்தவும்.
    • திருத்த வேண்டிய புலத்திற்குக் கீழே மேலும் சில பரிந்துரைகள் காட்டப்படும். அந்தப் பெயர்களைக் கேட்க கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டனை அழுத்தவும். சேர்க்க விரும்புபவரின் பெயர் அறிவிக்கப்பட்டதும் Enter பட்டனை அழுத்தவும்.
    • யாரும் பரிந்துரைக்கப்படாவிட்டாலும் தொடர்ந்து பெயரை டைப் செய்யவும். அப்போது, பரிந்துரைப் பட்டியல் மாறும்.
  5. விருப்பத்திற்குட்பட்டது: இவை போன்ற, பிற புலங்களை நிரப்பவும்:
    • அறைகள் அல்லது மீட்டிங் தகவல்கள்
    • அறிவிப்புகள்
    • இணைப்புகள்
    • மீட்டிங் தொடர்பான விளக்கம்
  6. நிகழ்வைச் சேமிக்க பல வழிகள் உள்ளன:
    • ChromeOS அல்லது Windows: Ctrl + s அல்லது Ctrl + Enter அழுத்தவும்.
    • MacOS: ⌘ + s அல்லது ⌘ + Enter அழுத்தவும்.
    • எல்லா ஆப்ரேட்டிங் சிஸ்டங்களிலும், “சேமி” பட்டன் வரும் வரை Tab பட்டனை அழுத்தவும். அதன் பிறகு Enter பட்டனை அழுத்தவும்.
  7. நிகழ்வை நிராகரிக்க Escape பட்டனை அழுத்தவும்.

தொடர் நிகழ்வை உருவாக்குதல்

  1. நிகழ்வைக் கண்டறியவும் அல்லது புதிதாக ஒன்றை உருவாக்கவும்:
    • கேலெண்டர் காட்சியில் இருக்கும் ஒரு நிகழ்வுக்குச் செல்லவும். நிகழ்வு விவரங்களைத் திறக்க e பட்டனை அழுத்தவும்.
    • புதிய நிகழ்வை உருவாக்க c பட்டனை அழுத்தவும்.
  2. “ஒருமுறை மட்டும்” என்ற கீழ் தோன்றுதல் மெனு வரும் வரை Tab பட்டனை அழுத்தி, அதன் பிறகு Enter அல்லது Space பட்டனை அழுத்தவும். கீழ் தோன்றுதல் மெனு திறக்கப்படும்.
  3. ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:
    • நிகழ்வுக்கான முன்னமைக்கப்பட்ட கால இடைவெளியைத் தேர்ந்தெடுக்க, அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தி அதற்கான விருப்பங்களின் பட்டியலுக்குச் செல்லவும். தொடர் நிகழ்வுக்கு நீங்கள் அமைக்க விரும்பும் கால இடைவெளி அறிவிக்கப்படும்போது Enter அல்லது Space பட்டனை அழுத்தவும்.
    • நிகழ்வுக்கான பிரத்தியேகக் கால இடைவெளியை அமைக்க:
      1. பிரத்தியேக பட்டனுக்கு அம்புக்குறியை நகர்த்தி, அதன் பிறகு Enter அல்லது Space பட்டனை அழுத்தவும். நிகழ்வு மீண்டும் எத்தனை முறை நடக்க வேண்டும் என்பதை டைப் செய்யவும்.
      2. “பின்வரும் கால அளவுக்கு ஒருமுறை நிகழ்வு நடக்கும்” பட்டனுக்குச் செல்ல Tab பட்டனை அழுத்தவும். வாரத்தின் நாட்களுக்கு இடையே மாற Tab பட்டனை அழுத்தவும். நாளினைத் தேர்வுசெய்ய Space பட்டனை அழுத்தவும்.
      3. விருப்பத்திற்குட்பட்டது: தொடக்கத் தேதியையும் முடிவுத் தேதியையும் நீங்கள் தேர்வுசெய்யலாம். பட்டியலில் உள்ளவற்றைப் பார்த்து அவற்றிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க Tab பட்டனை அழுத்தவும்.
      4. தொடர் நிகழ்வுக்கான அமைவைச் சேமிக்க, Tab பட்டனை அழுத்தி “முடிந்தது” பட்டனுக்குச் சென்று, அதன் பிறகு Enter அல்லது Space பட்டனை அழுத்தவும்.

