எனது வலைப்பதிவு மறைந்துவிட்டது

உங்கள் Blogger வலைப்பதிவைக் கண்டறிய முடியவில்லையெனில் அதற்குச் சில காரணங்கள் உள்ளன.

It looks like you’re signed out. Sign in to Blogger.

சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்

எனது Blogger கணக்கில் என் வலைப்பதிவைக் கண்டறிய முடியவில்லை

நீக்கப்பட்ட வலைப்பதிவை மீட்டெடுத்தல்

  1. மேலே இடதுபுறத்திலுள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  2. “நீக்கப்பட்ட வலைப்பதிவுகள்” என்பதற்குக் கீழ் நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் வலைப்பதிவைக் கிளிக் செய்யவும்.
  3. நீக்கியதைச் செயல்தவிர் என்பதைக் கிளிக் செய்யவும்.

மீட்டெடுக்கப்பட்ட வலைப்பதிவு “எனது வலைப்பதிவுகள்” பட்டியலில் காட்டப்படும், நீங்கள் அதை இடுகையிடலாம்.

நீக்கப்பட்ட வலைப்பதிவுகள் பட்டியலில் எனது வலைப்பதிவு இல்லை

நீக்கப்பட்ட வலைப்பதிவுகள் பட்டியலில் உங்கள் வலைப்பதிவு இல்லையெனில்:

  • உங்கள் வலைப்பதிவை உருவாக்கப் பயன்படுத்திய அதே Google கணக்கில் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  • உங்கள் வலைப்பதிவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருந்தால் அவர்களிடம் உங்கள் நிர்வாக உரிமையை வேறொரு நிர்வாகி அகற்றினாரா என்பதைக் கேட்டறியவும்.
  • support@blogger.com எனும் முகவரியிலிருந்து உங்களுக்கு மின்னஞ்சல் வந்துள்ளதா எனப் பார்க்கவும். Google உங்கள் வலைப்பதிவை நீக்கியிருந்தால் என்ன நடந்ததென்பது அந்த மின்னஞ்சலில் விளக்கப்பட்டிருக்கும்.

தடைசெய்யப்பட்ட வலைப்பதிவை மதிப்பாய்வு செய்தல்

Bloggerரின் உள்ளடக்கக் கொள்கையையோ Googleளின் சேவை விதிமுறைகளையோ மீறியதற்காக Google உங்கள் வலைப்பதிவை தடைசெய்திருந்தால் “எனது வலைப்பதிவுகள்” பட்டியலில் அந்த வலைப்பதிவின் தலைப்புக்கு அருகில் ஓர் எச்சரிக்கையை Warning நீங்கள் பெறக்கூடும்.

உங்கள் வலைப்பதிவை மதிப்பாய்வு செய்யுமாறு Googleளிடம் கோர:

  1. மேலே இடதுபுறத்திலுள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  2. உங்கள் வலைப்பதிவின் பெயரை கிளிக் செய்யவும்.
  3. உங்கள் உள்ளடக்கத்தில் சாத்தியமான மீறல்கள் ஏதேனும் உள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும்.
  4. மறுபரிசீலனை செய் என்பதைக் கிளிக் செய்யவும். Bloggerரின் கொள்கைகளையோ Googleளின் சேவை விதிமுறைகளையோ உங்கள் வலைப்பதிவு மீறவில்லை என்று நாங்கள் உறுதிசெய்தால் உங்கள் வலைப்பதிவு மீட்டெடுக்கப்படலாம்.
சரியான கணக்கில்தான் உள்நுழைந்திருக்கிறீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்

கணக்குகளுக்கு இடையே மாறுதல்

கவனத்திற்கு: வலைப்பதிவு இடுகைகளை எழுதும்போதோ வலைப்பதிவை நிர்வகிக்கும்போதோ மட்டுமே கணக்குகளுக்கு இடையே மாற முடியும்.

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேல் வலதுபுறத்திலுள்ள உங்கள் சுயவிவரப் படத்தையோ முதலெழுத்தையோ கிளிக் செய்யவும்.
  3. நீங்கள் பயன்படுத்த விரும்பும் கணக்கைக் கிளிக் செய்யவும்.
  4. இந்தக் கணக்கிற்கு ஒரு புதிய சாளரம் திறக்கும்.

கணக்குகளைச் சேர்த்தல்

  1. Bloggerரில் உள்நுழையவும்.
  2. மேல் வலதுபுறத்திலுள்ள உங்கள் சுயவிவரப் படத்தையோ முதலெழுத்தையோ கிளிக் செய்யவும்.
  3. கணக்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் பயன்படுத்த விரும்பும் வேறொரு கணக்கில் உள்நுழையவும்.

பல்வேறு கணக்குகளை நிர்வகிப்பது பற்றி மேலும் அறிக.

தேடல் முடிவுகளில் எனது வலைப்பதிவு காட்டப்படுவதில்லை

கவனத்திற்கு: சமீபத்தில் உங்கள் வலைப்பதிவை மீட்டெடுத்திருந்தாலோ URLலை மாற்றியிருந்தாலோ தேடல் முடிவுகளில் உங்கள் வலைப்பதிவு காட்டப்படுவதற்கு ஒரு நாளுக்கும் மேல் ஆகும்.

என் வலைப்பதிவின் URL வேலை செய்யவில்லை

உங்கள் வலைப்பதிவின் URLலுக்குச் செல்லும்போது அது தோன்றவில்லை எனில்:

பல வலைப்பதிவுகளைப் பார்த்தல்
  1. உங்கள் அனைத்து வலைப்பதிவுகளின் பட்டியலையும் காண, மேல் இடதுபுறத்திலுள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கீழ்நோக்கிய அம்புக்குறி கிளிக் செய்யவும்.
  2. நீங்கள் பார்க்க விரும்பும் வலைப்பதிவைக் கிளிக் செய்யவும்.
தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
false
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
74