உள்ளடக்கத்தை மற்ற தளங்களில் பகிர்தல்

பகிர்தல் பட்டன்களை இயக்கவும்

கவனத்திற்கு: பகிர்தல் பட்டன்களைப் பயன்படுத்துவதற்கு உங்கள் வலைப்பதிவு பொதுவில் இருக்க வேண்டும்.

மின்னஞ்சல் மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பிறர் உங்கள் வலைப்பதிவைப் பகிர்வதை அனுமதிக்க பகிர்தல் பட்டன்களை இயக்கலாம்:

 1. Bloggerரில் உள்நுழையவும்.
 2. மேல் இடதுபுறத்தில் வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. இடதுபுறத்தில் உள்ள மெனுவில் தளவமைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
 4. "பக்கங்களின் உள்ளடக்கம்" பிரிவில் "வலைப்பதிவு இடுகைகள்" என்பதற்கு அடுத்துள்ள திருத்து திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
 5. "பகிர்தல் பட்டன்களைக் காட்டு" என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.

தள ஊட்டங்களைப் பயன்படுத்தி மற்ற இணையதளங்களில் உங்கள் உள்ளடக்கத்தைப் பகிர்தல்

இணைய உள்ளடக்கத்தை நீங்கள் புதுப்பிக்கும்போது தள ஊட்டங்கள் மற்ற வலைத்தளங்களின் பயனர்களுக்கு அதை அறிவிக்கும்.

பகிர வேண்டிய உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுத்தல்

 1. Bloggerரில் உள்நுழையவும்.
 2. மேல் இடதுபுறத்தில் வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. இடதுபுறத்தில் உள்ள மெனுவில் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
 4. "தள ஊட்டம்" என்பதற்குக் கீழ் உள்ள வலைப்பதிவு ஊட்டத்தை அனுமதி என்பதைக் கிளிக் செய்து உள்ளடக்கத்தில் பகிர விரும்பும் அளவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • முழுவதும்: ஒவ்வொரு இடுகையின் உள்ளடக்கம் அனைத்தையும் காட்டலாம்.
  • இடுகையின் சுருக்கம் வரையில்: உங்கள் இடுகையின் சுருக்கத்திற்கு முன் உள்ள உள்ளடக்கத்தைக் காட்டலாம்.
  • சிறியது: ஒவ்வொரு இடுகையின் தொடக்கத்திலிருந்து சிறு பகுதிகளைக் காட்டலாம்.
  • பிரத்தியேகமானது: வலைப்பதிவு இடுகைகள், கருத்து ஊட்டம், இடுகை வாரியான கருத்து ஊட்டம் போன்றவற்றிற்கான மேம்பட்ட விருப்பங்களை அமைக்கலாம்.
  • எதுவுமில்லை: தள ஊட்டத்தை முழுவதுமாக முடக்கலாம்.
 5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Blogger ஊட்டங்களைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தைப் பகிர்தல்

முக்கியம்: தனிப்பட்ட வலைப்பதிவுகளில் தள ஊட்டங்கள் செயல்படாது.

கீழே உள்ள URLகளை ஊட்ட ரீடரில் சேர்த்து உங்கள் வலைப்பதிவைப் பகிரலாம்.

உள்ளடக்கம் அனைத்தையும் பகிர்தல்

முக்கியம்: இந்த URLகளில் blogname என எழுதப்பட்டுள்ள இடத்தில் உங்கள் வலைப்பதிவு முகவரியை எழுதவும்.

முழு தள ஊட்டங்கள் நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படுகின்றன. PubSubHubbub நெறிமுறையைப் பயன்படுத்தித் தாமதம் குறைவான புதுப்பிப்புகளில் டெவெலப்பர்கள் குழுசேரலாம்.

 • Atom 1.0: http://blogname.blogspot.com/feeds/posts/default
 • RSS 2.0: http://blogname.blogspot.com/feeds/posts/default?alt=rss

கருத்துகளைப் பகிர்தல்

முக்கியம்: இந்த URLகளில் blogname என எழுதப்பட்டுள்ள இடத்தில் உங்கள் வலைப்பதிவு முகவரியை எழுதவும்.
 • Atom 1.0: http://blogname.blogspot.com/feeds/comments/default
 • RSS 2.0: http://blogname.blogspot.com/feeds/comments/default?alt=rss
லேபிள்களின்படி இடுகைகளைப் பகிர்தல்

முக்கியம்: இந்த URLகளில் blogname என எழுதப்பட்டுள்ள இடத்தில் உங்கள் வலைப்பதிவின் முகவரியையும் label என எழுதப்பட்டுள்ள இடத்தில் நீங்கள் பகிர்வதற்குப் பயன்படுத்த விரும்பும் லேபிளையும் எழுத வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட லேபிளுக்கான ஊட்டத்தைப் பெற [label] என்பதை மாற்றவும்.

 • Atom 1.0: http://blogname.blogspot.com/feeds/posts/default/-/[label]
 • RSS 2.0: http://blogname.blogspot.com/feeds/posts/default/-/[label]?alt=rss
இடுகை வாரியான கருத்துகளைப் பகிர்தல்

முக்கியம்: இந்த URLகளில் இடுகை வாரியான கருத்துக்களுக்கான ஊட்டத்தைப் பெற, blogname என எழுதப்பட்டுள்ள இடத்தில் உங்கள் வலைப்பதிவின் முகவரியையும் postID என எழுதப்பட்டுள்ள இடத்தில் வலைப்பதிவின் சரியான ஐடியையும் எழுத வேண்டும். 

இடுகை வாரியான கருத்துக்களுக்கு ஊட்டத்தைப் பெற, postID என எழுதப்பட்டுள்ள இடத்தில் உங்கள் இடுகையின் சரியான ஐடியை எழுதவும்.

 • Atom 1.0: http://blogname.blogspot.com/feeds/<postId>/comments/default
 • RSS 2.0: http://blogname.blogspot.com/feeds/postId/comments/default?alt=rss

தனிப்பட்ட இடுகையின் இடுகை ஐடியைக் கண்டறிய:

 1. Bloggerரில் உள்நுழையவும்.
 2. மேல் இடதுபுறத்தில் வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
 3. இடதுபுறம் உள்ள மெனுவில் இடுகைகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
 4. நீங்கள் பகிர விரும்பும் இடுகையின் தலைப்பைக் கிளிக் செய்யவும்.
 5. உலாவியின் முகவரிப் பட்டியில் உங்கள் URL: “www.blogger.com/blog/post/edit/<blogId>/<postId>” எனக் காட்டப்படும்
 6. இரண்டாவது இடுகை ஐடி எண்ணை நகலெடுக்கவும்.

மற்ற ஊட்ட வழங்குநர்களைப் பயன்படுத்தி உள்ளடக்கத்தைப் பகிர்தல்

நீங்கள் FeedBurnerரையோ பிற சேவைகளையோ பயன்படுத்தினால் அமைவை நிறைவுசெய்வதற்கு உங்கள் ஊட்டத்தைத் திசைதிருப்பவும்:

 1. சேவையிலிருந்து தள ஊட்டத்தை நகலெடுக்கவும்.
 2. Bloggerரில் உள்நுழையவும்.
 3. மேல் இடதுபுறத்தில் வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
 4. இடதுபுறத்தில் உள்ள மெனுவில் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
 5. "தள ஊட்டம்" என்பதற்குக் கீழ் உள்ள இடுகை ஊட்ட ரீடைரெக்ட் URL என்பதைக் கிளிக் செய்யவும்.
 6. URLலை ஒட்டவும்.
 7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு