'bx' பிழைகளையும் மற்ற சிக்கல்களையும் சரிசெய்தல்

Bloggerரில் பிழை ஏற்பட்டால், பிழையறிந்து திருத்த கீழ்வரும் படிகளை முயலவும். 

பிழையறிந்து திருத்துதல்

  • Blogger சமூகத்தில் உங்கள் சிக்கலையோ இடுகையையோ தேடவும்.
  • இவை எதுவும் உங்கள் சிக்கலைச் சரிசெய்யவில்லை எனில் பிழையறிந்து திருத்த கீழே உள்ளவற்றில் ஒரு சிக்கலைத் தேர்வுசெய்யவும்.

    உதவிக்குறிப்பு: உங்கள் தீமிலோ கேட்ஜெட்டிலோ மாற்றங்களைச் சேமிக்கும்போது பிழை ஏற்பட்டால் உங்கள் குறியீட்டில் சிக்கல்கள் உள்ளதா என்று சரிபார்க்கவும்.

    மற்ற சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்

    நீக்கிய பின்னரும் உங்கள் வலைப்பதிவு ஆன்லைனில் உள்ளது
    நீங்கள் சமீபத்தில் ஒரு வலைப்பதிவை நீக்கியிருந்தால் அது முழுதும் மறைய சில காலம் ஆகலாம். தற்காலிகச் சேமிப்பகப் பதிப்பை எவ்வாறு அகற்றுவது என்பதைப் பற்றி அறிக.
    உங்களால் ஒரு இடுகையை நீக்க முடியவில்லை
    • வேறு ஒருவர் எழுதிய இடுகையை நீக்க, உங்கள் வலைப்பதிவு நிர்வாகியைத் தொடர்பு கொள்ளவும்.
    • வலைப்பதிவில் ஒரு இடுகை மட்டுமே இருந்தால், ஒரு இடுகையை உருவாக்கி, பின்னர் பழைய இடுகையை நீக்கவும் அல்லது உங்கள் வலைப்பதிவை நீக்கவும்.
    படங்களைப் பதிவேற்றம் செய்ய முடியவில்லை
    • உங்கள் பாப்அப் தடுப்பான் அமைப்புகளில் இவற்றை முயலவும்:
      • பாப்அப் தடுப்பானை முடக்கவும்.
      • Blogger.com இணையதளத்தை அனுமதிப்பெற்ற இணையப் பக்கமாகச் சேர்க்கவும்.
    • ”படங்களைச் சேர்” பெட்டியில் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
    பக்கப்பட்டியானது பக்கத்தின் கீழ்ப்புறத்துக்கு நகரும்
    உங்கள் உள்ளடக்கம் நெடுவரிசையைவிட அகலமாக உள்ளதா என்று பார்க்கவும்.
    கேட்ஜெட் செயல்படவில்லை

    கேட்ஜெட்டை அகற்றுதல்:

    1. இடதுபுற மெனுவில் தளவமைப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    2. நீங்கள் அகற்ற விரும்பும் கேட்ஜெட்டில், திருத்து Edit அதன் பிறகு அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
    உங்கள் வலைப்பதிவு வெறுமையாக உள்ளது/குறியீட்டைக் காட்டுகிறது

    உங்கள் தீம் குறியீட்டைச் சரி பார்த்தல்:

    1. இடதுபுற மெனுவில் தீம் என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. வலதுபுறத்தில் உங்கள் வலைப்பதிவின் கீழ் HTMLலைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
    3. குறியீட்டைச் சரிபார்த்து அதைத் திருத்தவும் அல்லது புதிய தீமினைத் தேர்வுசெய்யவும்.
    4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

    உங்கள் தீம் குறியீடு சரியாக இருந்தால் என்கோடிங் சிக்கல்கள் இருக்கலாம்.

    நீங்கள் பயன்படுத்தும் உலாவியின் என்கோடிங் அமைப்புகளை உலாவியில் மாற்ற:

    • Firefox: காட்டு அதன் பிறகு உரை என்கோடிங் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் என்கோடிங் அமைப்புகளைத் தானாகக் கண்டறிதலிலோ யுனிகோடிலோ (UTF-8) அமைக்கவும்.
    • Safari: காட்டு அதன் பிறகு உரை என்கோடிங் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் என்கோடிங் அமைப்புகளைத் தானாகக் கண்டறிதலிலோ யுனிகோடிலோ (UTF-8) அமைக்கவும்.
    • Internet Explorer 11: காட்டு அதன் பிறகு என்கோடிங் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் என்கோடிங் அமைப்புகளைத் தானாகக் கண்டறிதலிலோ யுனிகோடிலோ (UTF-8) அமைக்கவும்.
    உதவிக்குறிப்பு: Google Chromeமிலோ Microsoft Edgeஜிலோ உங்கள் என்கோடிங் அமைப்புகளை மாற்ற முடியாது.

    பிழைகள் தொடர்ந்து ஏற்பட்டால்: உங்கள் Blogger டாஷ்போர்டின் மேல் வலதுபுற ஓரத்தில் உதவி & கருத்து Help and feedback அதன் பிறகு கருத்தை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

    தேடல்
    தேடலை அழிக்கும்
    தேடலை மூடும்
    Google ஆப்ஸ்
    முதன்மை மெனு
    உதவி மையத்தில் தேடுக
    true
    true
    false
    true
    true
    74
    false