Google Business Profileலைப் பாதுகாப்பதற்கான உதவி

உங்கள் Google Business Profileலைப் பாதுகாக்க, இந்தப் படிகளைப் பின்பற்றும்படி வலியுறுத்துகிறோம்.

உங்கள் பிசினஸ் இருப்பிடங்கள் அனைத்தையும் உரிமைகோருதல்

Google Maps மற்றும் Searchசில் உள்ள உங்கள் பிசினஸ் இருப்பிடங்கள் அனைத்திற்கும் உரிமைகோருங்கள். உரிமைகோரப்படாத இருப்பிடங்கள் இருந்தால் உங்கள் பிசினஸ் பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது என்பதையும் அவை ஹைஜேக் செய்யப்படலாம் என்பதையும் நினைவில் கொள்ளவும். Googleளில் உங்கள் Business Profileலை எப்படிச் சேர்ப்பது அல்லது உரிமைகோருவது?.

Business Profile உரிமைகோரப்பட்டதா இல்லையா என்பதைப் பார்க்க:

Google Searchசில்:

  1. கம்ப்யூட்டரில் Google Searchசைத் திறக்கவும்.
  2. உங்கள் பிசினஸின் பெயரைத் தேடவும்.
  3. வலதுபுறத்தில், உங்கள் பிசினஸ் தகவல்களைக் காட்டும் தகவல் பலகத்தைப் பார்க்கவும்:
    1. தகவல் பலகத்தில் "இந்த பிசினஸ் உங்களுடையதா?" அல்லது "இந்த பிசினஸை உரிமைகோருங்கள்" என்ற இணைப்பு இருந்தால், உங்கள் Business Profile இன்னும் உரிமைகோரப்படவில்லை.
    2. "இந்த பிசினஸ் உங்களுடையதா?" என்ற இணைப்பை நீங்கள் கிளிக் செய்யும்போது "இந்த Business Profileலை வேறொருவர் நிர்வகிக்கக்கூடும்" என்று காட்டப்பட்டால், உங்கள் Business Profile உரிமைகோரப்பட்டுவிட்டது
    3. "இந்த பிசினஸ் உங்களுடையதா?" என்ற இணைப்பை நீங்கள் கிளிக் செய்யும்போது "பிசினஸை நிர்வகிப்பதின் மூலம் கருத்துகளுக்குப் பதில் அளியுங்கள், தகவல்களைப் புதுப்பியுங்கள் மேலும் பலவற்றைச் செய்யுங்கள்" என்று காட்டப்பட்டால் உங்கள் சுயவிவரம் இன்னும் உரிமைகோரப்படவில்லை.

Google Mapsஸில்:

  1. கம்ப்யூட்டரில் Google Mapsஸைத் திறக்கவும்.
  2. உங்கள் பிசினஸின் பெயரைத் தேடவும்.
  3. “அறிமுகம்” பக்கத்தில் "இந்த பிசினஸை உரிமைகோருங்கள்" என்பது காட்டப்பட்டால், உங்கள் Business Profile இன்னும் உரிமைகோரப்படவில்லை.

உங்கள் Business Profileலுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல்

உங்கள் Business Profileலுக்கான அணுகல் சிலருக்கு மட்டும் இருந்தால், பாதுகாப்புக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவாக இருக்கும். Business Profileலை நிர்வகிக்க வேண்டிய தேவை இருக்கும் உரிமையாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மட்டுமே அணுகல் வழங்கவும்.

உங்கள் பிசினஸின் உரிமையை உரிமையாளர்களால் திருத்தவோ மாற்றவோ முடியும் என்பதால் அவர்களைத் தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் பிசினஸின் முன்னாள் பணியாளர்களின் சுயவிவரத்திற்கு அணுகல் இருந்தால் அவற்றை அகற்றவும். உங்கள் சுயவிவரத்தை நிர்வகிப்பவருக்கு மின்னஞ்சல் மாற்றுப்பெயரைப் பயன்படுத்தவும். உங்கள் Business Profileலை நிர்வகிக்க மூன்றாம் தரப்பைச் சேர்த்தாலும் உங்களுக்குத் தொடர்ந்து அணுகல் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

உங்கள் Business Profileலுக்கு உரிமையாளராக வேண்டும் என்றோ நிர்வாகியாக வேண்டும் என்றோ வரும் மின்னஞ்சல் கோரிக்கைகளைக் கவனமாகச் சரிபாருங்கள். அணுகல் கோருபவரை உங்களுக்குத் தெரியாவிட்டால் கோரிக்கைகளை அனுமதிக்க வேண்டாம்.

Google ஆள்மாறாட்ட மோசடிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள்

பணம் பெற்றுக்கொண்டு உங்கள் Business Profile குறித்து உதவுவதாக வரும் மொபைல் அழைப்புகள், மின்னஞ்சல்கள், மெசேஜ்கள் போன்றவை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும். Google ஆதரவு அல்லது Google பணியாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் நபர்களும் நிறுவனங்களும் இதில் அடங்கும். இந்தச் சேவைக்கு Google கட்டணம் விதிப்பதில்லை என்பதை நினைவில்கொள்ளவும்.

உதவிக்குறிப்பு: ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்லையோ (OTP) தனிநபர் அடையாள எண்ணையோ (PIN) Google ஒருபோதும் கேட்காது. Business Profileலைப் பராமரிக்க நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டுமென்று Google ஒருபோதும் உங்களிடம் கேட்க முயற்சிக்காது. உங்கள் Business Profileலைச் சரிபார்ப்பது, மீட்டெடுப்பது போன்றவையும் இதில் அடங்கும்.

உங்கள் Business Profileலை நிர்வகிக்க மூன்றாம் தரப்பைப் பயன்படுத்தினாலும், உங்கள் Business Profileலின் உரிமையாளராக உங்களுக்குத் தொடர்ந்து அணுகல் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். உங்களின் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் சுயவிவரத்தின் அம்சங்களை மாற்றுவதும் முடக்குவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழல்களில் நீங்கள் மூன்றாம் தரப்பினருக்கான கொள்கை மீறல் குறித்துப் புகாரளிக்கலாம்.

ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்க சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்

உங்கள் Google கணக்கின் பாதுகாப்பை வலுப்படுத்த, வலிமையான கடவுச்சொற்களைப் பயன்படுத்துங்கள், உங்கள் சாதனங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள், இருபடிச் சரிபார்ப்பை இயக்குங்கள் மற்றும் இணையத்தில் பாதுகாப்பாக உலாவுங்கள். ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

மூன்றாம் தரப்பு நிர்வாகிகள்

எங்கள் கொள்கைகளுக்கு இணங்குதல்

Google Maps, Business Profile ஆகியவற்றுக்கு நீங்கள் வழங்கும் பங்களிப்புகள் உங்கள் உண்மையான அனுபவத்தைப் பிரதிபலிப்பதுடன் எங்களின் கொள்கைகளுக்கு இணங்குவதாகவும் இருக்க வேண்டும். போலி ஈடுபாடும் கொள்கையை மீறும் உள்ளடக்கமும் அனுமதிக்கப்படாது, மேலும் அவை அகற்றப்படும். போலி ஈடுபாடு கண்டறியப்பட்டால், உங்கள் Business Profile இடுகையிடுதல் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படலாம்.

உங்கள் Business Profileலுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைத் தடுக்க, எங்கள் கொள்கைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்துகொள்ளவும்.

தொடர்புடைய தகவல்கள்

மேலும் உதவி தேவையா?

அடுத்து மேற்கொள்ள வேண்டிய இந்தப் படிகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

true
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
5250029173148463632
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
99729
false
false
false