நிகழ்வைச் சரிபார்த்தல்

  1. கேலெண்டர் காட்சியில் இருக்கும் ஒரு நிகழ்வுக்குச் செல்லவும்.
  2. Enter பட்டனை அழுத்தவும்.
  3. ஃபோகஸில் மாற்றம் இல்லாமல் நிகழ்வுப் புலங்களைப் பார்க்க:
    • Windows: Alt + {எண்} அழுத்தவும்
    • ChromeOS: Alt + Shift + {எண்} அழுத்தவும்
    • MacOS: Option + {எண்} அழுத்தவும்
    • நிகழ்வுப் புலத்தை {எண்} தேர்ந்தெடுக்கிறது:
      • 1 தலைப்பு
      • 2 தேதி மற்றும் நேரம்
      • 3 விருந்தினர்கள்
      • 4 அறைகள் மற்றும் இருப்பிடம்
      • 5 விளக்கம்
      • 6 இணைப்புகள்
      • 7 அறிவிப்புகள்
  4. நீங்கள் மாற்றக்கூடிய புலங்களை அணுக Tab பட்டனை அழுத்தவும்.
    • உதவிக்குறிப்பு: Tab பட்டனைப் பயன்படுத்தி அனைத்துத் தகவல்களையும் அணுக முடியாது. சில தகவல்களைத் தெரிந்துகொள்ள ஸ்கிரீன் ரீடர் கட்டளைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். ஸ்கிரீன் ரீடர் மூலம் ஸ்கிரீன் ரீடர் கட்டளைகளைப் பயன்படுத்த:
      • JAWS: விர்ச்சுவல் கர்சரை இயக்கவும்.
      • NVDA: உலாவிப் பயன்முறையை இயக்கவும்.
      • ChromeVox: ஒற்றை விசைப் பயன்முறையை இயக்கவும்.
      • VoiceOver: QuickNavவை இயக்கவும்.
  5. நிகழ்வைச் சரிபார்த்ததும் Escape பட்டனை அழுத்தவும்.

பங்கேற்பாளர்களை நிகழ்வில் சேர்த்தலும் அகற்றுதலும்

  1. நிகழ்வைக் கண்டறியவும் அல்லது புதிதாக ஒன்றை உருவாக்கவும்:
    • கேலெண்டர் காட்சியில் இருக்கும் ஒரு நிகழ்வுக்குச் செல்லவும். நிகழ்வு விவரங்களைத் திருத்த e பட்டனை அழுத்தவும்.
    • புதிய நிகழ்வை உருவாக்க c பட்டனை அழுத்தவும்.
  2. நிகழ்வுக்கு விருந்தினர்களை அழைக்க, திருத்த வேண்டிய “விருந்தினர்கள்” புலம் வரும் வரை Tab பட்டனை அழுத்தி, விருந்தினரின் மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும்.
    • பெயரையோ மின்னஞ்சல் முகவரியையோ டைப் செய்யும்போது ஒரு பரிந்துரை அறிவிக்கப்படும். பரிந்துரைக்கப்படுபவர்தான் நீங்கள் அழைக்க விரும்புபவர் எனில் Enter பட்டனை அழுத்தவும்.
    • திருத்த வேண்டிய புலத்திற்குக் கீழே மேலும் சில பரிந்துரைகள் காட்டப்படும். அந்தப் பெயர்களைக் கேட்க கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டனை அழுத்தவும். சேர்க்க விரும்புபவரின் பெயர் அறிவிக்கப்பட்டதும் Enter பட்டனை அழுத்தவும்.
    • யாரும் பரிந்துரைக்கப்படாவிட்டாலும் தொடர்ந்து பெயரை டைப் செய்யவும். அப்போது, பரிந்துரைப் பட்டியல் மாறும்.
  3. விருப்பத்திற்குட்பட்டது: விருந்தினரின் வருகை, அவரது விருப்பத்திற்குட்பட்டது எனக் குறிக்கலாம்.
    1. விருந்தினர் ஒருவரின் வருகையை அவரது விருப்பத்திற்குட்பட்டது எனக் குறிக்க, அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பட்டியல் வரும் வரை Tab பட்டனை அழுத்தவும்.
    2. விருப்பத்திற்குட்பட்டு கலந்துகொள்ளலாம் என்று நீங்கள் குறிக்க விரும்பும் விருந்தினரின் பெயர் வரும் வரை அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.
    3. “விருப்பத்திற்குட்பட்டதாகக் குறி” பட்டனுக்குச் செல்ல, Tab பட்டனை அழுத்தி Enter அல்லது Space பட்டனை அழுத்தவும்.
  4. விருப்பத்திற்குட்பட்டது: விருந்தினரை உங்களால் அகற்ற முடியும்.
    1. விருந்தினரை அகற்ற, அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பட்டியலுக்குச் செல்லும் வரை Tab பட்டனை அழுத்தவும்.
    2. நீங்கள் அகற்ற விரும்பும் விருந்தினரின் பெயர் வரும் வரை அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.
    3. “அகற்று” பட்டன் வரும் வரை Tab பட்டனை அழுத்தி, அதன் பிறகு Enter பட்டனை அழுத்தவும்.
  5. நிகழ்வைச் சேமிக்கவும்.

