Google Calendar அறிவிப்புகளை மாற்றுதல்

வரவிருக்கும் நிகழ்வுகள் பற்றி உங்களுக்கு நினைவூட்ட உங்கள் மொபைல், கம்ப்யூட்டர், மின்னஞ்சல் மூலம் அறிவிப்புகளைப் பெறலாம். ஒரு நிகழ்வுக்கான/பல நிகழ்வுகளுக்கான அறிவிப்பு அமைப்புகளை மாற்றலாம்.

அறிவிப்பு அமைப்புகளை மாற்றுதல்

நிகழ்வு அறிவிப்புகளை இவ்வாறு பெறலாம்:

  • மின்னஞ்சல்கள்.
  • உங்கள் வலை உலாவிகளுக்கு வெளியே காட்டப்படும் டெஸ்க்டாப் அறிவிப்புகள். உங்கள் கேலெண்டர் திறந்த நிலையில் இருக்க வேண்டும்.
  • உங்கள் Google Calendar சாளரத்தில் காட்டப்படும் விழிப்பூட்டல்கள்.

உதவிக்குறிப்பு: Google Calendarரைப் பயன்படுத்தாத பயனர்கள் அழைக்கப்பட்ட நிகழ்வுகள் உருவாக்கப்படும்போதும் புதுப்பிக்கப்படும்போதும் நீக்கப்படும்போதும் அதுகுறித்து அவர்களுக்கு Google Calendar மின்னஞ்சல் அறிவிப்புகளை அனுப்பும்.

அறிவிப்புகளை இயக்குதல் அல்லது முடக்குதல்

எல்லா நிகழ்வுகளுக்கும்

கவனத்திற்கு: அறிவிப்பு அமைப்புகளை மாற்ற, Google Chrome, Safari போன்ற இணைய உலாவியில் Google Calendarரைத் திறக்க வேண்டும். அறிவிப்புகளைக் காட்ட calendar.google.comமை அனுமதிக்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம்.

உங்கள் எல்லா நிகழ்வுகளுக்குமான அறிவிப்பு விருப்பத்தேர்வுகளை Google Calendarரில் மாற்றலாம்.

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை அமைப்புகள் கிளிக் செய்து அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இடதுபுறத்தில் உள்ள பொது” என்பதற்குக் கீழ் அறிவிப்பு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “அறிவிப்பு அமைப்புகள்” என்பதற்குச் சென்று நீங்கள் இவற்றைச் செய்யலாம்:
    • அறிவிப்புகளை இயக்குதல் அல்லது முடக்குதல்: அறிவிப்புகள் கீழ் தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து அறிவிப்புகளை எப்படிப் பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • ஒத்திவைத்த அறிவிப்புகளின் நேரத்தை மாற்றுதல்: “டெஸ்க்டாப் அறிவிப்புகள்” என்பதை இயக்கி ஒத்திவைத்த அறிவிப்புகளைக் காட்டு என்பதைக் கிளிக் செய்து நேரத்தைப் பிரத்தியேகப்படுத்தவும்.
    • நிகழ்வுக்கு "ஆம்" அல்லது "பங்கேற்கலாம்" எனப் பதிலளித்திருந்தால் மட்டுமே அறிவிப்புகளைப் பெறுதல்:"ஆம்" அல்லது "பங்கேற்கலாம்" என்று பதிலளித்திருந்தால் மட்டும் எனக்குத் தெரிவி என்பதற்கு அருகிலுள்ள பெட்டியில் கிளிக் செய்யவும்.

முக்கியம்: ஒத்திவைத்த அறிவிப்புகள் Google Chrome உலாவியில் மட்டுமே காட்டப்படும். ஒரே நிகழ்விற்குக் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல அறிவிப்பு விழிப்பூட்டல்களைப் பெறுகிறீர்கள் எனில் கடைசி அறிவிப்பில் மட்டுமே ’ஒத்திவை’ விருப்பம் காட்டப்படும்.

