கேலெண்டரை வேறொருவருடன் பகிர்தல்

கவனத்திற்கு: உங்கள் கேலெண்டரைப் பகிரும்போதும் மற்றவர்கள் எவற்றை அணுகலாம் என்பதைத் தேர்வுசெய்யும்போதும் கவனமாக இருக்கவும். உங்கள் கேலெண்டருக்கான முழு அணுகலைக் கொண்டவர்கள் இவற்றைச் செய்ய முடியும்:

  • அழைப்புகளுக்குப் பதிலளித்தல்
  • நிகழ்வுகளை உருவாக்குதலும் திருத்துதலும்
  • மற்றவர்களுடன் உங்கள் கேலெண்டரைப் பகிர்தல்
  • உங்கள் கேலெண்டரில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து மின்னஞ்சல்களைப் பெறுதல்
  • உங்கள் கேலெண்டரை நீக்குதல்

உதவிக்குறிப்பு: பணி/பள்ளி மூலம் உங்கள் கணக்கு நிர்வகிக்கப்பட்டால் உங்கள் நிறுவனத்தைச் சேராதவருடன் பகிர்வதற்கான அனுமதிகளைக் கணக்கின் நிர்வாகி வரம்பிற்கு உட்படுத்தியோ முடக்கியோ வைத்திருக்கக்கூடும். மேலும் அறிய உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.

கேலெண்டரைப் பகிர்தல்

நீங்கள் உருவாக்கிய எந்தக் கேலெண்டரை வேண்டுமானாலும் பகிரலாம். ஒவ்வொரு கேலெண்டருக்கும் வேறுபட்ட பகிர்தல் அமைப்புகளை அமைத்துக்கொள்ளலாம். புதிய கேலெண்டரை எப்படி உருவாக்குவது என்பதை அறிக.

குறிப்பிட்டவர்களுடன் கேலெண்டரைப் பகிர்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும். Google Calendar ஆப்ஸிலிருந்து கேலெண்டர்களைப் பகிர முடியாது.
  2. இடதுபுறத்தில் “எனது கேலெண்டர்கள்” பிரிவைக் கண்டறியவும். பிரிவை விரிவாக்க, கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  3. பகிர விரும்பும் கேலெண்டரின் மேலே கர்சரைக் கொண்டுசென்று, மேலும் மேலும் அதன் பிறகு அமைப்புகளும் பகிர்வும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “குறிப்பிட்டவர்களுடன் பகிரவும்” என்பதன் கீழ் பிறரைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. நபர்/Google குழுவின் மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்கவும். அவர்களது அனுமதி அமைப்புகளை மாற்ற, கீழ்த்தோன்றும் மெனுவைப் பயன்படுத்தவும். அணுகல் அனுமதிகள் குறித்து மேலும் அறிக.
  6. அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. பெறுநர் தனது பட்டியலில் கேலெண்டரைச் சேர்க்க, மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். வேறொருவரின் கேலெண்டரைச் சேர்ப்பது எப்படி என்பதை அறிக.

உதவிக்குறிப்பு: உங்களுக்குச் சொந்தமில்லாத கேலெண்டரைப் பகிர, “மாற்றங்களைச் செய்வதற்கும் பகிர்தலை நிர்வகிப்பதற்கும்” தேவையான அனுமதியை வழங்குமாறு அந்த உரிமையாளரிடம் கேட்க வேண்டும்.

கேலெண்டரைப் பொதுவில் பகிர்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும். Google Calendar ஆப்ஸிலிருந்து கேலெண்டர்களைப் பகிர முடியாது.
  2. இடதுபுறத்தில் “எனது கேலெண்டர்கள்” பிரிவைக் கண்டறியவும். பிரிவை விரிவாக்க, கீழ்நோக்கிய அம்புக்குறியைக் கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  3. பகிர விரும்பும் கேலெண்டரின் மேலே கர்சரைக் கொண்டுசென்று, மேலும் மேலும் அதன் பிறகு அமைப்புகளும் பகிர்வும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “அணுகல் அனுமதிகள்" என்பதன் கீழே உள்ள அனைவரும் அணுக அனுமதி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. “அனைவரும் அணுக அனுமதி” என்பதற்கு அடுத்துள்ள கீழ்த்தோன்றும் மெனுவில் நீங்கள் வழங்க விரும்பும் அணுகல் நிலையைத் தேர்வுசெய்யவும். அணுகல் அனுமதிகள் குறித்து மேலும் அறிக.

