Google Calendarரை வெவ்வேறு நேர மண்டலங்களில் பயன்படுத்துதல்

உங்கள் நேர மண்டலங்களை மாற்றவும் குறிப்பிட்ட நேர மண்டலங்களில் நிகழ்வுகளை உருவாக்கவும் முடியும். நிகழ்வு நடக்கும்போது பயணம் செய்துகொண்டிருப்பீர்கள் எனில் அல்லது வெவ்வேறு நேர மண்டலங்களைச் சேர்ந்தவர்களுக்காக நிகழ்வுகளை உருவாக்குகிறீர்கள் எனில் இது உதவிகரமாக இருக்கும்.

உங்கள் நேர மண்டலத்தை மாற்றவும் குறிப்பிட்ட நேர மண்டலங்களில் நிகழ்வுகளை உருவாக்கவும் முடியும். நிகழ்வை எங்கு உருவாக்கினாலும் அனைவரும் அதை அவர்களது சொந்த நேர மண்டலத்தில் பார்ப்பார்கள். இது உலகெங்கும் உள்ளவர்கள் பயணங்களைத் திட்டமிட உதவுவதுடன், நிகழ்வுகளை எளிதாக உருவாக்கவும் வழிவகுக்கிறது.

ஒரு பணியை உருவாக்கிய பின்னர் Calendarரின் நேர மண்டலத்தை மாற்றினால் Tasks அந்த நேர மண்டலத்திற்கு ஏற்ப மாறும். உதாரணமாக, நீங்கள் டென்வரிலிருந்து நியூயார்க்கிற்குப் பயணம் செய்தால் 9 AM MTக்கு அமைக்கப்பட்டிருக்கும் பணி 11 AM ETக்கு மாறும்.

நேர மண்டலத்தை மாற்றுதல்

நீங்கள் வேறு நேர மண்டலத்திற்குப் பயணித்தால் உங்கள் கேலெண்டரை அந்த உள்ளூர் நேரத்தில் பார்க்க முடியும்.

கவனத்திற்கு: நீங்கள் உரிமையாளர் இல்லை என்றால் உங்களால் கேலெண்டரின் நேர மண்டலத்தை மாற்ற முடியாது.

அனைத்துக் கேலெண்டர்களுக்கும் நேர மண்டலத்தை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “நேர மண்டலம்” என்ற பிரிவில் உள்ள முதன்மை நேர மண்டலம் கீழ்நோக்கிய அம்புக்குறி அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்து உங்கள் நேர மண்டலத்தைத் தேர்வுசெய்யவும்.

ஒரு கேலெண்டரின் நேர மண்டலத்தை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்
  2. இடதுபக்கத்தில் எனது கேலெண்டர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் மாற்ற விரும்பும் கேலெண்டரின் மீது கர்சரை வைத்து, மேலும் மேலும் அதன் பிறகு அமைப்புகளும் பகிர்வும் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. “கேலெண்டர் அமைப்புகள்” என்ற பிரிவில் உள்ள நேர மண்டலம் கீழ்நோக்கிய அம்புக்குறி அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்து உங்கள் நேர மண்டலத்தைத் தேர்வுசெய்யவும்.

பிற நேர மண்டலங்களைப் பயன்படுத்துதல்

பிற நேர மண்டலங்களைப் பார்த்தல்

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபக்கம் உள்ள அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. “நேர மண்டலம்” என்ற பிரிவில் உள்ள இரண்டாம் நிலை நேர மண்டலத்தைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. இரண்டாம் நிலை நேர மண்டலம் கீழ்நோக்கிய அம்புக்குறி அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்து உங்கள் நேர மண்டலத்தைத் தேர்வுசெய்யவும்.

வேறொரு நேர மண்டலத்தில் நிகழ்வை உருவாக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. மேல் இடதுபுறத்தில் நிகழ்வை உருவாக்கு கேள்வியைச் சேர் அதன் பிறகு மேலும் விருப்பங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நிகழ்வின் நேரத்திற்கு அடுத்துள்ள நேர மண்டலம் என்பதைக் கிளிக் செய்து நேர மண்டலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. உங்கள் நிகழ்வின் விவரங்களை நிரப்பவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

நிகழ்வுக்கான நேர மண்டலத்தை மாற்றுதல்

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. நிகழ்வைக் கிளிக் செய்து அதன் பிறகு திருத்து திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. நிகழ்வின் நேரத்திற்கு அடுத்துள்ள நேர மண்டலம் அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்து உங்கள் நேர மண்டலத்தைத் தேர்வுசெய்யவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உலகக் கடிகாரத்தை இயக்குதல்

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. மேல் வலதுபக்கம் உள்ள அமைப்புகள் அமைப்புகள் அதன் பிறகு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. "உலகக் கடிகாரம்" என்பதில் உலகக் கடிகாரத்தைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நேர மண்டலத்தைச் சேர் அதன் பிறகு என்பதைக் கிளிக் செய்து நீங்கள் பார்க்க விரும்பும் நேர மண்டலங்களைத் தேர்வுசெய்யவும். 

பகலொளிச் சேமிப்பு நேரம்

பகலொளிச் சேமிப்பு நேரம் தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க, கோஆர்டினேட்டடு யுனிவர்சல் டைமை (UTC) Google Calendar பயன்படுத்துகிறது.

நிகழ்வுகளை உருவாக்கும்போது அவை UTCக்கு மாற்றப்படும். இருப்பினும், அவை எப்போதும் உங்கள் உள்ளூர் நேரத்திலேயே காட்டப்படும்.

ஒரு பகுதி அதன் நேர மண்டலத்தை மாற்றினால் அந்த மாற்றம் குறித்து நாம் அறிவதற்கு முன்பாக உருவாக்கப்பட்ட நிகழ்வுகள் தவறான நேர மண்டலத்தில் இருக்கக்கூடும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
17417000899872527491
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
88
false
false