நிகழ்வுக்கான அறைகளைச் சேர்த்தலும் அகற்றுதலும்

உங்கள் Google கணக்கு, பணி அல்லது பள்ளிக் கணக்காக இருந்தால் நீங்கள் அறைகளைச் சேர்க்கலாம் அகற்றலாம்.

  1. நிகழ்வைக் கண்டறியவும் அல்லது புதிதாக ஒன்றை உருவாக்கவும்:
    • கேலெண்டர் காட்சியில் இருக்கும் ஒரு நிகழ்வுக்குச் செல்லவும். நிகழ்வு விவரங்களைத் திருத்த e பட்டனை அழுத்தவும்.
    • புதிய நிகழ்வை உருவாக்க c பட்டனை அழுத்தவும்.
  2. “விருந்தினர்கள்” அட்டவணை வரும் வரை Tab பட்டனை அழுத்தவும். அறைகளுக்கான புலத்திற்குச் செல்ல வலது அம்புக்குறி பட்டனைப் பயன்படுத்தவும்.
  3. “அறைகளின் பட்டியல்” வரும் வரை Tab பட்டனை அழுத்தவும்.
  4. அறைகளின் பட்டியலைப் பார்க்க கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டனை அழுத்தவும்.
  5. அறையைத் தேர்வுசெய்ய அல்லது தேர்வுநீக்க Enter பட்டனை அழுத்தவும்.
  6. நிகழ்வைச் சேமிக்கவும்.

பரிந்துரைக்கப்படும் நேரங்களைப் பயன்படுத்துதல்

நீங்கள் விருந்தினர்களைச் சேர்த்த பிறகு அனைவருக்கும் ஏற்ற நேரங்களை Google Calendar பரிந்துரைக்கும். நேரங்களைச் சரிபார்த்துத் தேர்வுசெய்ய:

  1. நிகழ்வைக் கண்டறியவும் அல்லது புதிதாக ஒன்றை உருவாக்கவும்:
    • கேலெண்டர் காட்சியில் இருக்கும் ஒரு நிகழ்வுக்குச் செல்லவும். நிகழ்வு விவரங்களைத் திருத்த e பட்டனை அழுத்தவும்.
    • புதிய நிகழ்வை உருவாக்க c பட்டனை அழுத்தவும்.
  2. திருத்த வேண்டிய “விருந்தினர்கள்” புலம் வரும் வரை Tab பட்டனை அழுத்தி, அதன் பிறகு Enter பட்டனை அழுத்தவும். நிகழ்வில் விருந்தினர்களைச் சேர்க்கவும்.
  3. “பரிந்துரைக்கப்படும் நேரங்கள்” மெனுவிற்குச் செல்ல Tab பட்டனை அழுத்தவும்.
  4. மெனுவைத் திறக்க, Enter அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டனை அழுத்தவும்.
  5. நேரம் தொடர்பான விருப்பங்களைப் பார்க்க அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.
  6. தேர்வுசெய்ய விரும்பும் நேரத்தைக் கண்டறிந்ததும் Enter பட்டனை அழுத்தவும். மீட்டிங்கில் உள்ள தேதியும் நேரங்களும் பரிந்துரைக்கப்பட்டவாறு மாறும்.
  7. நிகழ்வைச் சேமிக்கவும்.

“நேரத்தைக் கண்டறி” அம்சத்தைப் பயன்படுத்துதல்

  1. நிகழ்வைக் கண்டறியவும் அல்லது புதிதாக ஒன்றை உருவாக்கவும்:
    • கேலெண்டர் காட்சியில் இருக்கும் ஒரு நிகழ்வுக்குச் செல்லவும். நிகழ்வு விவரங்களைத் திறக்க e பட்டனை அழுத்தவும்.
    • புதிய நிகழ்வை உருவாக்க c பட்டனை அழுத்தவும்.
  2. திருத்த வேண்டிய “விருந்தினர்கள்” புலம் வரும் வரை Tab பட்டனை அழுத்தி, அதன் பிறகு Enter பட்டனை அழுத்தவும். விருந்தினரை நிகழ்வில் சேர்க்கவும்.
  3. “நிகழ்வு விவரங்கள்” அட்டவணைக்குச் செல்ல Tab பட்டனை அழுத்தவும். “நேரத்தைக் கண்டறி” பகுதிக்குச் செல்ல வலது அம்புக்குறி பட்டனை அழுத்தவும்.
  4. கேலெண்டர் பேனலைப் பார்க்க Tab பட்டனை அழுத்தவும்.
  5. நேரம் தொடர்பான விருப்பங்களைப் பார்க்க அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.
  6. தேர்வுசெய்ய விரும்பும் நேரத்தைக் கண்டறிந்ததும் Enter பட்டனை அழுத்தவும். மீட்டிங்கில் உள்ள தேதியும் நேரங்களும் பரிந்துரைக்கப்பட்டவாறு மாறும்.
  7. நிகழ்வைச் சேமிக்கவும்.