உதவிக்குறிப்பு: உங்கள் கேலெண்டரைப் பொதுவானதாக மாற்றினால் மட்டுமே Google Calendar இல்லாதவர்களும் அதைக் கண்டறிய முடியும். பொதுவில் பகிர்தல் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் நிறுவனத்தில் உள்ள அனைவருடனும் கேலெண்டரைப் பகிர்தல்

உங்கள் பணி, பள்ளி அல்லது பிற நிறுவனக் கணக்கின் மூலம் Google Calendarரைப் பயன்படுத்தினால் நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் உங்கள் கேலெண்டரைக் கிடைக்கச் செய்யும் விருப்பம் “அணுகல் அனுமதிகள்” என்பதன் கீழ் காட்டப்படும். அணுகல் அனுமதிகள் குறித்து மேலும் அறிக.

இந்த அமைப்பு எப்படிச் செயல்படுகிறது?

உங்கள் கேலெண்டர் மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல்

பகிர்ந்த கேலெண்டர்களுக்கான அனுமதி அமைப்புகளைப் புரிந்துகொள்ளுங்கள்
கேலெண்டரை ஒருவருடன் பகிரும்போது, அவர்கள் உங்கள் நிகழ்வுகளை எப்படிக் கண்டறியலாம் என்பதையும் அவர்களும் நிகழ்வுகளைச் சேர்த்தல், திருத்துதல் போன்ற மாற்றங்களைச் செய்ய முடியுமா என்பதையும் தேர்வுசெய்யலாம்.

அணுகல் அனுமதிகள்

அனுமதியைப் பயன்படுத்தி பிறர் செய்யக்கூடியவை

ஓய்வு/பணிமிகுதி மட்டும் பார்க்கலாம் (விவரங்களை மறை)

  • உங்கள் கேலெண்டரில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள மற்றும் ஓய்வாகவுள்ள நேரங்களைப் பார்க்கலாம். ஆனால் உங்கள் நிகழ்வுகளின் பெயர்களையோ விவரங்களையோ பார்க்க முடியாது.

அனைத்து நிகழ்வு விவரங்களையும் பார்த்தல்

  • பின்வருபவைத் தவிர அனைத்து நிகழ்வுகளின் விவரங்களையும் கண்டறிலாம்:
    • தனிப்பட்டவை என்று குறிக்கப்பட்ட நிகழ்வுகளின் விவரங்களைப் பார்க்க முடியாது.
    • "கெஸ்ட் பட்டியலைக் காட்டு" என்பதற்கு அனுமதி இல்லாத கெஸ்ட் பட்டியலின் நிகழ்வுகளைப் பார்க்க முடியாது.
  • கேலெண்டருக்கான நேர மண்டல அமைப்பைக் கண்டறியலாம்.
  • நிகழ்வுகளை உருவாக்கும்போது, மாற்றும்போது, ரத்துசெய்யும்போது, பதிலளிக்கும்போது அல்லது நிகழ்வுகள் வரும்போது மின்னஞ்சல் விழிப்பூட்டல்களைப் பெறுவதற்குக் குழு சேரலாம்.

