கேலெண்டர்களைப் பதிவிறக்கி இணைய இணைப்பு இல்லாமல் ஆஃப்லைனில் பயன்படுத்தலாம். இணைய இணைப்பு மோசமாக இருக்கும்போது இது மிகவும் பயனளிக்கும்.
இணைய இணைப்பு இல்லாமலேயே நீங்கள்:
- Chrome உலாவியில் Google Calendarரைத் திறக்கலாம்.
- கடந்த நான்கு வாரங்களுக்கான கேலெண்டரையும் நிகழ்வுகளையும் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ளவற்றையும் பார்க்கலாம்.
- வாரம், நாள் அல்லது மாதத்தின் அடிப்படையில் நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
டெஸ்க்டாப்பில் Calendarரை ஆஃப்லைனில் பயன்படுத்துதல்
- Google Calendarரைத் திறக்கவும்.
- மேல் வலதுபுறத்தில் உள்ள அமைப்புகள் ஐகானை
கிளிக் செய்து
அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
- இடதுபுறத்தில் 'பொது' என்பதன் கீழ் உள்ள ஆஃப்லைன் என்பதைக் கிளிக் செய்து
ஆஃப்லைன் கேலெண்டரை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது ரெஃப்ரெஷ் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் கேலெண்டர் ஒத்திசைவைத் தொடங்கும், இதன்மூலம் ஆஃப்லைனில் அதைப் பயன்படுத்தலாம். கேலெண்டரின் மேல் வலதுபுறத்தில் உள்ள ஒத்திசை
என்பதைக் காணலாம்.
- ஒத்திசைவு நிறைவடைந்தவுடன், கேலெண்டரின் நிலை 'ஆஃப்லைனில் பயன்படுத்துவதற்குத் தயாராக உள்ளது'
என்று காட்டப்படும்.
- நீங்கள் ஆஃப்லைனில் இருக்கும்போது கேலெண்டரின் நிலை 'ஆஃப்லைன்'
என்று காட்டப்படும்.
- "நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாகத் தெரிகிறது. சில செயல்பாடுகள் வேலை செய்யாமல் போகக்கூடும்" என்ற ஓர் அறிவிப்பு காட்டப்படும்.
- உங்கள் கேலெண்டர் ஒத்திசைவைத் தொடங்கும், இதன்மூலம் ஆஃப்லைனில் அதைப் பயன்படுத்தலாம். கேலெண்டரின் மேல் வலதுபுறத்தில் உள்ள ஒத்திசை
முக்கியம்:
- கம்ப்யூட்டர் கடைசியாக ஆன்லைனில் இருந்த நேரம் வரை கிடைத்த தரவின் மூலம் “எனது கேலெண்டர்கள்” மற்றும் கேலெண்டர் தரவு ஒத்திசைக்கப்படும்.
- ஆஃப்லைனில் இருக்கும்போது இவற்றைச் செய்ய முடியாது:
- நிகழ்வுகளை உருவாக்குதல் அல்லது திருத்துதல்
- விருந்தினர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புதல்
- பணிகளை அணுகுதல்
- கம்ப்யூட்டரின் தற்காலிக நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள படங்களையும் ஃபைல்களையும் நீக்கினால் Google Calendarரை ஆஃப்லைனில் பயன்படுத்த முடியாது. Calendarரை ஆஃப்லைனில் பயன்படுத்த Google Calendarருக்கான ஆஃப்லைன் அணுகலை மீண்டும் இயக்கவும்.