எனது வலைப்பதிவில் உள்நுழைய முடியவில்லை

உங்கள் வலைப்பதிவில் உள்நுழைவதில் சிக்கல் இருந்தால் கீழே உள்ள உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்:

எனது பயனர்பெயரை மறந்துவிட்டேன்

 1. "உள்நுழைவதில் சிக்கல் உள்ளதா?" என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
 2. இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்களுக்குத் தேவையானவை:
  • உங்கள் கணக்கின் முழுப் பெயர்
  • கணக்கிற்கான மீட்பு மின்னஞ்சல் முகவரி அல்லது மீட்பு மொபைல் எண்
 3. இது உங்கள் கணக்குதான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான படிகளைப் பின்பற்றவும்.
  • மீட்பு மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டிருந்தால் Googleளில் இருந்து மின்னஞ்சல் வந்துள்ளதா எனப் பார்க்க அதன் இன்பாக்ஸைப் பார்க்கவும். அந்த மின்னஞ்சலில் வந்த குறியீட்டை உள்ளிடவும்.
  • மீட்பு மொபைல் எண்ணை உள்ளிட்டிருந்தால் அந்த மொபைலிற்கு அனுப்பப்பட்ட குறியீட்டை உள்ளிடவும்.

பொருந்துகின்ற பயனர்பெயர்களின் பட்டியல் காட்டப்படும்.

உங்கள் பயனர்பெயர் காட்டப்படவில்லை எனில்

 • வேறு மீட்பு மின்னஞ்சல் முகவரிகளையோ மொபைல் எண்களையோ பயன்படுத்திப் பார்க்கவும்.
 • உங்கள் பயனர்பெயரில் தட்டச்சுப்பிழை இருக்கக்கூடும்.
 • உங்களிடம் Google கணக்கு இல்லை. கணக்கை உருவாக்குக.

எனது கடவுச்சொல்லை மறந்துவிட்டேன்

 1. கணக்கு உதவிப் பக்கத்திற்குச் செல்லவும்.
 2. இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும். இது உங்கள் கணக்குதான் என்பதை உறுதிப்படுத்த உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும். அதற்கு உங்களால் முடிந்த சிறந்த பதிலை வழங்கவும்.
 3. கடவுச்சொல்லை மீட்டமைக்கவும். இந்தக் கணக்கில் ஏற்கெனவே பயன்படுத்தாத வலிமையான கடவுச்சொல்லைத் தேர்வுசெய்யவும். வலிமையான கடவுச்சொல்லை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி அறிக.

எனது வலைப்பதிவிற்கு நான் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி நினைவில் இல்லை

 1. "பயனர்பெயர் அல்லது கடவுச்சொல் மறந்துவிட்டதா?" என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
 2. உங்கள் வலைப்பதிவின் URLலை உள்ளிடவும்.
 3. உங்கள் வலைப்பதிவுடன் எந்த மின்னஞ்சல் முகவரி இணைக்கப்படுகிறது என்பது குறித்த குறிப்பைப் பெறுவீர்கள். உள்நுழைவதற்கான வழிமுறைகளைக் கொண்ட மின்னஞ்சலையும் பெறுவீர்கள்.
 4. மின்னஞ்சல் வரவில்லை எனில் நீங்கள் தவறான Google கணக்கில் உள்நுழைந்திருக்கலாம்.
 5. உங்கள் மின்னஞ்சல் முகவரிகள் அல்லது மொபைல் எண்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் Google கணக்குகளைப் பார்க்க, எனது கணக்கைக் கண்டறிதல் என்ற பக்கத்தைப் பார்வையிடவும்.

எனது வலைப்பதிவிற்காகப் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியை நீக்கிவிட்டேன்

நீக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் நீங்கள் Bloggerரில் உள்நுழைய முடியலாம்.

 1. Bloggerருக்குச் செல்லவும்.
 2. உங்கள் வலைப்பதிவிற்குப் பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.
 3. உங்களுக்கு நினைவுள்ள கடைசிக் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
 4. உங்கள் வலைப்பதிவிற்கான நிர்வாகியாக செயலிலுள்ள Google கணக்கைச் சேர்க்கவும்.

இன்னும் என்னால் உள்நுழைய முடியவில்லை

வலைப்பதிவுகள் அனைத்திற்கும் குறைந்தபட்சம் நியமிக்கப்பட்ட ஒரு நிர்வாகி இருப்பார். உங்கள் வலைப்பதிவிற்குப் பல நிர்வாகிகள் இருந்து உங்களுக்குத் தற்போது அணுகல் இல்லை எனில் உங்கள் நிர்வாகி உரிமைகளை மீண்டும் பெற, பிற நிர்வாகிகளைத் தொடர்புகொள்ளவும்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு