நீங்கள் உருவாக்கும் வலைப்பதிவு இடுகையில் படங்கள், பிற புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைச் சேர்க்கலாம்.
கவனத்திற்கு:
- வேறொருவர் வழங்கிய உள்ளடக்கத்தை அவரது ஒப்புதலின்றிச் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
- பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தை அங்கீகாரமின்றிப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். Bloggerரின் பதிப்புரிமைக் கொள்கை குறித்து மேலும் தெரிந்துகொள்ளவும்.
- எங்கள் உள்ளடக்கக் கொள்கையை மீறும் உள்ளடக்கத்தைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். சம்பந்தப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல் இடுகையிடப்படும் வெளிப்படையான பாலியல் படமும் வெறுப்பைத் தூண்டும், வன்முறையான, பண்பற்ற உள்ளடக்கமும் இதில் அடங்கும்.
வலைப்பதிவு இடுகையில் படத்தைச் சேர்த்தல்
Bloggerரில் பதிவேற்றும் படங்களை இணையத்திற்கேற்றவாறு சுருக்கலாம். இதன் மூலம், படிப்பவர்களுக்கு டேட்டா உபயோகம் குறையும் மற்றும் படங்கள் விரைவாகக் காட்டப்படும். உங்கள் Google கணக்கின் சேமிப்பக ஒதுக்கீட்டில் இந்தப் படங்கள் சேர்க்கப்படாது. Bloggerரில் பெரிய படங்களை அசல் தரத்தில் சேமிப்பதற்கான வழியேதும் தற்போது இல்லை.
- Bloggerரில் உள்நுழையவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை
கிளிக் செய்யவும்.
- மாற்ற வேண்டிய வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
- படங்களைச் சேர்க்க, புதிய இடுகையை உருவாக்கவும் அல்லது இடுகையைத் திருத்தவும்.
- இடுகை எடிட்டரில் படத்தைச் செருகு
என்பதைக் கிளிக் செய்யவும்.
- பதிவேற்ற விரும்பும் படமிருக்கும் இடத்தைத் தேர்வுசெய்யவும்.
- பதிவேற்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்களைத் தேர்வுசெய்யவும்.
- தேர்ந்தெடுத்தவற்றைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- இடுகையில் படம் சேர்க்கப்பட்டதும் அதன் அளவு, தலைப்பு, பக்கத்தில் உள்ள அதன் சீரமைப்பு ஆகியவற்றை மாற்ற அதைக் கிளிக் செய்யவும்.
Manage your images
படங்கள் அடுக்காகத் திறப்பதை நிறுத்துதல்கவனத்திற்கு: டைனமிக் காட்சிகளை இயக்கியிருந்தால் உங்கள் வலைப்பதிவில் உள்ள படங்களைத் திறக்க முடியாது, அதை முடக்கினால் மட்டுமே திறக்க முடியும்.
இயல்பாக, உங்கள் வலைப்பதிவில் உள்ள படங்கள் லைட்பாக்ஸ் எனப்படும் பெரிய மேல் அடுக்கில் திறக்கப்படும். லைட்பாக்ஸில் படங்கள் திறக்கப்படுவதைத் தவிர்க்க:
- Bloggerரில் உள்நுழையவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை
கிளிக் செய்யவும்.
- மாற்ற வேண்டிய வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
- இடதுபுற மெனுவில் அமைப்புகள்
இடுகைகள், கருத்துகள், பகிர்தல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- "இடுகைகள்" என்பதற்குக் கீழ் “லைட்பாக்ஸ் கொண்டு படங்களைக் காட்சிப்படுத்து" என்பதைக் கண்டறிந்து வேண்டாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
எப்போது வேண்டுமானாலும் ஆல்பத்தின் காப்பகத்திலிருந்து படங்களை நீக்கலாம். ஆல்பத்தின் காப்பகத்திலிருக்கும் வலைப்பதிவு ஆல்பத்திலிருந்து படத்தை நீக்கினால் அது உங்கள் வலைப்பதிவில் இருந்தும் நீக்கப்படும்.
கவனத்திற்கு: தனிப்பட்ட கோப்புறையில் உள்ள படத்தை உங்கள் வலைப்பதிவில் சேர்த்தால் அந்தக் கோப்புறை, ஆல்பத்தின் காப்பகம் ஆகிய இரண்டிலும் படத்தின் நகல் தோன்றக்கூடும். அத்தகைய படத்தை ஆல்பத்தின் காப்பகத்திலிருந்து முற்றிலும் அகற்ற வேண்டுமெனில் தனிப்பட்ட கோப்புறை, ஆல்பத்தின் காப்பகத்தில் உள்ள வலைப்பதிவு ஆல்பம் ஆகிய இரண்டிலிருந்தும் அதை நீக்க வேண்டும்.
வலைப்பதிவில் வீடியோவைச் சேர்த்தல்
- Bloggerரில் உள்நுழையவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை
கிளிக் செய்யவும்.
- மாற்ற வேண்டிய வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
- வீடியோவைச் சேர்க்க, புதிய இடுகையை உருவாக்கவும் அல்லது இடுகையைத் திருத்தவும்.
- இடுகை எடிட்டரில் வீடியோவைச் செருகு
என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் பயன்படுத்த விரும்பும் வீடியோவைத் தேர்வுசெய்யவும்.
வீடியோக்களை நிர்வகித்தல்
உங்கள் வலைப்பதிவில் பதிவேற்றிய அனைத்து வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம், பதிவிறக்கலாம் அல்லது நீக்கலாம்.
- Bloggerரில் உள்நுழையவும்.
- மேல் இடதுபுறத்தில் உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை
கிளிக் செய்யவும்.
- எந்த வலைப்பதிவில் வீடியோக்களை நிர்வகிக்க விரும்புகிறீர்களோ அந்த வலைப்பதிவைக் கிளிக் செய்யவும்.
- இடதுபுற மெனுவில் அமைப்புகள்
மற்றவை என்பதைக் கிளிக் செய்யவும்.
- "இறக்கிக் காப்புப் பிரதி எடு" என்பதற்குக் கீழ் "எனது வலைப்பதிவிலுள்ள வீடியோக்கள்" என்பதைக் கண்டறிந்து வீடியோக்களை நிர்வகியுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் வீடியோ லைப்ரரி புதிய சாளரத்தில் திறக்கப்படும்.
- வீடியோவை நீக்க, நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும். வீடியோவைப் பதிவிறக்க, பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
பதிவேற்றம் தொடர்பான சிக்கல்களைப் பிழையறிந்து திருத்துதல்
படங்களைப் பதிவேற்றுவதில் சிக்கல்கள் இருந்தால் தற்காலிகச் சேமிப்பையும் குக்கீகளையும் அழித்துவிட்டு இந்த வழிமுறைகளை மேற்கொள்ளவும்:
- பாப்-அப் தடுப்பானை முடக்கவும் அல்லது பாப்-அப் தடுப்பான் அமைப்புகளில் Blogger.com என்பதைச் சேர்க்கவும்.
- உலாவியில் நிறுவியிருக்கும் செருகுநிரல்களை முடக்கவும்.
- Google Chrome, Mozilla Firefox, Internet Explorer ஆகியவற்றின் சமீபத்திய பதிப்புகளைப் பயன்படுத்திப் பார்க்கவும்.