பிறரது கேலெண்டரை அணுகுதல்

பிறரின் கேலெண்டரைத் தற்காலிகமாக உங்கள் கேலெண்டர் காட்சியுடன் சேர்க்க முடியும்.

  1. '+' பட்டனை அழுத்தவும்.
  2. அவரது மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும்.
  3. Enter பட்டனை அழுத்தவும்.
  4. அவரது கேலெண்டர் உங்கள் கேலெண்டர் காட்சியில் சேர்க்கப்படும்.

உதவிக்குறிப்புகள்:

  • அவரது கேலெண்டரை முதன்மைக் கேலெண்டர் பகுதியில் இருந்து அகற்ற பக்கத்தைப் புதுப்பிக்கவும்.
  • நீங்கள் ஒரு நிகழ்வை உருவாக்கினால் பிறரின் கேலெண்டரை உங்கள் முதன்மைக் கேலெண்டர் பகுதியில் இருந்து Google Calendar தானாகவே அகற்றும்.

நிகழ்வை நீக்குதல்

முக்கியம்: ஒரு நிகழ்வை நீங்கள் நீக்கினால் அனைத்துப் பங்கேற்பாளர்களுக்குமே அந்த நிகழ்வு ரத்துசெய்யப்படும். நிகழ்வை உங்கள் கேலெண்டரில் இருந்து மட்டும் அகற்றினால் மற்ற பங்கேற்பாளர்களுக்கு அது ரத்துசெய்யப்படாது. நிகழ்வை நீக்க:

  1. நிகழ்வுக்குச் செல்லவும்.
  2. நிகழ்வை நீக்க பல வழிகள் உள்ளன.
    • Backspace பட்டனை அழுத்தவும்.
    • Delete பட்டனை அழுத்தவும்.
    • நிகழ்வு உரையாடலைத் திறக்க Enter பட்டனை அழுத்தவும். அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தி “நீக்கு” பட்டனுக்குச் சென்று, அதன் பிறகு Enter பட்டனை அழுத்தவும்.
    • நிகழ்வைத் திருத்துவதற்கான பக்கத்தில் இருந்து அகற்றவும்:
      1. நிகழ்வைத் திருத்த e பட்டனை அழுத்தவும்.
      2. “மேலும் செயல்கள்” பட்டன் வரும் வரை Tab பட்டனை அழுத்தி, அதன் பிறகு Enter பட்டனை அழுத்தவும்.
      3. கீழ்நோக்கிய அம்புக்குறியைப் பயன்படுத்தி “நீக்கு” பட்டனுக்குச் சென்று Enter பட்டனை அழுத்தவும்.
  3. விருப்பத்திற்குட்பட்டது: நிகழ்வு தொடர்ந்து நடக்கக்கூடியதாக இருந்தால் ஒன்று அல்லது அனைத்துத் தொடர் நிகழ்வுகளையும் அகற்றுதல் என்பதில் வழங்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்.

ஒன்று அல்லது அனைத்துத் தொடர் நிகழ்வுகளையும் அகற்றுதல்

நிகழ்வானது ஒரு தொடர் நிகழ்வின் பகுதியாக இருந்தால் ஒன்றை மட்டும் அகற்ற வேண்டுமா இல்லை அனைத்தையுமே அகற்ற வேண்டுமா என்று ஒரு உரையாடல் பெட்டியில் கேட்கப்படும். தொடர் நிகழ்வுகளில் ஒன்றை மட்டும் அகற்ற வேண்டுமா இல்லை அனைத்தையுமே அகற்ற வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்ய:

  1. மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தி இவற்றில் எதை நீக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்:
    • இந்த நிகழ்வு
    • இதுவும் பின்வரும் நிகழ்வுகளும்
    • எல்லா நிகழ்வுகளும்
  2. விருப்பத்திற்குட்பட்டது: பிற விருந்தினர்களும் மீட்டிங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தால், ரத்துசெய்யப்பட்டதைத் தெரிவிக்கும் ஒரு மெசேஜை நீங்கள் டைப் செய்யலாம். மெசேஜை டைப் செய்ததும் Tab பட்டனை அழுத்தவும்.
  3. “சரி” பட்டன் வரும் வரை Tab பட்டனை அழுத்தி, அதன் பிறகு Enter பட்டனை அழுத்தவும்.

நிகழ்வை மீட்டெடுத்தல்

தவறுதலாக ஒரு நிகழ்வை அகற்றிவிட்டால் அதை உங்களால் 30 நாட்களுக்குப் பார்க்கவும் மீட்டெடுக்கவும் முடியும். நிகழ்வை மீட்டெடுக்க:

  1. '/' கீபோர்டு ஷார்ட்கட் மூலம் பேனர் பகுதிக்குச் செல்லவும்.
  2. Escape பட்டனை அழுத்தவும்.
  3. "அமைப்புகள்" மெனு பட்டன் வரும் வரை Tab பட்டனை அழுத்தவும்.
  4. அமைப்புகள் மெனுவைத் திறக்க, Enter அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டனை அழுத்தவும்.
  5. "நீக்கியவை" பட்டன் வரும் வரை கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டனைப் பயன்படுத்தவும்.
  6. Enter பட்டனை அழுத்தவும்.
  7. நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் {நிகழ்வுப் பெயர்} உடன் பொருந்தக்கூடிய “மீட்டெடு {நிகழ்வுப் பெயர்}” என லேபிளிடப்பட்ட பட்டன் வரும் வரை Tab பட்டனை அழுத்தவும்.
  8. Space அல்லது Enter பட்டனை அழுத்தவும்.
  9. உங்கள் கேலெண்டருக்குத் திரும்பிச் செல்ல, உலாவியில் முந்தைய பக்கத்திற்குச் செல்வதற்கான ஷார்ட்கட்டை அழுத்தவும்.

நிகழ்வைத் தேடுதல்

எளிய தேடலைப் பயன்படுத்துதல்

  1. '/' பட்டனை அழுத்தவும்.
  2. தேடல் வார்த்தையை டைப் செய்யவும்.
    • தொடர்பின் பெயரை டைப்செய்யும்போது, பொருந்தும் தொடர்பைக் கண்டறிய கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  3. Enter பட்டனை அழுத்தவும்.
    • ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளையும் நபர்களையும் தேடும்போது அனைத்துத் தேடல் வார்த்தைகளுக்கும் பொருந்தும் நிகழ்வுகள் காட்டப்படும்.

நிகழ்வுகள் எவையேனும் உங்கள் தேடலுடன் பொருந்தினால், இன்றைய தேதிக்கு மிக நெருக்கமான நிகழ்வு ஃபோகஸ் செய்யப்பட்டு திட்ட அட்டவணைக் காட்சியில் காட்டப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தால் வழக்கம்போலவே திட்ட அட்டவணைக் காட்சியில் உலாவலாம்:

  • உங்கள் தேடலுடன் பொருந்தக்கூடிய கடந்த காலத் தேதிகளுக்குச் செல்ல இடது அம்புக்குறியைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் தேடலுடன் பொருந்தக்கூடிய எதிர்காலத் தேதிகளுக்குச் செல்ல வலது அம்புக்குறியைப் பயன்படுத்தவும்.
  • கடந்த காலத்தில் பொருந்தக்கூடிய நிகழ்வுகளுக்குச் செல்ல மேல்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  • எதிர்காலத்தில் பொருந்தக்கூடிய நிகழ்வுகளுக்குச் செல்ல கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
  • நிகழ்வைச் சரிபார்க்க, நிகழ்வில் வைத்து Enter பட்டனை அழுத்தவும். முடிவுகளுக்குச் செல்ல Escape பட்டனை அழுத்தவும்.
  • முந்தைய கேலெண்டர் காட்சிக்குச் செல்ல Escape பட்டனை அழுத்தவும்.

மேம்பட்ட தேடைலைப் பயன்படுத்துதல்

  1. '/' பட்டனை அழுத்தவும்.
  2. “தேடல் விருப்பங்கள்” பட்டனுக்குச் செல்ல Tab பட்டனை அழுத்தவும்.
  3. தேடல் விருப்பங்கள் மூலம் ஒரு படிவத்தைத் திறக்க Enter பட்டனை அழுத்தவும்.
  4. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க, உங்களுக்கு வேண்டிய விருப்பம் வரும் வரை Tab பட்டனை அழுத்தவும்:
    • எந்தக் கேலெண்டர்களில் தேட வேண்டும்?
      • “செயலில் உள்ள அனைத்தும்” என்பது இயல்பாக அமைக்கப்பட்டிருக்கும். பிற விருப்பங்களுக்கு கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும்.
    • நிகழ்வில் என்னென்ன தேடல் குறிப்புகள் இருக்க வேண்டும்?
    • பங்கேற்பாளர் யார்?
    • நிகழ்வு எங்கு நடைபெறுகிறது?
    • நிகழ்வில் என்னென்ன தேடல் குறிப்புகள் இருக்கக் கூடாது?
    • தேதிகளின் வரம்பு எப்போது குறிப்பிடப்பட்டுள்ளது?
  5. தேடலை மேற்கொள்ள Enter பட்டனை அழுத்தவும்.
  6. முடிவுகளைப் பயன்படுத்த, மேலே எளிய தேடலைப் பயன்படுத்து என்பதில் விவரிக்கப்பட்டுள்ளபடி அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.

