ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளில் உள்நுழைதல்

கணக்குகளிலிருந்து வெளியேறி மீண்டும் உள்நுழைய வேண்டிய அவசியம் இல்லாமலேயே பல Blogger கணக்குகளைச் சேர்க்கலாம் கணக்குகளுக்கு இடையே மாறலாம்.

கணக்குகளைச் சேர்த்தல்

 1. Bloggerரில் உள்நுழையவும்.
 2. மேலே வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தையோ முதலெழுத்தையோ கிளிக் செய்யவும்.
 3. கணக்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
 4. பயன்படுத்த விரும்பும் வேறொரு கணக்கில் உள்நுழையவும்.

கணக்குகளுக்கு இடையே மாறுதல்

வலைப்பதிவு இடுகைகளை எழுதும்போதோ வலைப்பதிவை நிர்வகிக்கும்போதோ மட்டுமே கணக்குகளுக்கு இடையே மாற முடியும்.

 1. Bloggerரில் உள்நுழையவும்.
 2. மேலே வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தையோ முதலெழுத்தையோ கிளிக் செய்யவும்.
 3. பயன்படுத்த விரும்பும் கணக்கைக் கிளிக் செய்யவும்.
 4. இந்தக் கணக்கிற்கு ஒரு புதிய சாளரம் திறக்கும்.

வலைப்பதிவைப் பார்த்தல், பின்தொடர்தல் அல்லது அதில் கருத்துத் தெரிவித்தல்

ஒரு வலைப்பதிவைப் பார்க்கும்போது தவறான கணக்கில் உள்நுழைந்திருக்கிறீர்கள் என்பதைக் கவனித்தால் வெளியேறி மீண்டும் உள்நுழைய முயலவும்:

 1. கம்ப்யூட்டரில் Bloggerருக்குச் செல்லவும்.
 2. மேலே வலதுபுறத்தில் உள்ள உங்கள் சுயவிவரப் படத்தையோ முதலெழுத்தையோ கிளிக் செய்யவும்.
 3. வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.
 4. பயன்படுத்த விரும்பும் கணக்கில் உள்நுழையவும்.
 5. நீங்கள் பார்க்கவோ பின்தொடரவோ கருத்துத் தெரிவிக்கவோ விரும்பும் வலைப்பதிவுக்குத் திரும்பிச் செல்லவும்.

நீங்கள் அடிக்கடி கணக்குகளுக்கு இடையில் மாறுவீர்கள் என்றால் Chromeமில் வெவ்வேறு சுயவிவரங்களை எப்படி அமைப்பது என்பதை அறிக.

தேடல்
தேடலை அழிக்கும்
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு
உதவி மையத்தில் தேடுக
true
true
false
true
true
74
false
false