நிகழ்வு தொடர்பான தனியுரிமை அமைப்புகளை மாற்றுதல்

கேலெண்டரைப் பகிர்ந்தால் உங்கள் கேலெண்டரிலுள்ள அதே தனியுரிமை அமைப்புகளே நிகழ்வுகளிலும் இருக்கும். நீங்கள் விரும்பினால், சில நிகழ்வுகள் குறித்து பிறர் பார்க்கக்கூடிய விஷயங்களை மாற்றலாம்.

நிகழ்விற்கான தனியுரிமை அமைப்புகளை மாற்றுதல்

நீங்கள் கேலெண்டரை யாருடனும் பகிரவில்லை எனில் இந்த அமைப்புகள் உங்களுக்குக் காட்டப்படாமல் இருக்கக்கூடும்.

  1. கம்ப்யூட்டரில் Google Calendarரைத் திறக்கவும்.
  2. அமைப்புகளை மாற்ற விரும்பும் நிகழ்வைத் திறக்கவும்.
  3. இயல்பான தெரிவுநிலை என்பதைக் கிளிக் செய்து, நிகழ்விற்கான தனியுரிமை அமைப்பைத் தேர்வுசெய்யவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உதவிக்குறிப்புகள்:

  • ஏற்கெனவே இருக்கும் நிகழ்வில் செய்யப்படும் மாற்றங்கள் உங்கள் கேலெண்டரிலும் செய்யப்படும். ஆனால் பின்வரும் மாற்றங்களை நீங்கள் செய்தால் அது விருந்தினர்களின் கேலெண்டரில் மாற்றத்தை ஏற்படுத்தாது:
    • தனியுரிமை அமைப்புகளை "தனிப்பட்டது" என்பதிலிருந்து "பொது" என்பதற்கு மாற்றுதல்.
    • தெரிவுநிலை அமைப்புகளை "ஓய்வு" என்பதிலிருந்து "பணிமிகுதி" என்பதற்கு மாற்றுதல்.
  • நிகழ்வின் தலைப்பை ரகசியமாக்க, ஒருங்கிணைப்பாளர் நிகழ்வை "தனிப்பட்டது" என்று அமைக்க வேண்டும்.
    • ஒரு ரகசிய நிகழ்வு “பொது” என்று அமைக்கப்பட்டுள்ளதாக நீங்கள் நினைத்தால், நிகழ்வை “தனிப்பட்டது" என்று மாற்ற ஒருங்கிணைப்பாளரைத் தொடர்புகொள்ளவும்.

முழுக் கேலெண்டருக்கும் தனியுரிமை அமைப்புகளை மாற்ற, உங்கள் கேலெண்டரை எப்படிப் பகிர்வது அல்லது பகிர்வை நீக்குவது என்பதைப் பற்றி அறியவும்.

தனியுரிமை அமைப்புகள்

நிகழ்வு தொடர்பாகக் கிடைக்கும் அமைப்புகள் குறித்து மேலும் அறிய, உங்கள் கேலெண்டர் பகிரப்பட்டிருக்கும் விதத்தைத் தேர்வுசெய்யவும்.

எனது கேலெண்டர் யாருடனும் பகிரப்படவில்லை

உங்கள் கேலெண்டர் யாருடனும் பகிரப்படவில்லை என்பதால் நிகழ்வுகளும் பகிரப்பட்டிருக்காது.

நிகழ்விற்கு எந்த அமைப்புகளைத் தேர்வுசெய்தாலும், நிகழ்வு உங்களுக்கு மட்டுமே காட்டப்படும்.

எனது கேலெண்டரைக் குறிப்பிட்ட நபர்களுடன் மட்டுமே பகிர்ந்துள்ளேன்

பிறருடன் உங்கள் கேலெண்டரைப் பகிரும்போது, அவர்கள் இவற்றைச் செய்ய அனுமதிக்கலாம்:

  • ஓய்வு/பணிமிகுதி நிலையை மட்டும் பார்த்தல்
  • எல்லா நிகழ்வு விவரங்களையும் பார்த்தல்
  • நிகழ்வுகளில் மாற்றங்களைச் செய்தல்
  • நிகழ்வுகளில் மாற்றங்களைச் செய்தல் மற்றும் பகிர்தலை நிர்வகித்தல்

இவற்றில் நீங்கள் தேர்வுசெய்யும் விருப்பத்தின் அடிப்படையில், உங்கள் கேலெண்டரை யாருடனெல்லாம் பகிர்ந்துள்ளீர்களோ அவர்கள் நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களை வெவ்வேறு அளவுகளில் பார்க்கலாம்.