நிகழ்வு அழைப்புகளுக்குப் பதிலளித்தல்

நிகழ்வுகள் காட்சியில் இருந்து

  1. ஏதேனும் ஒரு நிகழ்வுக்குச் செல்லவும்.
  2. சூழல் மெனுவைத் திறக்கவும்.
    • ChromeOS: Shift + F10 அல்லது ChromeVox செயலில் இருந்தால் Search + m அழுத்தவும்.
    • Windows: Shift + F10 அல்லது Application பட்டனை அழுத்தவும்.
    • VoiceOver வசதி உள்ள MacOS: VO + Shift + m அழுத்தவும்.
  3. பதிலளிப்பதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்ய, கீழே இருக்கும் ஷார்ட்கட் பட்டனையோ பதிலளிக்க விரும்பும் நிகழ்வு வரும் வரை அம்புக்குறி பட்டனையோ அழுத்தி பிறகு Enter பட்டனை அழுத்தவும்.
பதில் ஷார்ட்கட்
ஆம் y
ஆம், மீட்டிங் அறையில் உள்ளேன் r
ஆம், விர்ச்சுவலாகச் சேர்கிறேன் v
இல்லை n
கலந்துகொள்ளக்கூடும் m

நிகழ்வு உரையாடலில் இருந்து

  1. ஏற்கெனவே இருக்கும் நிகழ்வுக்குச் செல்ல, அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும் அல்லது Tab பட்டனை அழுத்தவும். நிகழ்வு வந்ததும் Enter பட்டனை அழுத்தவும்.
  2. “கலந்துகொள்கிறீர்களா?” என்பதற்குச் செல்லவும்
  3. “ஆம், இல்லை அல்லது கலந்துகொள்ளக்கூடும்” பட்டன்களுக்குச் செல்ல Tab பட்டனை அழுத்தவும். பதிலளிப்பதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க Enter பட்டனை அழுத்தவும்.
  4. விருப்பதிற்குட்பட்டது: நிகழ்வு தொடர்வதாக இருந்தால் உங்கள் பதிலைத் தேர்வுசெய்து Enter பட்டனை அழுத்தவும்:
    • இந்த நிகழ்வு
    • இதுவும் பின்வரும் நிகழ்வுகளும்
    • எல்லா நிகழ்வுகளும்

நிகழ்வுப் பக்கத்தில் இருந்து

  1. ஏற்கெனவே இருக்கும் நிகழ்வுக்குச் செல்ல, அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும் அல்லது Tab பட்டனை அழுத்தவும்.
  2. நிகழ்வு வந்ததும் e பட்டனை அழுத்தவும்.
  3. “கலந்துகொள்கிறீர்களா?” மெனு வரும் வரை Tab பட்டனை அழுத்தவும். “ஆம், இல்லை அல்லது கலந்துகொள்ளக்கூடும்” பட்டன்களுக்குச் செல்ல, மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.
  4. பதிலளிப்பதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்ய Enter பட்டனை அழுத்தவும்.
  5. நிகழ்வைச் சேமிக்கவும்.

மின்னஞ்சலில் இருந்து

  1. உங்கள் மின்னஞ்சலில் உள்ள மின்னஞ்சல் அழைப்பைத் திறக்கவும்.
  2. "கலந்துகொள்கிறீர்களா?” என்பது வரும் வரை Tab பட்டனை அழுத்தவும். “ஆம், இல்லை அல்லது கலந்துகொள்ளக்கூடும்” பட்டன்களுக்குச் செல்ல, அம்புக்குறி பட்டன்களையோ Tab பட்டனையோ பயன்படுத்தவும்.
  3. பதிலளிப்பதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க Enter பட்டனை அழுத்தவும்.

