ஆன்லைன் விளம்பரத்தின் மூலம் கூடுதல் வாடிக்கையாளர்களைச் சென்றடையுங்கள்

Googleளில் புதிய வாடிக்கையாளர்களை அடைய ‘ஸ்மார்ட் பிரச்சாரங்களின்’ வழியாக விளம்பரத்தை இயக்கவும்.

Google தேடலிலும் Google Mapsஸிலும் விளம்பரங்கள் வழியாக உங்கள் வணிகத்தை வாடிக்கையாளர்கள் கண்டுபிடிக்க ‘ஸ்மார்ட் பிரச்சாரங்கள்’ பகுதி உதவுகிறது. நீங்கள் வழங்கும் தயாரிப்புகளையோ சேவைகளையோ உங்களுக்கு அருகிலுள்ளவர்கள் தேடும்போது, அவர்களின் தேடல் முடிவுகளுக்கு அடுத்ததாக உங்கள் விளம்பரம் தோன்றுமாறு செய்யலாம். அந்த விளம்பரத்தில் உங்கள் வணிக முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைக் காட்டலாம். மற்ற விளம்பரங்களில் இருந்து உங்கள் மெசேஜைத் தனிப்படுத்திக் காட்ட ஒரு ஐகானையும் சேர்க்கலாம்.

ஸ்மார்ட் பிரச்சாரங்களைப் பெறுவதற்குப் பதிவு செய்யவும்

ஸ்மார்ட் பிரச்சாரங்களின் நன்மைகள்

  • அதிகமான கவன ஈர்ப்பைப் பெறலாம்: உங்கள் வணிகம் குறித்து இதுவரை தெரியாத, வாடிக்கையாளராகக் கூடியவர்களை அடையலாம். உங்கள் தயாரிப்பு, சேவை, வணிக வகை ஆகியவற்றைத் தேடுபவர்களின் கண்ணில் பளிச்சென்று தென்பட ‘ஸ்மார்ட் பிரச்சாரங்கள்’ உதவுகிறது.
  • உள்ளூர்த் தேடல்களில் தனித்துத் தோன்றலாம்: உங்களுக்கு அருகில், வாடிக்கையாளராகக் கூடியவர்கள் நீங்கள் வழங்கும் சேவைகளையோ தயாரிப்புகளையோ தேடும்போது, அவர்களுக்கு உங்கள் விளம்பரத்தைக் காட்டலாம்.
  • கிடைக்கும் பலன்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தவும்: மாதாந்திர பட்ஜெட்டை ஒதுக்கவும், அதை எப்போது வேண்டுமனாலும் மாற்றலாம். வாடிக்கையாளராகும் சாத்தியமுள்ளவர்கள் உங்கள் இணையதளத்தைப் பார்வையிடும்போது அல்லது வணிகத்தை அழைக்கும்போது மட்டுமே கட்டணம் செலுத்துவீர்கள்.
  • குறைந்தபட்ச நேரம் ஒதுக்கினால் போதும்: உங்களுக்கு வேலை செய்வதற்காகவே ‘ஸ்மார்ட் பிரச்சாரங்கள்’ உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் விளம்பரங்களை உங்கள் சார்பாக நாங்கள் தானாகவே நிர்வகித்து உங்கள் பட்ஜெட்டில் இருந்து அதிக மதிப்பைப் பெற்றும் தருவோம்.
  • நிமிடங்களில் விளம்பரம் உருவாக்கலாம்: நீங்கள் வழங்கும் தயாரிப்பு அல்லது சேவையின் வகை குறித்து எங்களிடம் சொல்லுங்கள், விளம்பரம் எழுதுங்கள், பட்ஜெட் ஒதுக்குங்கள். இது போதும், மற்ற காரியங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம். இப்போதே பதிவு செய்யுங்கள்.
ஸ்மார்ட் பிரச்சாரங்களின் உதவியுடன் உங்கள் வணிகத்தை வளர்ச்சியடையச் செய்வது எப்படி என்று மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
1504991674821254496
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99729
false
false
false