ஓய்வு/பணிமிகுதி நிலையை மட்டும் பார்த்தல்

  • இயல்பு: நிகழ்வுகள் "பணிமிகுதி" எனக் காட்டப்படும்.
  • பொது: உங்கள் கேலெண்டரை யாருடனெல்லாம் பகிர்ந்துள்ளீர்களோ அவர்களால் நிகழ்வுகளின் அனைத்து விவரங்களையும் பார்க்க முடியும்.
  • தனிப்பட்டது: நிகழ்வுகள் "பணிமிகுதி" எனக் காட்டப்படும்.

எல்லா நிகழ்வு விவரங்களையும் பார்த்தல்

  • இயல்புநிலை: உங்கள் கேலெண்டரை நீங்கள் யாருடனெல்லாம் பகிர்ந்துள்ளீர்களோ அவர்கள் நிகழ்வுகளின் அனைத்து விவரங்களையும் பார்க்கலாம்.
  • பொது: உங்கள் கேலெண்டரை யாருடனெல்லாம் பகிர்ந்துள்ளீர்களோ அவர்களால் நிகழ்வுகளின் அனைத்து விவரங்களையும் பார்க்க முடியும்.
  • தனிப்பட்டது: நிகழ்வுகள் "பணிமிகுதி" எனக் காட்டப்படும்.

'நிகழ்வுகளில் மாற்றங்களைச் செய்தல்' அல்லது 'நிகழ்வுகளில் மாற்றங்களைச் செய்தல் மற்றும் பகிர்தலை நிர்வகித்தல்'

இயல்புநிலை, பொது, தனிப்பட்டது ஆகிய அமைப்புகளில் உங்கள் கேலெண்டரை யாருடனெல்லாம் பகிர்ந்துள்ளீர்களோ அவர்களால் நிகழ்வு விவரங்கள் அனைத்தையும் பார்க்கவும் மாற்றவும் முடியும்.

எனது கேலெண்டரைத் தனிப்பட்டது என அமைத்துள்ளேன் & ஓய்வு/பணிமிகுதி நிலையை மட்டுமே பயனர்கள் பார்க்க முடிகிறது
  • இயல்பு: நிகழ்வுகள் "பணிமிகுதி" எனக் காட்டப்படும்.
  • பொது: அனைத்து நிகழ்வு விவரங்களையும் அனைவராலும் பார்க்க முடியும்.
  • தனிப்பட்டது: நிகழ்வுகள் "பணிமிகுதி" எனக் காட்டப்படும்.
எனது கேலெண்டரைப் பொது என அமைத்துள்ளேன் & அனைத்து நிகழ்வு விவரங்களையும் பிறர் பார்க்க முடியும்
  • இயல்பு: அனைத்து நிகழ்வு விவரங்களையும் அனைவராலும் பார்க்க முடியும்.
  • பொது: அனைத்து நிகழ்வு விவரங்களையும் அனைவராலும் பார்க்க முடியும்.
  • தனிப்பட்டது: நிகழ்வுகள் "பணிமிகுதி" எனக் காட்டப்படும்.

Gmail இலிருந்து நிகழ்வுகள்

  • உங்கள் கேலெண்டரை மற்றொருவருடன் பகிர்ந்து இருந்தாலும், Gmailலில் இருந்து கேலெண்டரில் தானாகச் சேர்க்கப்படும் நிகழ்வுகளை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும்.
  • மற்றவர்கள் அதைப் பார்க்க வேண்டுமெனில், நிகழ்விற்கான தனியுரிமை அமைப்புகளை மாற்றுவதற்கு மேலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  • பணி/பள்ளிக் கணக்கு மூலம் Calendarரைப் பயன்படுத்தினால், Gmail இலிருந்து சேர்க்கப்படும் நிகழ்வுகளை உங்கள் நிர்வாகியால் பார்க்க முடியும்.

Gmail இலிருந்து நிகழ்வுகள் குறித்து மேலும் அறிக.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6272628784376666000
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
88
false
false