நிகழ்வுகளில் மாற்றங்கள் செய்யலாம்

  • தனிப்பட்ட நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளுக்குமான விவரங்களைக் கண்டறியலாம்.
  • நிகழ்வுகளைச் சேர்க்கலாம் மாற்றலாம்.
  • கேலெண்டரில் நீக்கியவை ஃபோல்டரில் இருந்து நிகழ்வுகளை மீட்டெடுக்கலாம்/நிரந்தரமாக நீக்கலாம்.
  • கேலெண்டருக்கான நேர மண்டல அமைப்பைக் கண்டறியலாம்.
  • நிகழ்வுகளை உருவாக்கும்போது, மாற்றும்போது, ரத்துசெய்யும்போது, பதிலளிக்கும்போது அல்லது நிகழ்வுகள் வரும்போது மின்னஞ்சல் விழிப்பூட்டல்களைப் பெறுவதற்குக் குழு சேரலாம்.

மாற்றங்களைச் செய்யலாம், பகிர்தலை நிர்வகிக்கலாம்

  • தனிப்பட்ட நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளுக்குமான விவரங்களைக் கண்டறியலாம்.
  • நிகழ்வுகளைச் சேர்க்கலாம் மாற்றலாம்.
  • கேலெண்டரில் நீக்கியவை ஃபோல்டரில் இருந்து நிகழ்வுகளை மீட்டெடுக்கலாம்/நிரந்தரமாக நீக்கலாம்.
  • கேலெண்டருக்கான நேர மண்டல அமைப்பைக் கண்டறியலாம்.
  • பகிர்தல் அமைப்புகளை மாற்றலாம்.
  • நிகழ்வுகளை உருவாக்கும்போது, மாற்றும்போது, ரத்துசெய்யும்போது, பதிலளிக்கும்போது அல்லது நிகழ்வுகள் வரும்போது மின்னஞ்சல் விழிப்பூட்டல்களைப் பெறுவதற்குக் குழு சேரலாம்.
  • அந்தக் கேலெண்டரை நிரந்தரமாக நீக்கலாம்.

உதவிக்குறிப்புகள்

  • பணி/பள்ளி மூலம் உங்கள் கணக்கு நிர்வகிக்கப்பட்டால் அனுமதி அமைப்புகளை உங்கள் கணக்கின் நிர்வாகி வரம்பிற்கு உட்படுத்தியோ முடக்கியோ வைத்திருக்கக்கூடும். மேலும் அறிய உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.
  • Gmailலில் இருந்து வரும், “எனக்கு மட்டும்” என்ற தெரிவுநிலை அமைப்பைக் கொண்டுள்ள நிகழ்வுகள் உங்கள் கேலெண்டரைப் பகிர்ந்துள்ள யாருக்கும் காட்டப்படாது. “மாற்றங்களைச் செய்யலாம்” எனும் அணுகலைக் கொண்டுள்ளவர்களுக்கும் காட்டப்படாது. நிகழ்வுக்கான பகிர்தல் அமைப்புகளையோ Gmail இலிருந்து வரும் நிகழ்வுகளுக்கான இயல்பு அமைப்பையோ நீங்கள் மாற்றினால் தவிர இது மாறாது. 'Gmail இலிருந்து நிகழ்வுகள்' அம்சம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

“அணுகல் அனுமதிகள்” மற்றும் “குறிப்பிட்டவர்களுடன் பகிரவும்” அமைப்புகள்

பகிர்ந்த கேலெண்டரின் அமைப்புகளில் பொதுவான “அணுகல் அனுமதிகள்”, “குறிப்பிட்டவர்களுடன் பகிரவும்’’ தொடர்பான அனுமதிகள் ஆகியவற்றை அமைக்கலாம். இவ்விரண்டில், குறிப்பிட்டவர்களுடன் பகிரும்போது அதிகமான அனுமதிகள் வழங்கப்படுகின்றன.

உதாரணமாக, கேலெண்டரைப் பொதுவில் பகிர்ந்து “எல்லா நிகழ்வு விவரங்களையும் பார்க்கலாம்” என்பதைத் தேர்ந்தெடுத்த பிறகு, கேலெண்டரைக் குறிப்பிட்ட நபருடன் பகிர்ந்து “ஓய்வு/பணிமிகுதி நிலையை மட்டும் பார்க்கலாம்” என்பதைத் தேர்ந்தெடுத்தாலும் அந்த நபரால் உங்களின் அனைத்து நிகழ்வு விவரங்களையும் பார்க்க முடியும்.