ஒற்றை நிகழ்வுகளுக்கு

  1. Google Calendarரைத் திறக்கவும்
  2. நிகழ்வு அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்து, நிகழ்வைத் திருத்து Edit event என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அறிவிப்புகள் என்பதற்கு அடுத்து: 
    • அறிவிப்புகளைத் திருத்த: அறிவிப்பையோ மின்னஞ்சலையோ பெற விரும்பினால் தேர்வுசெய்யவும். எந்தக் கால இடைவெளியில் முன்கூட்டியே விழிப்பூட்டல்கள் பெற விரும்புகிறீர்கள் என்பதை மாற்றலாம்.
    • மற்றொரு வகை அறிவிப்பைச் சேர்க்க: அறிவிப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • அறிவிப்பை அகற்ற: அகற்று அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. பக்கத்தின் மேற்புறத்தில் உள்ள சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: மின்னஞ்சல், டெஸ்க்டாப் விழிப்பூட்டல் அல்லது இந்த இரண்டின் மூலமாகவும் அறிவிக்குமாறு தேர்வுசெய்யலாம். நீங்கள் செய்யும் மாற்றங்கள் நிகழ்விற்கு அழைக்கப்பட்ட எவரையும் பாதிக்காது.

குறிப்பிட்ட கேலெண்டர்களுக்கு

உங்களின் குறிப்பிட்ட கேலெண்டர்களுக்கான அறிவிப்பு விருப்பத்தேர்வுகளை மாற்றிக்கொள்ளலாம்.

  1. Google Calendarரைத் திறக்கவும்
  2. மேல் வலதுபுறத்திலுள்ள அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. இடதுபுறத்தில் "எனது கேலெண்டர்களுக்கான அமைப்புகள்" என்பதற்குக் கீழ், மாற்ற விரும்பும் கேலெண்டரைக் கிளிக் செய்து அதன் பிறகு கேலெண்டர் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. "நிகழ்வு அறிவிப்புகள்" மற்றும் "முழு நாள் நிகழ்வு குறித்த அறிவிப்புகள்” என்பதன் கீழ்: 
    • அறிவிப்புகளைத் திருத்த: அறிவிப்பையோ மின்னஞ்சலையோ பெற விரும்பினால் தேர்வுசெய்யவும். எந்தக் கால இடைவெளியில் முன்கூட்டியே விழிப்பூட்டல்கள் பெற விரும்புகிறீர்கள் என்பதை மாற்றலாம்.
    • மற்றொரு வகை அறிவிப்பைச் சேர்க்க: அறிவிப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • அறிவிப்பை நீக்க: அறிவிப்பை நீக்கு அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

"அறிவிப்புகளை உலாவி ஆதரிக்கவில்லை" பிழை

இந்தப் பிழைச் செய்தி காட்டப்பட்டால் நிகழ்விற்கான அறிவிப்புகளைப் பெற, உங்கள் உலாவியைப் புதுப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு கிடைக்கவில்லையா?
  • உங்கள் கேலெண்டரில் அறிவிப்புகளை இயக்கியுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். மேலே உள்ள படிகளைப் பின்பற்றவும்.
  • உங்கள் உலாவியின் அனுமதி அமைப்புகளில் ’அறிவிப்புகளைக் காட்டு’ விருப்பத்தைத் தேர்வுசெய்துள்ளீர்களா என்பதைச் சரிபார்க்கவும். அவ்வாறு செய்யவில்லை எனில் டெஸ்க்டாப் அறிவிப்புகளை இயக்கவும்.
  • உங்கள் இணைய உலாவியில் Google Calendar திறந்த நிலையில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

Google Chrome

  1. Google Chromeமைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்திலுள்ள மேலும் மேலும் அதன் பிறகுஅமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. ​பக்கத்தின் கீழ்ப்புறத்தில் உள்ள மேம்பட்டவை ஐகானை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.​
  4. தனியுரிமையும் பாதுகாப்பும் அதன் பிறகு தள அமைப்புகள் அதன் பிறகு அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. "அனுமதி" என்பதற்கு அடுத்துள்ள சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. calendar.google.com அதன் பிறகு என்பதை உள்ளிட்டு, சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

பிற எல்லா உலாவிகளுக்கும்

குறிப்பிட்ட வழிமுறைகளை அறிய, உங்கள் உலாவியின் உதவித் தளத்தைப் பார்க்கவும்.

  1. வலை உலாவியைத் திறக்கவும்.
  2. உலாவியின் அறிவிப்பு விருப்பத்தேர்வுகளுக்குச் செல்லவும்.
  3. calendar.google.comமிற்கான அனுமதிகளைச் சேர்க்கவும்.

கவனத்திற்கு: உங்கள் கேலெண்டருக்கான பொறுப்பை உங்கள் நிறுவனத்தில் உள்ள ஒருவரிடம் ஒப்படைத்தால், கேலெண்டரில் அவர் நிகழ்வை மாற்றும்போது அது குறித்த அறிவிப்பைப் பெறமாட்டீர்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
12558755856859076050
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
88
false
false