கேலெண்டர் நிகழ்வு மூலம் வீடியோ மீட்டிங்கில் சேர்தல்

  1. ஏதேனும் ஒரு நிகழ்வுக்குச் செல்லவும்.
  2. மீட்டிங்கில் இணைய 2 வழிகள் உள்ளன:
    • விருப்பம் 1: சூழல் மெனுவைப் பயன்படுத்துதல்
      1. சூழல் மெனுவைத் திறக்க:
        • ChromeOS: Shift + F10 அல்லது ChromeVox செயலில் இருந்தால் Search + m அழுத்தவும்.
        • Windows: Shift + F10 அல்லது Application பட்டனை அழுத்தவும்.
        • VoiceOver வசதி உள்ள MacOS: VO + Shift + m அழுத்தவும்.
      2. j பட்டனை அழுத்தவும் அல்லது "மீட்டிங்கில் சேர்" பட்டன் வரும் வரை கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டனை அழுத்தி, அதன் பிறகு Enter பட்டனை அழுத்தவும்.
    • விருப்பம் 2: நிகழ்வு உரையாடலைப் பயன்படுத்துதல்
      1. நிகழ்வு உரையாடலைத் திறக்க Enter பட்டனை அழுத்தவும்.
      2. “இப்போது சேர்” பட்டன் வரும் வரை Tab பட்டனை அழுத்தி, அதன் பிறகு Enter பட்டனை அழுத்தவும்.

உங்களின் 'இருக்கும் நிலை' மற்றும் 'விடுப்பில் இருக்கிறேன்' நிலையை அமைத்தல்

நீங்கள் விடுப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டால் 'விடுப்பில் இருக்கிறேன்' நிலையில் இருக்கும்போது அனைத்து மீட்டிங்குகளையும் தானாகவே நிராகரிக்கக்கூடிய நிகழ்வுகளை உங்கள் கேலெண்டர் உருவாக்கும்.

  1. விடுப்பில் இருக்கும் நிகழ்வைப் புதிதாக உருவாக்க Shift + c பட்டனை அழுத்தவும்.
  2. “நிகழ்வு” அட்டவணை வரும் வரை Tab பட்டனை அழுத்தவும். “விடுப்பில் இருக்கிறேன்” பகுதிக்குச் செல்ல அம்புக்குறி பட்டன்களைப் பயன்படுத்தவும்.
  3. தேதி அளவுருக்கள் வரும் வரை Tab பட்டனை அழுத்தவும். நீங்கள் விடுப்பில் இருக்கும் நேரத்தையோ தேதிகளையோ அமைக்கவும்.
  4. நிகழ்வைச் சேமிக்கவும்.

கேலெண்டர் அமைப்புகளைத் திறத்தல்

அமைப்புகளுக்குச் செல்ல s பட்டனை அழுத்தவும்.

அமைப்புகளுக்கு இப்படியும் செல்லலாம்:

  1. '/' பட்டன் மூலம் பேனர் பகுதிக்குச் செல்லவும்.
  2. Escape பட்டனை அழுத்தவும்.
  3. அமைப்புகள் மெனுவிற்குச் செல்ல, Tab பட்டனை இரண்டு முறை அழுத்தவும்.
  4. அமைப்புகள் மெனுவைத் திறக்க Enter பட்டனை அழுத்தவும்.
  5. அமைப்புகளைத் திறக்க மீண்டும் Enter பட்டனை அழுத்தவும்.

கேலெண்டரைப் பகிர்தல்

  1. அமைப்புகளைத் திறக்க s பட்டனை அழுத்தவும்.
  2. “எனது கேலெண்டர்களுக்கான அமைப்புகள்” என்பது வரும் வரை Shift + Tab அழுத்தவும்.
  3. நீங்கள் பகிர விரும்பும் கேலெண்டரைக் கண்டறிய கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தவும், அதன் பிறகு Enter பட்டனை அழுத்தவும்.
  4. “பிறரைச் சேர்” பட்டன் வரும் வரை Tab பட்டனை அழுத்தி, அதன் பிறகு Enter அல்லது Space பட்டனை அழுத்தவும்.
  5. உங்கள் கேலெண்டரைப் பிறருடன் பகிர, அவரது மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும்.
  6. “அனுப்பு” பட்டன் வரும் வரை Tab பட்டனை அழுத்தி, அதன் பிறகு Enter அல்லது Space பட்டனை அழுத்தவும்.

வெவ்வேறு கேலெண்டர்களை நிர்வகித்தல்

கேலெண்டர்களைச் சேர்த்தல்

  1. அமைப்புகளைத் திறக்க s பட்டனை அழுத்தவும்.
  2. “பொது” என்பது வரும் வரை Shift + Tab அழுத்தவும்.
  3. சுருக்குவதற்கு இடது அம்புக்குறியை அழுத்தவும், “கேலெண்டரைச் சேர்க்க” கீழ்நோக்கிய அம்புக்குறியை அழுத்தி, அதன் பிறகு Enter பட்டனை அழுத்தவும்.
  4. ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு Enter பட்டனை அழுத்தவும்:
    • கேலெண்டரில் குழு சேருதல்: பிற கேலெண்டர்களில் நீங்கள் குழு சேர்ந்து அவற்றைப் பார்க்க முடியும்.
    • புதிய கேலெண்டரை உருவாக்குதல்: நீங்கள் புதிய கேலெண்டர்களை உருவாக்க முடியும்.
    • வசதிகள்: திட்ட அட்டவணையில் சேர்க்கக்கூடிய அறைகள், சாதனங்கள் போன்ற வசதிகளின் பட்டியல். ஒவ்வொரு வசதியையும் Tab பட்டன் மூலம் தேர்ந்தெடுக்கலாம்.
    • பிரபலமான கேலெண்டர்கள்: விளையாட்டுகள் தொடர்பான கேலெண்டர்கள், விடுமுறைக் கேலெண்டர்கள் போன்ற ஆர்வத்தின் அடிப்படையிலான கேலெண்டர்களின் பட்டியல்.
    • URLலில் இருந்து: ஓர் இணைப்பில் இருந்து புதிய கேலெண்டரை நீங்கள் சேர்க்கலாம்.

காட்சியில் கேலெண்டர்களைக் காட்டுதல் மற்றும் மறைத்தல்

  1. '+' பட்டன் மூலம் முதன்மை டிராயர் பகுதிக்குச் செல்லவும்.
    • முதன்மை டிராயர் பகுதி கிடைக்கவில்லை எனில் பேனர் பகுதியின் தொடக்கத்திற்குச் சென்று Enter பட்டனை அழுத்தினால் “முதன்மை டிராயர்” பட்டன் விரிவாக்கப்படும்.
  2. “எனது கேலெண்டர்கள்” பட்டன் வரும் வரை Tab பட்டனை அழுத்தவும்.
    • “எனது கேலெண்டர்கள்” பட்டன் சுருக்கப்பட்டிருந்தால் Enter பட்டனை அழுத்தவும்.
  3. முதல் கேலெண்டருக்குச் செல்ல Tab பட்டனை அழுத்தவும்.
  4. உங்களுக்குத் தேவையான கேலெண்டரைக் கண்டறிய கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டனைப் பயன்படுத்தவும்.
  5. கேலெண்டரைக் காட்டவோ மறைக்கவோ Space பட்டனை அழுத்தவும்.
  6. கூடுதல் விருப்பங்களுக்கு Tab பட்டனை அழுத்தவும்.

பிற கேலெண்டர்களைப் பார்த்தல்

பிற கேலெண்டர்களை உங்கள் கேலெண்டருடன் சேர்க்கலாம்.

  1. '+' பட்டன் மூலம் முதன்மை டிராயர் பகுதிக்குச் செல்லவும்.
    • முதன்மை டிராயர் பகுதி கிடைக்கவில்லை எனில் பேனர் பகுதியின் தொடக்கத்திற்குச் சென்று Enter பட்டனை அழுத்தினால் “முதன்மை டிராயர்” பட்டன் விரிவாக்கப்படும்.
  2. “பிற கேலெண்டர்கள்” பட்டன் வரும் வரை Tab பட்டனை அழுத்தவும்.
    • “பிற கேலெண்டர்கள்” பட்டன் சுருக்கப்பட்டிருந்தால் Enter பட்டனை அழுத்தவும்.
  3. Tab பட்டனை அழுத்தி “பிற கேலெண்டர்களைச் சேர்” பட்டனுக்குச் சென்று Enter பட்டனை அழுத்தவும்.
  4. ஏதேனும் ஒரு மெனு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க, மேல்நோக்கிய அல்லது கீழ்நோக்கிய அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும்:
    • குழுசேர்தல்
    • உலாவுதல்
    • உருவாக்குதல்
  5. கேலெண்டரைச் சேர்க்க Enter பட்டனை அழுத்தவும்.
  6. முதல் கேலெண்டருக்குச் செல்ல Tab பட்டனை அழுத்தவும்.
  7. உங்களுக்குத் தேவையான கேலெண்டரைக் கண்டறிய கீழ்நோக்கிய அம்புக்குறி பட்டனைப் பயன்படுத்தவும்.
  8. கேலெண்டரைக் காட்டவோ மறைக்கவோ Space பட்டனை அழுத்தவும்.
  9. கூடுதல் விருப்பங்களுக்கு Tab பட்டனை அழுத்தவும்.

தொடர்புடைய தகவல்கள்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
10843786744204116153
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
88
false
false