தனிப்பட்ட நிகழ்வுக்கான தெரிவுநிலை அமைப்புகளை மாற்றுதல்
உங்கள் கேலெண்டரில் உள்ள அதே அணுகல் அனுமதிகளே உங்கள் நிகழ்விலும் இருக்கும். இருப்பினும் ஒவ்வொரு நிகழ்வுக்கான தெரிவுநிலையையும் நீங்கள் மாற்றலாம். நிகழ்வுக்கான தெரிவுநிலை அமைப்பை மாற்றுவது குறித்து மேலும் அறிக.

கேலெண்டர் பகிர்தலை முடக்குதல்

உங்கள் கேலெண்டரைப் பொதுவில் பகிர்வதை நிறுத்துதல்
  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. இடதுபுறத்தில் "எனது கேலெண்டர்கள்" பிரிவைக் கண்டறியவும். இந்தப் பிரிவை விரிவாக்க, கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்ய வேண்டியிருக்கலாம்.
  3. பகிர்வை நீக்க விரும்பும் கேலெண்டரின் மேலே கர்சரைக் கொண்டுசென்று, மேலும் மேலும் அதன் பிறகு அமைப்புகளும் பகிர்வும் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • பொதுவில் பகிர்வதை நிறுத்த: “அணுகல் அனுமதிகள்” என்பதன் கீழ் பொதுவில் பகிர்வதை அனுமதி என்பதை முடக்கவும்.
    • உங்கள் நிறுவனத்துடன் பகிர்வதை நிறுத்த: “அணுகல் அனுமதிகள்” என்பதன் கீழ் எனது நிறுவனத்துடன் பகிர அனுமதி என்பதை முடக்கவும்.
    • குறிப்பிட்டவர்களுடன் பகிர்வதை நிறுத்த: “குறிப்பிட்டவர்களுடன் பகிரவும்” என்பதன் கீழ், அகற்ற விரும்புபவருக்கு அடுத்துள்ள 'அகற்று' அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்பு: பல கேலெண்டர்களைப் பகிர்கிறீர்கள் எனில் பகிர்வதை நிறுத்த விரும்பும் மற்ற கேலெண்டர்களுக்கும் இதே போன்று செய்யவும்.

பகிர்தல் தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்தல்

நீங்கள் கேலெண்டரைப் பகிர்ந்துள்ள நபரால் கேலெண்டரைக் கண்டறிய முடியவில்லை என்றால்
  1. சரியான மின்னஞ்சல் முகவரியைச் சேர்த்துள்ளீர்களா என்று பார்க்கவும்.
  2. மின்னஞ்சலில் பெற்ற இணைப்பைத்தான் அவர்கள் கிளிக் செய்கிறார்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளவும். அவர்களால் மின்னஞ்சலைக் கண்டறிய முடியாவிட்டால் அவர்களது ஸ்பேம் கோப்புறையில் பார்க்க வேண்டும்.
  3. கேலெண்டரின் பகிர்தல் அமைப்புகளிலிருந்து அவரை அகற்றிவிட்டு மீண்டும் சேர்க்கவும்.
  4. பணி/பள்ளி மூலம் உங்கள் கணக்கு நிர்வகிக்கப்படுகிறதா என்று பார்க்கவும். நிறுவனத்தைச் சேராதவர்களுடன் பகிர்வதற்கான அனுமதிகளை உங்கள் கணக்கின் நிர்வாகி வரம்பிற்கு உட்படுத்தியோ முடக்கியோ வைத்திருக்கக்கூடும். உங்கள் நிர்வாகியைக் கண்டறிவது எப்படி என்பதை அறிக.

தொடர்புடைய தகவல்கள்

 
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
18046283541515937276
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
88
false
false