வலைப்பதிவைக் காப்புப் பிரதி எடுத்தல் அல்லது இறக்குதல்

உங்கள் வலைப்பதிவின் உள்ளடக்கத்தைக் காப்புப் பிரதி எடுக்கலாம் அதை வேறொரு வலைப்பதிவிலும் பதிவேற்றலாம். உங்கள் வலைப்பதிவை நீக்குவதற்கு முன்னரும் அதைக் காப்புப் பிரதி எடுத்துக்கொள்ளலாம்.

It looks like you’re signed out. Sign in to Blogger.

உங்கள் வலைப்பதிவின் உள்ளடக்கத்தைக் காப்புப் பிரதி எடுத்தல்

உங்கள் வலைப்பதிவின் இடுகைகள், பக்கங்கள், கருத்துகள் ஆகியவற்றின் .xml கோப்பினைப் பெற:

 1. Bloggerரில் உள்நுழையவும்.
 2. மேல் இடதுபுறத்தில், காப்புப் பிரதி எடுக்க விரும்பும் வலைப்பதிவைக் கிளிக் செய்யவும்.
 3. இடதுபுற மெனுவில் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
 4. "வலைப்பதிவை நிர்வகித்தல்" என்பதற்குக் கீழ் உள்ள உள்ளடக்கத்தைக் காப்புப் பிரதி எடு அதன் பிறகு பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

வலைப்பதிவின் தீமினுடைய நகலைச் சேமித்தல்

 1. Bloggerரில் உள்நுழையவும்.
 2. மேல் இடதுபுறத்தில், சேமிக்க விரும்பும் வலைப்பதிவைக் கிளிக் செய்யவும்.
 3. இடதுபுற மெனுவில் தீம் என்பதைக் கிளிக் செய்யவும்.
 4. மேல் வலதுபுறத்தில் ‘மேலும்’ More அதன் பிறகு காப்புப் பிரதி எடு அதன் பிறகு பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் வலைப்பதிவிற்கு இடுகைகளையும் கருத்துக்களையும் இறக்குதல்

முக்கியம்: கோப்பு அளவின் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லையென்றாலும் கோப்புகளை இறக்குவதற்கான எண்ணிக்கை மீது தினசரி வரம்பு உண்டு.

உங்கள் இடுகைகள் & கருத்துகளின் .xml கோப்புகளை இறக்குவதற்கு:

 1. Bloggerரில் உள்நுழையவும்.
 2. மேல் இடதுபுறத்தில், உள்ளடக்கத்தை இறக்க விரும்பும் வலைப்பதிவைக் கிளிக் செய்யவும்.
 3. இடதுபுற மெனுவில் அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
 4. "வலைப்பதிவை நிர்வகித்தல்” என்பதற்குக் கீழ் உள்ள உள்ளடக்கத்தை இறக்கு அதன் பிறகு இறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இறக்கிய உள்ளடக்கம் தானாகவே வெளியிடப்படுவதை நீங்கள் விரும்பவில்லை எனில் இறக்கிய எல்லா இடுகைகளையும் பக்கங்களையும் தானாகவே வெளியிடு என்பதை முடக்கவும்.
 5. கம்ப்யூட்டரிலிருந்து இறக்குவதற்கு விரும்பும் .xml கோப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
 6. திற என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய கட்டுரைகள்

வலைப்பதிவை நீக்குதல் அல்லது மீட்டெடுத்தல்

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
Google ஆப்ஸ்
முதன்மை மெனு